ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு உதவிய காங்கிரஸ் உடன் தி.மு.க. சந்தர்ப்பவாத கூட்டணி

ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு உதவிய காங்கிரஸ் உடன் தி.மு.க.  சந்தர்ப்பவாத கூட்டணி

ஞாயிறு, பெப்ரவரி 14,2016, இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு உதவிய காங்கிரசும், திமுகவும் தற்போது தேர்தல் கூட்டணி அமைத்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, கூட்டணி  அமைக்கும் பணியில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபிஆசாத் நேற்று சென்னை வந்தார். சென்னையில், திமுக தலைவர் கருணாநிதியை அவர் சந்தித்து பேசினார். அதன் பிறகு, மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், காங்கிரசுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று

மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் பொருட்களை ஒரே இடத்தில் விற்பனை செய்ய மையம் திறப்பு : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மகளிர் குழுவினர் நன்றி

மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் பொருட்களை ஒரே இடத்தில் விற்பனை செய்ய மையம் திறப்பு : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மகளிர் குழுவினர் நன்றி

ஞாயிறு, பெப்ரவரி 14,2016, தூத்துக்குடியில், மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் பொருட்களை ஒரே இடத்தில் சந்தைப்படுத்தும் வகையில் விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, மகளிர் குழுவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர். தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களால், சுய தொழிலில் ஈடுபட்டு வருவாய் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி மாநகராட்சியின்கீழ் செயல்பட்டுவரும் மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் பொருட்களை ஒரே இடத்தில் சந்தைப்படுத்தி,

விஜயகாந்த் அரசியல் வியாபாரி;ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு

விஜயகாந்த் அரசியல் வியாபாரி;ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு

ஞாயிறு, பெப்ரவரி 14,2016, மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியல் வியாபாரி என்றும் அவர் தற்போது அரசியல் பேரம் பேசி வருவதாகவும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் தென் மண்டல அதிமுக வழக்கறிஞர் பிரிவு தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு அரசியல் முடிவும், மாற்றமும் மதுரையை மையமாக வைத்தே

தேர்தலுக்காக ‘பெரும் ஊழல் பூதங்களை’ புதைத்து மறைத்த திமுக – காங்

தேர்தலுக்காக ‘பெரும் ஊழல் பூதங்களை’ புதைத்து மறைத்த திமுக – காங்

சனிக்கிழமை, பிப்ரவரி 13, 2016, தமிழகத்தில் உறுதியாகி விட்ட திமுக – காங்கிரஸ் கூட்டணியில், முன்பு கிளம்பிய ‘பெரும் ஊழல் பூதங்களை’ மீண்டும் கிணற்றுக்குள் போட்டு, தங்கள் வசதிக்கேற்ப மூடி விட்டன இரண்டு கட்சிகளும். ‘புதைக்கப்பட்ட ஊழல் பூதம்’ 1: காங்., தலைமையிலான சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முக்கிய கட்சியாக அங்கம் வகித்தது திமுக. ‘வளமான’ துறை வேண்டும் என்பதற்காகவே தொலை தொடர்பு துறையைப் பெற்றது. அதில் கிளம்பிய 2ஜி பூதம், நாட்டை உலுக்கியது மட்டுமல்லாமல்,

அம்மா குடிநீர் திட்டத்தில் ஏழைகளுக்கு நாள்தோறும் 20 லிட்டர் இலவச ’மினரல்’ குடிநீர் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

அம்மா குடிநீர் திட்டத்தில் ஏழைகளுக்கு நாள்தோறும் 20 லிட்டர் இலவச ’மினரல்’ குடிநீர் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சனி, பெப்ரவரி 13,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை-எளிய மக்களும், மினரல் வாட்டர் என சொல்லப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெற ஏதுவாக, “அம்மா குடிநீர் திட்டத்தை” அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சியில், ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் 100 இடங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு, எதிர்மறை சவ்வூடு பரவுதல் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குடும்பம் ஒன்றுக்கு நாளொன்றுக்கு 20 லிட்டர் என்ற அளவில் விலை ஏதுமின்றி வழங்கப்படும் என்றும்

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான மாணவர் விடுதிகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான மாணவர் விடுதிகளை முதல்வர் ஜெயலலிதா   திறந்து வைத்தார்

சனி, பெப்ரவரி 13,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், விழுப்புரத்தில் 1 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதியை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், 66 கோடியே 92 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கல்லூரி மற்றும்

தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கி முதல்வர் ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தகவல்

தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கி முதல்வர் ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தகவல்

சனி, பெப்ரவரி 13,2016, சூரியசக்தி மின்சாரம், இனிமேல் பொது ஏலம் மூலம் கொள்முதல் செய்யப்படும் என்றும், தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கி முதல்வர் ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார் என்றும் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீட்டை ஊக்குவிப்பது தொடர்பான கருத்தரங்கம் சென்னையில்   நடந்தது. இதில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீட்டை ஊக்குவிப்பது தொடர்பான அறிக் கையை வெளியிட்டு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:- தமிழகத்தில்

முதல்வர் ஜெயலலிதா 68-வது பிறந்தநாள் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது

முதல்வர் ஜெயலலிதா 68-வது பிறந்தநாள் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது

சனி, பெப்ரவரி 13,2016, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. வனத்துறையினரும், ஊரக வளர்ச்சித்துறையினரும் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். 68-வது பிறந்தநாள் வருகிற பிப்ரவரி 24-ந்தேதியன்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை வனத்துறையினரும், ஊரக வளர்ச்சித்துறையினரும் செய்துள்ளனர். இந்த திட்டத்தின் படி, முதல் மரக்கன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நடப்படுகிறது. இதற்கான இடத்தை வனத்துறை

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகாமகம் திருவிழா இன்று தொடக்கம்:விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் முதல்வர் உத்தரவு

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகாமகம் திருவிழா இன்று தொடக்கம்:விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் முதல்வர் உத்தரவு

சனி, பெப்ரவரி 13,2016, குரு சிம்மராசியில் இருக்கும் போது மகம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி வரும் நாள் மகாமகம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2004ம் அண்டு மகாமக விழா நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மகாமகம் விழா கொண்டாடப்படுகிறது.தென்னகத்தின் கும்பமேளா என்று அழைக்கப்படும் மகாமக பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மகாமக பெருவிழா இன்று (சனிக்கிழமை) பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.