முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக-வில் இணைந்தார் புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்பி கண்ணன்

முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக-வில் இணைந்தார் புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்பி கண்ணன்

ஞாயிறு, பெப்ரவரி 14,2016, புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்பி கண்ணன், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தார்.  அப்போது, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்திலிங்கம், புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் பெ.புருஷோத்தமன் ஆகியோர் உடனிருந்தனர். இவர் புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராகவும், அமைச்சரகாவும் அதன்பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.600 கோடி மதிப்பீட்டிலான பாலங்கள், சாலைப் பணிகள், கட்டடங்களையும் திறந்து வைத்து ரூ.1002 கோடியில் பாலம், மேம்பாலம், சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஜெயலலிதா

ரூ.600 கோடி மதிப்பீட்டிலான பாலங்கள், சாலைப் பணிகள், கட்டடங்களையும் திறந்து வைத்து ரூ.1002 கோடியில் பாலம், மேம்பாலம், சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஜெயலலிதா

ஞாயிறு, பெப்ரவரி 14,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இன்று, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 75 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், தமிழகம் முழுவதும் 599 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 42 பாலங்களையும், 2 ரயில்வே மேம்பாலங்களையும், 2 சாலைப் பணிகளையும், 7 கட்டடங்களையும் திறந்து வைத்து,

சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 33 பேருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தலா ரூ.50,000 அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார்

சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 33 பேருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தலா ரூ.50,000 அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார்

ஞாயிறு, பெப்ரவரி 14,2016, மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 33 பேருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவியை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ வழங்கினார். மதுரை மாவட்டம், டி. கல்லுப்பட்டி அருகே சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் கடந்த 6-ஆம் தேதி நேரிட்ட விபத்தில் பலியான 16 பேருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா

தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்:முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்:முதல்வர்  ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

ஞாயிறு, பெப்ரவரி 14,2016, தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். முதல்வர் ஜெயலலிதாவின் 68 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வனத்துறை மற்றும் ஊரக வளர்சித் துறை சார்பில் 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தத் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில், கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா, காவல் ஆணையர்

திமுக, காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணி சட்டசபைத் தேர்தலில் படு தோல்வியைத் தழுவும்:கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கருத்து

திமுக, காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணி சட்டசபைத் தேர்தலில் படு தோல்வியைத் தழுவும்:கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கருத்து

ஞாயிறு, பெப்ரவரி 14,2016, திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு கொள்கை கிடையாது. இந்தக் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறாது, தோல்வியைத் தழுவும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி கூறியுள்ளார். இதுகுறித்து மு.க.அழகிரி அளித்துள்ள பேட்டியில், காங்கிரஸுடன் இனி கூட்டணி அமைக்க மாட்டோம் என்றுதான் அந்தக் கூட்டணியிலிருந்து திமுக விலகியது. பிறகு, கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்று காங்கிரஸிடம் வாக்கு கேட்டுச் சென்றனர். மாநிலங்களவை உறுப்பினராகவும்

அதிமுக அரசின் சாதனைகளை விளக்க பேரணி:ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன

அதிமுக அரசின் சாதனைகளை விளக்க பேரணி:ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன

ஞாயிறு, பெப்ரவரி 14,2016, அதிமுக அரசின் ஆட்சிக் கால சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் விழிப்புணர்வுப் பேரணி திருவள்ளூரில் சனிக்கிழமை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், அதிமுக அரசின் ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளை புத்தகமாக அச்சிட்டு, அதை மக்களிடையே சேர்க்கும் விழிப்புணர்வுப் பேணி திருவள்ளூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பேரவைச் செயலாளர் இரா.மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை, பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம் ஆகியோர்

தலித் விரோத திமுக ஆட்சியை மக்கள் மறக்கவில்லை:இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் பேச்சு

தலித் விரோத திமுக ஆட்சியை மக்கள் மறக்கவில்லை:இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் பேச்சு

ஞாயிறு, பெப்ரவரி 14,2016, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்றும் தலித் விரோத திமுக ஆட்சியை மக்கள் மறக்கவில்லை என்றும் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் எம்எல்ஏ நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, உளுந்தூர்பேட்டையில் நேற்று அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இந்திய குடியரசு கட்சி அதிமுக கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும். இந்த கூட்டணி தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி