ஆர்.கே. நகரில் வெற்றி பெறுவேன் : “எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ பொருளாளர் தீபா பேட்டி

ஆர்.கே. நகரில் வெற்றி பெறுவேன் : “எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ பொருளாளர் தீபா பேட்டி

சனிக்கிழமை, மார்ச் 11, 2017, சென்னை : சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவேன் என “எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ பொருளாளர் தீபா நம்பிக்கை தெரிவித்தார். இதுகுறித்து அவர்,நேற்று தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-உண்மையான அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் சசிகலாவை ஏற்கவில்லை. அதனால் எனக்கு அவர்களின் ஆதரவு தேவையில்லை. இதுவரையில் திமுக உள்ளிட்ட கட்சிகளை எதிர்ப்பதற்காக இதுவரையில் எந்த வியூகமும் வகுக்கவில்லை. ஆர்.கே. நகர் தொகுதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோட்டையாகும்.

ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் : பாராளுமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வற்புறுத்தல்

ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் :  பாராளுமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வற்புறுத்தல்

சனிக்கிழமை, மார்ச் 11, 2017, புதுடெல்லி : ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பாராளு மன்றத்தில் வற்புறுத்தினார்கள். மாநிலங்களவை நேற்று காலையில் தொடங்கியதும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி அளித்துள்ள ஒத்திவைப்பு நோட்டீûஸ ஏற்க வேண்டும்’ என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் டாக்டர் வா. மைத்ரேயன், ஆர்.லட்சுமணன் ஆகியோர் அவையின் மையப் பகுதிக்குச் சென்று குரல் கொடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட

ஜெயலலிதா மறைவால் அதிர்ச்சியில் உயிரிழந்த 429 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கி டி.டி.வி.தினகரன் ஆறுதல்

ஜெயலலிதா மறைவால் அதிர்ச்சியில் உயிரிழந்த 429 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கி டி.டி.வி.தினகரன் ஆறுதல்

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  மறைவால் அதிர்ச்சியில் உயிர் இழந்த 429 அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கி டி.டி.வி.தினகரன் ஆறுதல் கூறினார். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட செய்தியைக் கேட்டு பல்வேறு வகைகளில் மரணமடைந்தவர்களில், முதல் கட்டமாக 166 பேர்களின் குடும்பத்தினருக்கு, கழகத்தின் சார்பில் தலா ரூ.3 லட்சம் குடும்ப நல நிதியுதவியும்; தொடர்புடைய விபத்துகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் ; டி.டி.வி. தினகரன் பேட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்  ; டி.டி.வி. தினகரன் பேட்டி

வெள்ளிக்கிழமை, மார்ச் 10, 2017, சென்னை : ஆர்கேநகர் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிதியளிப்பு விழா நேற்று நடந்தது. அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.எ.க்கள், எம்.பி.கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் டி.டி.வி. தினகரன் கூறியதாவது:- ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் : தீபா அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் : தீபா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, மார்ச் 10, 2017, சென்னை : ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தான் போட்டியிடப் போவதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை நேற்று மாலை சந்தித்த தீபா கூறியதாவது:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். வெற்றியும் பெறுவேன். மக்கள் எனக்கு ஆதரவளித்து வெற்றி பெற வைப்பார்கள் என நம்புகிறேன். நான் இதுவரை யாரிடமும் ஆதரவு கேட்கவில்லை. திமுக, சசிகலா குடும்பத்தினர்

ரூ.1580 கோடி மதிப்பில் கான்கீரிட் வீடுகள் கட்டும் புதிய திட்டம் ; முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

ரூ.1580 கோடி மதிப்பில் கான்கீரிட் வீடுகள் கட்டும் புதிய திட்டம் ; முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, மார்ச் 10, 2017, சென்னை : ரூ.1580 கோடி மதிப்பீட்டிலான கான்கீரிட் வீடுகள் கட்டும் திட்டத்தை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு :- பேரூராட்சிப் பகுதிகளில் வாழும் சொந்தக் குடியிருப்பு வசதி இல்லாத பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு மத்திய-மாநில அரசு நிதியுதவியுடன் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. 2016-17-ஆம் ஆண்டில் 329 பேரூராட்சிப் பகுதிகளில் வாழும் பொருளாதாரத்தில் நலிந்த 50 ஆயிரத்து 170