முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற பிரம்மாண்ட விளையாட்டுத் திருவிழா!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற பிரம்மாண்ட விளையாட்டுத் திருவிழா!

செவ்வாய், மார்ச் 01,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, மதுரை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற பிரம்மாண்ட விளையாட்டுத் திருவிழா நடைபெற்றது. குத்துச்சண்டை, கிரிக்கெட், வாள்சாண்டை உள்ளிட்ட போட்டிகள் ஒரே திடலில் நடைபெற்றது, அனைத்து தரப்பினரையும் வியக்க வைத்தது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா, விளையாட்டுத் துறைக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்கள், வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை, புதிய விளையாட்டு அரங்கங்கள் என எண்ணற்ற திட்டங்களைச்

5 ஆண்டுகளில் ரூ.91,210 கோடிக்கு புதிய முதலீடுகள் பெறப்பட்டுள்ளது: அமைச்சர் ப.மோகன் தகவல்

5 ஆண்டுகளில் ரூ.91,210 கோடிக்கு புதிய முதலீடுகள் பெறப்பட்டுள்ளது: அமைச்சர் ப.மோகன் தகவல்

செவ்வாய், மார்ச் 01,2016, தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையில் 5 ஆண்டுகளில் ரூ.91,210 கோடிக்கு புதிய முதலீடுகள் பெறப்பட்டுள்ளது என தொழிலாளர் நலன், பால் வளத்துறை அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார். மழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுதவி, அரசு மானியம் வழங்கும் விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், உதவிகளை வழங்கி, மோகன் பேசியதாவது: சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, பல்வேறு நலத் திட்டங்களை

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,20,000 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு விரைவில் கைபேசிகள் வழங்க ஏற்பாடு!

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,20,000 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு விரைவில் கைபேசிகள் வழங்க ஏற்பாடு!

செவ்வாய், மார்ச் 01,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவதும் உள்ள சமுதாய சுயஉதவிக்குழு பயிற்றுநர்களுக்கு கைபேசி வழங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் 20 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு கைபேசிகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், சமுதாய சுயஉதவிக்குழு பயிற்றுநர்களுக்கு, “அம்மா கைபேசிகள்” வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இத்திட்டத்தை கடந்த

43 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

43 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

செவ்வாய், மார்ச் 01,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, வருவாய்த் துறையின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டம் – இலுப்பூரில் 1 கோடியே 64 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் குடியிருப்பை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். மேலும், 40 கோடியே 36 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிருவாக அலுவலர் அலுவலகக் கட்டடங்கள், நிலஅளவை மற்றும் நிலவரித் திட்டத்

தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத பட்ஜெட்:முதல்வர் ஜெயலலிதா கருத்து

தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத பட்ஜெட்:முதல்வர் ஜெயலலிதா கருத்து

செவ்வாய், மார்ச் 01,2016, தமிழக மக்களின் மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகளை மத்திய பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை என்று அதிமுக பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: பட்ஜெட்டில் வேளாண்மை, கிராமப்புற வருவாய் அதிகரிக்கும் என்பது வரவேற்கத்தது. அதிலும் விவசாயிகள் வருவாய் இரு மடங்காகும் என்பதை நிஜமாக்க வேண்டும். உணவு, உரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு பணத்தை நேரடியாக வழங்கும் திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்பதற்கு மானியத் தொகையில் சிக்கனம் செய்வதற்காக அல்ல!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசின் மானியத் தொகை வழங்கப்பட்டது

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசின் மானியத் தொகை வழங்கப்பட்டது

திங்கட்கிழமை, பிப்ரவரி 29, 2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவிற்கிணங்க, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த படித்த வேலையற்ற இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், தமிழக அரசின் மானியத் தொகை வழங்கப்பட்டது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் படித்த, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், மானியத்துடன் கூடிய கடனுதவியை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நேற்று

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 300 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6 லட்சம் ஊக்கத்தொகை அமைச்சர் ப. மோகன் வழங்கினார்

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 300 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6 லட்சம் ஊக்கத்தொகை அமைச்சர் ப. மோகன் வழங்கினார்

திங்கட்கிழமை, பிப்ரவரி 29, 2016, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 300 பால் உற்பத்தியாளர்களுக்கு 6 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில், பால் வளத்துறை சார்பில், சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 300 சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு 6 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகைகளை அமைச்சர் திரு. ப. மோகன் வழங்கினார்.