யார் அடுத்த முதல்வர்?பொதுமக்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அமோக ஆதரவு:புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் தகவல்

யார் அடுத்த முதல்வர்?பொதுமக்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அமோக ஆதரவு:புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் தகவல்

செவ்வாய், பெப்ரவரி 16,2016, தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்று 32.63 % பேரும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு 18.88 % திமுக தலைவர் கருணாநிதிக்கு 15.21 % பேரும் ஆதரவு தருவதாக புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் முதலமைச்சராக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் ? மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியும் ஆப்ட் நிறுவனமும் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது. கடந்த

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது; இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது; இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்

செவ்வாய், பெப்ரவரி 16, அ.தி.மு.க. தலைமையிலான இந்த ஆட்சி, வரும் மே மாதத்தோடு நிறைவடைகிறது. எனவே தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு, மார்ச் தொடக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத்தோடு ஆட்சி முடிவதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டும் தமிழக அரசு தாக்கல் செய்கிறது. இடைக்கால பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதை தாக்கல் செய்கிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு , 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்:அமைச்சர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்

முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு , 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்:அமைச்சர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்

செவ்வாய்கிழமை, பிப்ரவரி 16, 2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதிலும் 68 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் முதலமைச்சர் ஆலமரக்கன்றை நட்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்ததை அடுத்து, பல்வேறு மாவட்டங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில், பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று ஆலமரக்கன்றை நட்டு மாபெரும் மரம் நடும் திட்டத்தை

தனியார் நிறுவன தீ விபத்தில் பலியான 6 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

தனியார் நிறுவன தீ விபத்தில் பலியான 6 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய்கிழமை, பிப்ரவரி 16, 2016, தனியார் நிறுவன தீ விபத்தில் பலியான 6 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கோயம்புத்தூர் மாவட்டம், ஓராட்டுக்குப்பை கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அப்போது பணியிலிருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த குணால், தருண், பிரித்தம், பிக்காஷ், பிரிஜுன், சரோஜ் ஆகிய தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம்

ரூ.59.47 கோடி மதிப்பீட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகம்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ரூ.59.47 கோடி மதிப்பீட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகம்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

செவ்வாய்கிழமை, பிப்ரவரி 16, 2016, சென்னை, பெருங்குடி – கொட்டிவாக்கம் கிராமத்தில் 59 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தினை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- சட்டக் கல்விக்கென தனியாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தை தெற்காசியாவிலேயே முதன் முதலாக  முதலமைச்சர் ஜெயலலிதா நிறுவினார். இப்பல்கலைக் கழகத்தின் கீழ்