வெள்ளி, பெப்ரவரி 26,2016, ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த பட்ஜெட் தவறிவிட்டதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் டெல்லி-சென்னை இடையே தனி சரக்கு ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் வரவேற்றுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ரயில்வே மூலதன செலவினம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தபட்டு
“உங்கள் சொந்த இல்லம்” திட்டம்: ரூ. 460 கோடியில் சீருடை பணியாளர்களுக்காக 2673 வீடுகள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்
வெள்ளி, பெப்ரவரி 26,2016, காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் சீருடைப் பணியாளர்களுக்காக 459 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2673 வீடுகளை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்து, அவ்வீடுகளை வழங்கிடும் அடையாளமாக 14 சீருடைப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கினார்கள். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- மக்கள் நலன் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களின்
இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான நகரம் சென்னை ஆய்வில் தகவல்
தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது – முதலமைச்சர் ஜெயலலிதா கருத்து
தஞ்சை நீதிமன்ற வளாகத்தில் கட்சித் தொண்டர்களை அடிக்க பாய்ந்த விஜயகாந்த்
வியாழன் , பெப்ரவரி 25,2016, தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் தஞ்சை நீதிமன்றத்தில் இன்று ஆஜரான தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சித் தொண்டர்களை அடிக்கப் பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூரில் நடைபெற்ற தேமுதிக பொதுக் கூட்டத்தின் போது, முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிய சம்பவம் குறித்து விஜயகாந்த் உட்பட தேமுதிகவினர் மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக இன்று தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு நேரில் ஆஜராக தேமுதிக தலைவர் விஜயகாந்த்
10 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
வியாழன் , பெப்ரவரி 25,2016, அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை இன்று தே.மு.தி.கவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான மதுரை மையம் தொகுதி ஆர். சுந்தர்ராஜன், திட்டக்குடி கே. தமிழ்அழகன், பேராவூரணி தொகுதி நடிகர் சி. அருண்பாண்டியன், ராதாபுரம் மைக்கேல் எஸ். ராயப்பன், செங்கம் சுரேஷ் குமார், சேந்த மங்கலம் சாந்தி ராஜமாணிக்கம், விருதுநகர் க. பாண்டியராஜன், திருத்தணி மு. அருண் சுப்பிரமணியம் ஆகியோரும்; பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அணைக் கட்டு தொகுதி
பதவி விலகிய தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்!
நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகள் மூடப்பட்டதற்கு, திமுகவும், காங்கிரசும் தான் காரணம்:அமைச்சர் தங்கமணி
வியாழக்கிழமை, பிப்ரவரி 25, 2016, பத்திரிகைகளில் வெளிவரும் திமுகவின் பொய் விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள் என்று, தொழில் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். நாமக்கல்லில் குளக்கரை திடலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் தங்கமணி, 1.8 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டு, இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியது திமுக என்று குற்றம்சாட்டினார். பொய் பிரசாரத்தை மக்கள் யாரும் நம்பமாட்டார்கள் என்றும், நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகள் மூடப்பட்டதற்கு, திமுகவும்,
முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினம்: அம்பையில் 17 குழந்தைகளுக்கு தங்கமோதிரம்!
வியாழன் , பெப்ரவரி 25,2016, அம்பாசமுத்திரத்தில் புதன்கிழமை முதல்வர் பிறந்த தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு அதிமுக சார்பில் தங்கமோதிரம், புத்தாடைகள் வழங்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் 68 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் ஆற்றுச்சாலை அரசடி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து அரசு மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு மாவட்டச் செயலரும், மாநில வீட்டு வசதி வாரியத் தலைவருமான ஆர். முருகையாபாண்டியன்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு டெலிபோனில் 27 லட்சம் பேர் பிறந்தநாள் வாழ்த்து!
வியாழன் , பெப்ரவரி 25,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68–வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருக்கு 27 லட்சம் பேர் டெலிபோனில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதாக அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிவித்துள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தும் சாதாரண மக்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக புதிய ஏற்பாடுகளை அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செய்திருந்தது. அதன்படி, 7767020002 என்ற செல்போன் எண்ணும், 044–33124234 என்ற தொலைபேசி எண்ணும் வெளியிடப்பது. தொலைபேசி எண்ணில் ‘24’