தமிழகத்தில் இனி மின்தடை என்பதே கிடையாது:அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன்

தமிழகத்தில் இனி  மின்தடை என்பதே கிடையாது:அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன்

வெள்ளி, பெப்ரவரி 12,2016, கோடைக்காலத்தில் மின்வெட்டை சமாளிக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துள்ளதாகம் தமிழகத்தில் இனி  மின்தடை என்பதே கிடையாது என்றும் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார். சென்னையில் இந்திய தொழிற் கூட்டமைப்பின் சார்பில், மரபுசாரா எரிசக்தி மின் உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் கலந்துகொண்டு பேசியதாவது: தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

பெரியாரிசம் பேசும் ஸ்டாலின் முதல்வர் பதவிக்காக நடத்திய கோமாதா பூஜை!

பெரியாரிசம் பேசும் ஸ்டாலின் முதல்வர் பதவிக்காக நடத்திய கோமாதா பூஜை!

வெள்ளி, பெப்ரவரி 12,2016, எதிர்ப்புகள் தானாக விலகவும், முதல்வர் பதவியில் அமரவும், கோ பூஜையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்றதாக, தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில், ‘நமக்கு நாமே’ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று ஓட்டேரி பகுதிவாசிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள, ‘மெட்ராஸ் பிஞ்சராபோல் டிரஸ்ட்’டிற்கு சென்றார். இந்த டிரஸ்ட், 50 ஏக்கர் பரப்பளவில் செயல்படுகிறது. இங்கு, 2,000த்திற்கும் மேற்பட்ட பசுக்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோசாலைக்கு, தங்களுக்கு ஏற்பட்ட தோஷம்

கட்டுமான தொழிலாளர் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

கட்டுமான தொழிலாளர் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

வெள்ளி, பெப்ரவரி 12,2016, பணியில் இருக்கும் போது விபத்தில்  இறக்கும்  கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ 5 லட்சம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடங்களில் விபத்து ஏற்பட்டு இறக்கும் போது அவர்களுக்கான நிதி உதவி ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று  முதலமைச்சர்  ஜெயலலிதா  12.8.2014 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன் அடிப்படையில்,

புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

வெள்ளி, பெப்ரவரி 12,2016, சென்னை : பெரம்பலூர் மாவட்டம் – ஆலத்தூரில், மேதஞ்சாவூர் மாவட்டம் – ஒரத்தநாடு, புதுக்கோட்டை மாவட்டம் – விராலிமலை, விருதுநகர் மாவட்டம் -சாத்தூர், விழுப்புரம் மாவட்டம் – திண்டிவனம் ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியிருப்பதாவது:-  பெரம்பலூர் மாவட்டம் – ஆலத்தூரில்புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை

முதல்வர் ஜெயலலிதா நீடூழி வாழ வேண்டி 84 பேர் காசி யாத்திரை பயணம் மேற்கொண்டனர்

முதல்வர் ஜெயலலிதா நீடூழி வாழ வேண்டி 84 பேர் காசி யாத்திரை பயணம்  மேற்கொண்டனர்

வெள்ளி , பெப்ரவரி 12,2016, முதலமைச்சர் ஜெயலலிதா நீடூழி வாழவும், சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று தொடர்ந்து முதலமைச்சராக வேண்டியும் சென்னையிலிருந்து 84 பேர் காசி யாத்திரை சென்றார்கள். காசி யாத்திரை சென்றவர்களுக்கு போர்வை, பழங்கள் வழங்கி அமைச்சர் பா.வளர்மதி வழி அனுப்பி வைத்தார்.தென் சென்னை வடக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வி.முருகன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். கடந்த 5 ஆண்டுகளாக இதுபோன்று காசி யாத்திரை நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் 70

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் : பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் : பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு

வியாழன் , பெப்ரவரி 11,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில், தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாம், எஸ்.எஸ்.பிள்ளை தெருவில் உள்ள பள்ளியில் நடைபெற்றது. பெண்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஈ.சி.ஜி. போன்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறப்பு பரிசோதனைகளும், மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள்

சாத்தனூர் அணையில் இருந்து நாளை முதல் நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை

சாத்தனூர் அணையில் இருந்து நாளை முதல் நீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை

வியாழன் , பெப்ரவரி 11,2016, விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக, நாளை முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் நீர்த்தேக்கத்தில் இருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக  உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

வியாழன் , பெப்ரவரி 11,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை வட்டம், பாம்பாறு அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 120 கன அடி வீதம் 85 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர்

நாகர்கோவிலில் அ.தி.மு.க. அரசின் 4½ ஆண்டு சாதனை விளக்க எழுச்சி பேரணி தமிழ்மகன் உசேன் தொடங்கி வைத்தார்

நாகர்கோவிலில் அ.தி.மு.க. அரசின் 4½ ஆண்டு சாதனை விளக்க எழுச்சி பேரணி தமிழ்மகன் உசேன் தொடங்கி வைத்தார்

வியாழன் , பெப்ரவரி 11,2016, அ.தி.மு.க. அரசின் 4½ ஆண்டுகால சாதனைகளை விளக்கி நாகர்கோவில் ஜெயலலிதா பேரவை சார்பில் எழுச்சி பேரணி நடந்தது. பேரணிக்கு மாவட்ட பேரவை செயலாளர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். நகர பேரவை செயலாளர் கவுன்சிலர் அய்யப்பன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க.

நிலுவையில் உள்ள 10 ரயில்வே திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

நிலுவையில் உள்ள 10 ரயில்வே திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

வியாழன் , பெப்ரவரி 11,2016, தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 10 ரயில்வே திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, முதலமைச்சர்  ஜெயலலிதா பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் இத்திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து, திட்டப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுமட்டுமின்றி, கடந்த பட்ஜெட்டுகளில் தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் தொடங்கப்படாத 20 ரயில்வே திட்டங்களை வரும் ரயில்வே பட்ஜெட்டில் மேற்கொண்டு தமிழக மக்களின் நீண்டகால