சுஷ்மா ஸ்வராஜுடன் நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் சந்திப்பு : மீனவர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காண வலியுறுத்தல்

சுஷ்மா ஸ்வராஜுடன்  நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் சந்திப்பு : மீனவர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காண வலியுறுத்தல்

சனிக்கிழமை, மார்ச் 18, 2017, டெல்லி : மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தமிழக நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று டெல்லியில் சந்தித்து  மீனவர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காண வலியுறுத்தினார்.  இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப் படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 6-ம் தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற பிரிட்ஜோ (21) என்ற மீனவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைக்

‘இரட்டை இலை’ சின்னம் விவகாரம் : ஓபிஎஸ், சசிகலா அணியினர் 22-ம் தேதி ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவு

‘இரட்டை இலை’ சின்னம் விவகாரம் : ஓபிஎஸ், சசிகலா அணியினர் 22-ம் தேதி ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவு

சனிக்கிழமை, மார்ச் 18, 2017,  டெல்லி : ‘இரட்டை இலை’ சின்னத்துக்கு ஓபிஎஸ், சசிகலா என இரு தரப்பினரும் உரிமை கோருவதால், இரு தரப்பும் 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இதில் சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும்

ஆர்.கே.நகரில் தினகரனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் : மதுசூதனன் சூளுரை

ஆர்.கே.நகரில் தினகரனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் : மதுசூதனன் சூளுரை

வெள்ளிக்கிழமை, மார்ச் 17, 2017, சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று டிடிவி தினகரனை தோற்கடிப்பேன் என்று மதுசூதனன் சூளுரைத்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டார். சென்னையில் நடந்த ஓபிஎஸ் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்’ என்று அறிவித்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், ”நான் ஆர்.கே.நகரில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். என் தொகுதி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டி

வெள்ளிக்கிழமை, மார்ச் 17, 2017, சென்னை : ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளராக மதுசூதனன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் நடந்த ஓபிஎஸ் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் அடுத்த மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும், திமுக சார்பில் மருது கணேஷூம் போட்டியிடுகின்றனர்.இதனிடையே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக மதுசூதனன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் 2017-2018-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

தமிழக சட்டசபையில் 2017-2018-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

வெள்ளிக்கிழமை, மார்ச் 17, 2017, சென்னை : தமிழக பட்ஜெட் 2017 – 2018 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். தமிழக சட்டசபையில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.  இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில்  புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு;- * முதலமைச்சர் மருத்துவ சிகிச்சைகளுக்கான காப்பீடு ரூ.2 லட்சம் உயர்வு. * முதல் தலைமுறை