ரூ.424 கோடி மதிப்பிலான 13 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

ரூ.424 கோடி மதிப்பிலான 13 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

திங்கட்கிழமை, பிப்ரவரி 29, 2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சுமார் 424 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அமைக்கப்பட்டுள்ள 13 துணை மின்நிலையங்களை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்தார். மேலும், ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 12,778 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள, ஆயிரத்து 600 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் திட்டத்திற்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தொழிற் வளர்ச்சிக்காகவும் தொலைநோக்கு 2023 திட்டத்தை செயல்படுத்திட முக்கிய காரணியாக விளங்கும் மின்சாரத்தின் தேவை தமிழ்நாட்டில்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 20 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 20 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

திங்கட்கிழமை, பிப்ரவரி 29, 2016, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 20 பேர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வீதம் 60 லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர்  ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம், சிங்கம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. இருளாண்டி

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 260 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 260 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன

திங்கட்கிழமை, பிப்ரவரி 29, 2016, வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்பேரில், வேலைவாய்ப்பினை பெருக்கும் வகையில், சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தனித்துறை நிறுவனங்கள் மூலம் அரக்கோணம், காவேரிபாக்கம், திருப்பத்தூர், காட்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற முகாம்களில், பல்லாயிரக்கணக்கான பயனடைந்துள்ளனர். இந்நிலையில், வேலூர் கிழக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு தொழில்திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை இணைந்து ஆற்காடு நகரில், வேலைவாய்ப்பு முகாமை நடத்தின. இதில்,

புதிய கட்சி தொடங்கி அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் :நாடார் பேரவை மாநிலத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் அறிவிப்பு

புதிய கட்சி தொடங்கி அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் :நாடார் பேரவை மாநிலத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் அறிவிப்பு

திங்கள் , பெப்ரவரி 29,2016, இரு வாரங்களில் புதிய கட்சியைத் தொடங்கி, 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்றார் நாடார் பேரவை மாநிலத் தலைவரும், நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான எர்ணாவூர் ஏ.நாராயணன். திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடார் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து நீக்கிய பிறகு நாடார் பேரவை நிர்வாகிகளையும், எனது ஆதரவாளர்களையும் மாவட்டம்

முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா: 68 ஜோடிகளுக்கு 68 வகையான சீர்வரிசைகளுடன் இலவச திருமணம்

முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா: 68 ஜோடிகளுக்கு 68 வகையான சீர்வரிசைகளுடன் இலவச திருமணம்

திங்கள் , பெப்ரவரி 29,2016, மதுரையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, அதிமுக சார்பில் 68 ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த நாளை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் பாண்டிகோயில் சுற்றுச்சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய

காமராஜரின் கனவு திட்டமான ராமநதி, ஜம்புநதி கால்வாய் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உடனடியாக ரூ.5 கோடியே 40 லட்சம் ஒதுக்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு போராட்டக்குழு நன்றி

காமராஜரின் கனவு திட்டமான ராமநதி, ஜம்புநதி கால்வாய் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உடனடியாக ரூ.5 கோடியே 40 லட்சம் ஒதுக்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு போராட்டக்குழு  நன்றி

திங்கள் , பெப்ரவரி 29,2016, பாவூர்சத்திரம்; ராமநதி ஜம்பு நதி இணைப்பு கால்வாய் போராட்டக்குழு ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் நடந்தது. ராமநதி, ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்துக்கு நிதி ஒதுக்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதுடன், திட்டப்பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று போராட்டகுழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போராட்டக்குழு தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். பொருளாளர் தனராஜ், துணை செயலாளர் செல்வராஜ், குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராமஉதயசூரியன்

சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

திங்கள் , பெப்ரவரி 29,2016, தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க அரசியல் விழிப்புணர்வு மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.