அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இரும்புக் கோட்டை:அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இரும்புக் கோட்டை:அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

புதன், பெப்ரவரி 10,2016, அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இரும்புக் கோட்டை என்றும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தேனி மாவட்டம், போடியில் நேற்று முன்தினம் இரவு மாவட்ட இளைஞர், இளம்பெண் பாசறை சார்பில் 9-ம் ஆண்டு பாசறை எழுச்சி தினப் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து நலத் திட்ட உதவிகளை

அப்துல் கலாம் நினைவிடம் அருகே உயர்கோபுர மின்விளக்கு, பயணியர் நிழற்குடை ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

அப்துல் கலாம் நினைவிடம் அருகே உயர்கோபுர மின்விளக்கு, பயணியர் நிழற்குடை ஆகியவற்றை  முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

புதன், பெப்ரவரி 10,2016, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு மற்றும் நவீன பயணியர் நிழற்குடைகளை முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்  சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 5  கோடியே  34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்வி, நிருவாகம் மற்றும் ஆய்வறிஞர் விடுதிக்  கட்டிடங்களைக் காணொலிக்

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு கூடாது பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு கூடாது பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

புதன், பெப்ரவரி 10,2016, மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- மருத்துவ கல்லூரிகளில் மாணவ-மாணவியர் சேர்க்கைக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்பை, மறுஆய்வு செய்யக்கோரும் மத்திய அரசின் எந்த ஒரு முயற்சியையும் தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது என்ற

மொழிப்போர் தியாகிகள்-தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

மொழிப்போர் தியாகிகள்-தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

புதன், பெப்ரவரி 10,2016, தியாகிகள்-தலைவர்களின் சிலைகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், சீனம், அரபு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட பாரதிதாசன் கவிதைகள், ஆத்திசூடி நூல்களை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். மேலும், அரசுக் கட்டடங்கள் சிலவற்றையும் அவர் திறந்துவைத்தார் என்று தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், செய்தி-சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, பள்ளிக் கல்வித்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர முயற்சியால் சென்னையில் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் : 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர  முயற்சியால் சென்னையில் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் : 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு

செவ்வாய், பெப்ரவரி 09,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியின் விளைவாக திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் 400-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டுள்ளனர். முதலமைச்சர்  ஜெயலலிதா, திருநங்கைகளின் நலனுக்காக பல்வேறு உதவிகளை அளித்து வருகிறார். திருநங்கைகளுக்கு உதவித்தொகை வழங்குதல், குடும்ப அட்டை வழங்குதல், குடியிருப்புகள் அளித்தல் என பல்வேறு உதவிகள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்காக சிறப்பு முகாம் ஒன்று சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடக்கம்

செவ்வாய், பெப்ரவரி 09,2016, முதலமைச்சர்  ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 13 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர்  ஜெ ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 13 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன. முனிச்சாலை பகுதியில் அமைந்துள்ள சுகாதார

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், பெப்ரவரி 09,2016, சியாச்சின் பனிச் சரிவில் சிக்கி இறந்த தமிழக ராணுவ வீரர்கள் 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் மாநிலம், சியாச்சின் பகுதியில் 3-2-2016 அன்று ஏற்பட்ட பனிச் சரிவில் இந்திய நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களான, வேலூர் மாவட்டம், பாகாயம் கிராமத்தைச் சேர்ந்த ஹவில்தார் எம்.ஏழுமலை;

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி,விலையில்லா கண் கண்ணாடி,விலையில்லா தலைக்கவசம்:அமைச்சர் வளர்மதி வழங்கினார்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி,விலையில்லா கண் கண்ணாடி,விலையில்லா தலைக்கவசம்:அமைச்சர் வளர்மதி வழங்கினார்

செவ்வாய், பெப்ரவரி 09,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, அ.இ.அ.தி.மு.க. சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, விலையில்லா தலைக்கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் நடைபெற்ற தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணியில், ஏராளமானோர் கலந்துகொண்டனர். முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவின்படி, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விலையில்லா தலைக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் பாலம் அருகே ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் சுமார் 100 பேருக்கு விலையில்லா தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன. மேலும், விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இதில், அமைச்சர் திருமதி