விலையில்லா ஆடுகள் -கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு கூடுதல் நிதியுதவி : லோக்சபையில் அ.தி.மு.க. வலியுறுத்தல்

விலையில்லா ஆடுகள் -கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு கூடுதல் நிதியுதவி : லோக்சபையில் அ.தி.மு.க. வலியுறுத்தல்

புதன்கிழமை, மார்ச் 15, 2017, புதுடெல்லி : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய விலையில்லா ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தால் தமிழகத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், பால் உற்பத்தியும் உயர்ந்துள்ள நிலையில், தேசிய பால் உற்பத்தி திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு கூடுதல் நிதியுதவி அளிக்க வேண்டும் என பாராளுமன்ற லோக்சபையில் அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது. லோக்சபையில் நேற்று பேசிய அ.தி.மு.க. உறுப்பினர்  கே.காமராஜ், தமிழகத்தில் ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் உன்னத திட்டமான விலையில்லா ஆடுகள் மற்றும் கறவை

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் மக்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரில் ஆதரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் மக்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரில் ஆதரவு

புதன்கிழமை, மார்ச் 15, 2017, சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான எடப்பாடியை சேர்ந்த அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் ஊர்காரர்கள் என 250க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவளித்தனர். சசிகலாவை எதிர்த்து வெளிய வந்த பிறகு ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் அணி அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தீவிரமாக போராடி வருகிறது.    ஆர்.கே.நகர்

மாணவர் முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கல் : ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவு

மாணவர் முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கல் : ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவு

புதன்கிழமை, மார்ச் 15, 2017, சென்னை : டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்த தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்ததையடுத்து அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:- டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி படிப்பு 3-ம் ஆண்டு மாணவரான, சேலம் மாவட்டம், பெரியேரி கிராமத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரின் மகன் முத்துகிருஷ்ணன், கடந்த 13

நீர்-மோர் பந்தல்கள் அமையுங்கள் : அதிமுகவினருக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள்

நீர்-மோர் பந்தல்கள் அமையுங்கள் : அதிமுகவினருக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, மார்ச் 14, 2017, சென்னை : கோடைக்காலத்தில் பொது மக்களுக்கு உதவுகிற வகையில் நீர் மோர், தண்ணீர் பந்தல்களை ஆங்காங்கே அமைக்க வேண்டும் என தொண்டர்களுக்கு அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதுகுறித்து டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :- கோடை காலத்தின் கொடிய வெப்பத்தை பொது மக்கள் இலகுவாக சமாளிப்பதற்கு, அதி.மு.க.வின் சார்பில் ஆங்காங்கே நீர் மோர், தண்ணீர் பந்தல்களை திறக்க வேண்டும் என ஆண்டு தோறும் ஜெயலலிதா கழகச்

நல்லாட்சியை ஓ.பன்னீர்செல்வத்தால் மட்டுமே கொடுக்க முடியும் : முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரி திலகவதி பேட்டி

நல்லாட்சியை ஓ.பன்னீர்செல்வத்தால் மட்டுமே கொடுக்க முடியும்  : முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரி திலகவதி பேட்டி

செவ்வாய்க்கிழமை, மார்ச் 14, 2017, சென்னை : தமிழகத்தில் மக்கள் நலன் காக்கும் நல்லாட்சியை ஓ.பி.எஸ். அணியால் மட்டுமே கொடுக்க முடியும் என அந்த அணியில் இணைந்துள்ள முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி தெரிவித்துள்ளார். சென்னையில் ஓ.பி.எஸ். இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அந்த அணியில் இணைய என்ன காரணம் என்பது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி  கூறியதாவது :- தமிழக காவல்துறையில் 35 ஆண்டுகள் பல்வேறு நிலைகளில் அதிகாரியாகப் பணியாற்றி இருக்கிறேன். ஒவ்வொரு

ரூ.100 கோடியில் ஏரிகளை சீரமைக்கும் பணி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்

ரூ.100 கோடியில் ஏரிகளை சீரமைக்கும் பணி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்

திங்கட்கிழமை, மார்ச் 13, 2017, சென்னை : தமிழகத்தில் 30 மாவட்டங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1519 குடிமராமத்து திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வறட்சியை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திட, 30 மாவட்டங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1519 குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி வைக்கும் விதமாக, காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் கிராமம், மணிமங்கலம் ஏரியினை சீரமைத்திடும் குடிமராமத்து திட்டப் பணிகளை தொடங்கி வைக்க முதலமைச்சர்

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணிக்கு கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் ஆதரவு

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணிக்கு கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் ஆதரவு

திங்கட்கிழமை, மார்ச் 13, 2017, சென்னை : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணிக்கு அதிமுக கோவை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அருண்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுகவிலிருந்து தனியாகப் பிரிந்த ஓ.பி.எஸ். அணியில் இப்போது 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இப்போது கோவை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அருண்குமார் ஆதரவு தெரிவித்ததன் மூலம், ஓ.பி.எஸ். அணியில் இடம்பெற்றிருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. சென்னையிலுள்ள ஓ.பி.எஸ். இல்லத்துக்கு