குடும்ப பிரச்சினையில் சிக்கியுள்ள கருணாநிதியால் மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாது: ராமராஜன் பேச்சு

குடும்ப பிரச்சினையில் சிக்கியுள்ள கருணாநிதியால் மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாது: ராமராஜன் பேச்சு

திங்கள் , மார்ச் 07,2016, பழனியில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க. சார்பில் நடத்தப்பட்டது. இதில் நடிகர் ராமராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:– கடந்த 2011–ம் ஆண்டுக்கு முன்னர் அடையாளம் தெரியாமல் இருந்த விஜயகாந்தை எதிர்கட்சி தலைவராக உயர்த்தியவர் முதல்வர் ஜெயலலிதா. விஜயகாந்த் தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்த பிறகுதான் ஜெயலலிதாவின் அருமை அவருக்கு தெரியவரும். தி.மு.க.வில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என ஆளுக்கு ஒரு வழியில் செயல்படுகின்றனர். இதனால் கருணாநிதி குடும்ப பிரச்சினையில்

தன்னம்பிக்கையுடன் போராடி பெண்கள் சரித்திரம் படைக்க வேண்டும் : மகளிர் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

தன்னம்பிக்கையுடன் போராடி பெண்கள் சரித்திரம் படைக்க வேண்டும் : மகளிர் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

திங்கள் , மார்ச் 07,2016, சர்வதேச மகளிர் தினம், நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அனைத்து மகளிர்க்கும் தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மகளிர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதற்காக அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். அறிவின் உருவாய், ஆற்றலின் வடிவமாய், தாய்மைக்கு இலக்கணமாய் திகழும் பெண்கள், தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும், வாழ்வில் சந்திக்கும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு அவற்றை வெற்றிப்படிகளாக்கி,

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வரலாற்றுச் சாதனையை படைக்கும்: இந்திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு. தமிழரசன்

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வரலாற்றுச் சாதனையை படைக்கும்: இந்திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு. தமிழரசன்

திங்கள் , மார்ச் 07,2016, சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வரலாற்றுச் சாதனையை படைக்கும் என்றார், இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன் எம்எல்ஏ. தருமபுரியில் செய்தி யாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் மேலும் கூறியதாவது; நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றிக்காக பிரசாரம் மேற்கொள்வோம். மாநில அரசு அதிக கடன் வாங்கி விட்டதாக பாமகவினர் தொடர் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கின்றனர். இது அறியாமை. மத்திய அரசின் கடன் வழிகாட்டுதல்களை மீறி மாநில

வரும் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் : இந்திய தேசிய லீக் கட்சி மாநிலத் தலைவர் பஷீர் அகமது

வரும் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் : இந்திய தேசிய லீக் கட்சி மாநிலத் தலைவர் பஷீர் அகமது

திங்கள் , மார்ச் 07,2016, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது என்றும், வரும் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் இந்திய தேசிய லீக் கட்சி தெரிவித்துள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற இந்திய தேசிய லீக் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் திரு. பஷீர் அகமது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைந்துள்ளது என்றும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணியின் கணவர் மறைவுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணியின் கணவர் மறைவுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

திங்கள் , மார்ச் 07,2016, காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.விஜயதரணியின் கணவர் சிவகுமார் கென்னடியின் மறைவுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட இரங்கல் கடிதத்தில், “சிவகுமார் கென்னடி மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன். இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் வழங்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். சிவகுமார் கென்னடியை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்