நாகை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு,முதலமைச்சர் உத்தரவுப்படி,ரூ.90 கோடி நிவாரண தொகை:அமைச்சர் ஜெயபால் வழங்கினார்

நாகை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு,முதலமைச்சர் உத்தரவுப்படி,ரூ.90 கோடி நிவாரண தொகை:அமைச்சர் ஜெயபால் வழங்கினார்

சனி, ஜனவரி 16,2016, நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, விவசாயிகளுக்கு நிவாரண தொகையாக 90 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. தமிழகத்தில் அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையினால், சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நாகை மாவட்டத்தில், ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர், பருவமழையால் கடுமையாக சேதமடைந்தது. இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் அளித்த அறிக்கையின்பேரில், விவசாயிகளின் நலனில் என்றும் அக்கறைகொண்டுள்ள முதலமைச்சர்

ஜெருசலேம் புனிதபயணம் செல்ல தமிழக அரசு நிதியுதவி:விண்ணப்பங்கள் வரவேற்பு

ஜெருசலேம் புனிதபயணம் செல்ல தமிழக அரசு நிதியுதவி:விண்ணப்பங்கள் வரவேற்பு

சனி, ஜனவரி 16,2016, தமிழக அரசின் நிதியுதவியுடன் ஜெருசலேம் புனிதபயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஜெருசலேம் புனிதப் பயணம், பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனிதத் தலங்களையும் உள்ளடக்கியது. இந்தப் புனிதப் பயணம், வரும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். தமிழக அரசின்

முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய இ சேவை மையங்கள் மூலம் தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் உடனடியாக கிடைப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி

முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய இ சேவை மையங்கள் மூலம் தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் உடனடியாக கிடைப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி

வெள்ளி , ஜனவரி 15,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, செயல்பட்டு வரும் இ சேவை மையங்கள் மூலம் காலவிரயமின்றி தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் கிடைப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் இ சேவை மையங்கள் மூலம் 4 லட்சத்து 35 ஆயிரம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, அரசு சான்றிதழ்களை பெறுவதற்காக மக்கள் காலத்தை விரையம் செய்யாமல் இருப்பதற்காக இ சேவை மையங்களை

இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விரைந்து அழைத்து வர நடவடிக்கை: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விரைந்து அழைத்து வர நடவடிக்கை: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி , ஜனவரி 15,2016, இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்களை தமிழகம் அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பாக் வளைகுடா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், தங்களது பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனர். இலங்கை ராணுவத்தினரால் அவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போது, அவர்கள்

குறு வியாபாரிகளுக்கு ரூ.5,000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.5 லட்சம் கடனுதவி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

குறு வியாபாரிகளுக்கு ரூ.5,000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.5 லட்சம் கடனுதவி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி , ஜனவரி 15,2016, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பெட்டிக் கடைகள், தெருவோரங்களில் வியாபாரம் செய்பவர்கள் நடைபாதையில் கடை வைத்திருப்பவர்கள் போன்ற சிறு வணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.5000 வட்டியில்லா கடன் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,கடந்த வடகிழக்குப் பருவமழையின் போது ஒரு சில நாட்களில் பெய்த கன மழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த வெள்ள பாதிப்பு மிக அதிகமானது என்பதால்,

அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்:தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து

அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்:தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து

வெள்ளி , ஜனவரி 15,2016, சென்னை: அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தியில், உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், தமது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். உழவர் பெருமக்கள்,

தமிழக அரசு வழங்கிய இலவச கறவை மாடுகள் மூலம் தினசரி 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல்

தமிழக அரசு வழங்கிய  இலவச கறவை மாடுகள் மூலம் தினசரி 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல்

வியாழன் , ஜனவரி 14,2016, பொதுமக்களுக்கு தமிழக அரசு வழங்கிய இலவச கறவை மாடுகள் மூலம் 80 ஆயிரம் லிட்டர் பால் உள்பட தினசரி 30 லட்சம் லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்கிறது. இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சுனில் பாலிவால் கூறியதாவது:– ஆவின் பால்பண்ணை மற்றும் உற்பத்தியை பெருக்குவதற்கு கடந்த 4½ ஆண்டுகளில் தமிழக அரசு அதிகபட்சமாக ரூ.593 கோடி நிதி ஒதுக்கியது. கடந்த 2010–2011–ம் ஆண்டு 20.67 லட்சமாக இருந்த பால் கொள்முதல்,

இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு:தமிழக அரசு அறிவிப்பு

இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு:தமிழக அரசு அறிவிப்பு

வியாழன் , ஜனவரி 14,2016, இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு அடுத்த மாதம் 8-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– இந்த ஆண்டு, ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்களிடமிருந்து, சில விதி முறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு மும்பை,

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி அடையும்:அதிமுக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைத்து முதல்வர் ஜெயலலிதா பேச்சு

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி அடையும்:அதிமுக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைத்து முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வியாழன் , ஜனவரி 14,2016, சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்று முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இத்தகைய வெற்றியை அடைந்திட அனைவரும் முழு ஈடுபாட்டோடு தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனவும் அவர் கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழுப்புரம் தெற்கு, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகங்கள்,

தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட 9 அறிஞர்களுக்கு விருதுகள்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட 9 அறிஞர்களுக்கு விருதுகள்: முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஜனவரி 13,2016, தமிழுக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரைச் சான்றிதழ் ஆகியன வழங்கப்படும். விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம்; 1. திருவள்ளுவர் விருது – 2016 : முனைவர் வி.ஜி.