ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, மார்ச் 10, 2017, சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாகவுள்ள சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஜெயலலிதா வெற்றிபெற்றார். கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி அவர், காலமானதை அடுத்து, ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 12-ம் தேதி

ஜெயலலிதாவின் சிகிச்சைக்கான ஆவணங்களில் குடும்பத்தார் என கையெழுத்திட்டது யார்? : தீபா கேள்வி

ஜெயலலிதாவின் சிகிச்சைக்கான ஆவணங்களில் குடும்பத்தார் என கையெழுத்திட்டது யார்? : தீபா கேள்வி

வெள்ளிக்கிழமை, மார்ச் 10, 2017, சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளில், ‘குடும்பத்தார்’ என கூறியிருப்பது யார் என எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தீபா வெளியிட்டுள்ள அறிக்கை :- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்தும் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான அறிக்கைகளால் சந்தேகங்களும் கேள்விகளும் அதிகரிக்கின்றன. அவற்றிற்கு பதில் காண உடனடியாக நீதி விசாரணை தேவை. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து,

மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வியாழக்கிழமை, மார்ச் 09, 2017, திருநெல்வேலி : தமிழகத்தில் மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய கட்டடங்கள் திறப்பு விழாவில் முதல்வர் பேசியதாவது :- இந்த அரசு பதவியேற்ற குறுகிய காலத்தில், அடுக்கடுக்கான பணிகளை செய்துள்ளது. முதல்வர் பதவியேற்றவுடன், 5 சிறப்புத் திட்டங்களுக்கு கையெழுத்திட்டேன். உழைக்கும் மகளிர் பயன்பெறும் வகையில், ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு ரூ.200 கோடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணையை சந்திக்கத் தயார் : ஓ.பன்னீர்செல்வம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணையை  சந்திக்கத் தயார் : ஓ.பன்னீர்செல்வம்

வியாழக்கிழமை, மார்ச் 09, 2017, சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட்டால், அதைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் புதன்கிழமை அவரது அணியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் 36 இடங்களில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர்

16-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் : நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்

16-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் : நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்

வியாழக்கிழமை, மார்ச் 09, 2017, சென்னை  – தமிழக சட்டசபை வரும் 16-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத் தொடரில் நிதியமைச்சர் ஜெயகுமார் முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது குறித்து தமிழக சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 26 (1)-ன் கீழ், பேரவைத் தலைவர், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கீழ் அடுத்த கூட்டத்தை 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி காலை 10-30 மணிக்கு சென்னை