முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களிடையே விளக்கும் வகையில், அ.இ.அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களிடையே விளக்கும்  வகையில், அ.இ.அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில், தமிழகம் முழுவதும்  எழுச்சிப் பயணம்

திங்கள் , பெப்ரவரி 15,2016, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ள மகத்தான மக்கள் நலத்திட்டங்களையும், முதலமைச்சரின் சட்டப்பேரவை உரைகளையும், அனைத்துப் பகுதிகளிலும் மக்களிடையே கொண்டு செல்லும் வகையில், கழக மகளிர் அணி சார்பில் எழுச்சிப் பிரச்சாரப் பயணம் இன்று நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். முதலமைச்சர்  ஜெயலலிதா, தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து கடந்த

திமுக பற்றி கருத்து சொல்வேன் யாரும் என்னை தடுக்க முடியாது: கருணாநிதிக்கு அழகிரி பதிலடி

திமுக பற்றி கருத்து சொல்வேன் யாரும் என்னை தடுக்க முடியாது: கருணாநிதிக்கு அழகிரி பதிலடி

திங்கள் , பெப்ரவரி 15,2016, சென்னை: தி.மு.க. பற்றி கருத்து சொல்ல நீ யார் என, என்னை யாரும் கேட்க முடியாது என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சி தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார், அழகிரி. இந்நிலையில், திமுக-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த அழகிரி, அது பொருந்தாத கூட்டணி என்றும், திமுக இப்போதுள்ள நிலையில், எந்த கட்சியோடு

தமிழக சட்டப்பேரவையில் நாளை நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்

தமிழக சட்டப்பேரவையில் நாளை நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்

திங்கட்கிழமை, பிப்ரவரி 15, 2016, தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. வரும் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 2016-2017 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் திரு.ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் நாளை தாக்கல் செய்கிறார். நடப்பு நிதியாண்டிற்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கல்வி, கலை, அரசியல், சாதனைகளை எடுத்துரைக்கும் “நமது அம்மா” புத்தகம் மதுரையில் வெளியிடப்பட்டது

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கல்வி, கலை, அரசியல், சாதனைகளை எடுத்துரைக்கும் “நமது அம்மா” புத்தகம் மதுரையில் வெளியிடப்பட்டது

திங்கள் , பெப்ரவரி 15,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் கல்வி, கலை, அரசியல், சாதனைகளை எடுத்துரைக்கும் “நமது அம்மா”- தகவல் களஞ்சியம் என்னும் தலைப்பிலான புத்தகம் மதுரையில் வெளியிடப்பட்டது. மதுரை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கையில் கல்வி, கலை, அரசியல், சாதனை, தியாகம், பொதுவாழ்க்கை, துணிச்சல் போன்றவற்றை எடுத்துரைக்கும் வினாவிடை தொகுப்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நமது அம்மா – என்னும் தகவல் களஞ்சியப் புத்தகம்

கம்யூனிஸ்ட் எம்.பி., ராஜாவின் மகள் உட்பட 10 பேருக்கு தேசவிரோத கோஷம் எழுப்பிய வழக்கில் போலீஸ் வலை வீச்சு!

கம்யூனிஸ்ட் எம்.பி., ராஜாவின் மகள் உட்பட 10 பேருக்கு தேசவிரோத கோஷம் எழுப்பிய வழக்கில் போலீஸ் வலை வீச்சு!

திங்கள் , பெப்ரவரி 15,2016, புதுடில்லி:டில்லி ஜவகர்லால் நேரு பல்கலையில், தேசவிரோத கோஷம் எழுப்பிய வழக்கில், மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜாவின் மகள் உட்பட, 10 பேரை, போலீசார் தேடி வருகின்றனர்; அவர்கள் வெளிநாடு தப்பிவிடாமல் இருக்க, விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த, 2001ல், பார்லிமென்ட் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் திட்டத்துக்கு மூளையாகச் செயல்பட்ட அப்சல் குரு, 2013

கனிமொழி எம்.பி. பதவிக்காகச் பிச்சை எடுத்தார்கள் : திமுக மீது மு.க.அழகிரி கடும் தாக்கு!

கனிமொழி எம்.பி. பதவிக்காகச் பிச்சை எடுத்தார்கள் : திமுக மீது மு.க.அழகிரி கடும் தாக்கு!

திங்கள் , பெப்ரவரி 15,2016, திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கொள்கை இல்லை என்று கூறிய மு.க.அழகிரி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறாது என்று தெரிவித்தார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திமுக-காங்கிரஸ் இரண்டிற்குமே கொள்கை இல்லை. காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்தோம், அமைச்சரவையில் இருந்தோம், அதன் பிறகு காங்கிரஸை விட்டு விலகினோம், திமுக விலகியது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியை திமுக நன்றி கெட்டவர்கள்

கருணாநிதி தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்த வரலாற்றை மக்கள் மறக்க மாட்டார்கள்:அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பேச்சு

கருணாநிதி தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்த வரலாற்றை மக்கள் மறக்க மாட்டார்கள்:அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பேச்சு

திங்கள் , பெப்ரவரி 15,2016, திமுக தலைவர் கருணாநிதி தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்த வரலாற்றை மக்கள் மறக்க மாட்டார்கள். வாய்ஜாலத்தில் மக்களை ஏமாற்றி வருகிறார் கருணாநிதி என தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார். கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா 68-வது பிறந்தநாளை முன்னிட்டு காட்டுமன்னார்கோயிலில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் இரவு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் எம்பி தலைமை வகித்தார்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய காரணமாக இருந்த கருணாநிதி கையாலேயே காங்கிரஸ் தன் முடிவுரையை எழுதிக்கொண்டது:பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கருத்து

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய காரணமாக இருந்த கருணாநிதி கையாலேயே காங்கிரஸ் தன் முடிவுரையை எழுதிக்கொண்டது:பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கருத்து

திங்கள் , பெப்ரவரி 15,2016, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய காரணமாக இருந்த கருணாநிதி கையாலேயே காங்கிரஸ் தன் முடிவுரையை எழுதிக்கொண்டது என பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை ; 2-ஜி அலைகற்றை வழக்கில் கடந்த வெள்ளிகிழமையன்று, தன் தரப்பு வாதத்தில் முன் வைத்த ஆ.ராசா அவர்கள், தான் செய்த விஷயங்கள் அனைத்தும், முன்னாள், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கும்,

ரூ.சுமார் 63 கோடி மதிப்பீட்டிலான பிரம்மாண்ட கலைவாணர் அரங்கம் – முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ரூ.சுமார் 63 கோடி மதிப்பீட்டிலான பிரம்மாண்ட கலைவாணர் அரங்கம் – முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

திங்கள் , பெப்ரவரி 15,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் இன்று, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், ஒரு லட்சத்து 92 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், சுமார் 63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதிகொண்ட கலைவாணர் அரங்கத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், 2 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநில செய்தி நிலையக் கட்டடத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். சென்னை,