தமிழக நிரந்தர முதல்வர் அம்மா :மதுரையில் 25,000 பேரை அ.தி.மு.க.வில் இணைக்கும் விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தமிழக நிரந்தர முதல்வர் அம்மா :மதுரையில் 25,000 பேரை அ.தி.மு.க.வில் இணைக்கும் விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

செவ்வாய், ஜனவரி 12,2016, மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை மாநகர் பகுதியில் உள்ள 25 ஆயிரம் இளைஞர்– இளம்பெண்கள், மாணவ– மாணவிகளை அ.தி.மு.க.வில் இணைக்கும் விழா மதுரை கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். 25 ஆயிரம் இளைஞர்–இளம்பெண்களை அ.தி.மு.க.வில் இணைத்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:– தமிழகத்தில்

கரும்பு டன்னுக்கு ரூ.550 உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:விவசாயிகள் மகிழ்ச்சி

கரும்பு டன்னுக்கு ரூ.550 உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:விவசாயிகள் மகிழ்ச்சி

செவ்வாய், ஜனவரி 12,2016, கரும்பு டன்னுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள ரூ.2,300 உடன், ரூ.550 சேர்த்து ரூ.2,850 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிர்ணயம் செய்யும் நியாயமான, ஆதாய விலையைவிட உயர் அளவில் பரிந்துரை விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்துவருகிறது. இந்த நிலையில், 2015-16-ஆம் ஆண்டுக்கான கரும்பு பருவத்துக்கு டன்னுக்கு ரூ.2,300 என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. விவசாயிகளின்

11 வகை மூலிகை மருந்துகளை கொண்ட ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி’ திட்டம்:முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்

11 வகை மூலிகை மருந்துகளை கொண்ட ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி’ திட்டம்:முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்

செவ்வாய், ஜனவரி 12,2016, தாய்மை அடைந்த பெண்களின் நலன் கருதி, 11 வகை மூலிகை மருந்துகளைக்கொண்ட கர்ப்பிணிகளுக்கான ‘அம்மா மகப்பேறு சஞ்சீவி‘ திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில், 15 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வெள்ளி விழா விருந்தினர் இல்லம், கலையரங்கம் மற்றும் நிர்வாக பிரிவு கட்டிடத்தில் கூடுதலாக

வாள்வீச்சு வீராங்கனை சி.எ. பவானிதேவியை,சிறப்பு ஊக்க உதவித் தொகைத் திட்டத்தில்” சேர்த்திட உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பெற்றோர்கள் நெஞ்சார்ந்த நன்றி

வாள்வீச்சு வீராங்கனை சி.எ. பவானிதேவியை,சிறப்பு ஊக்க உதவித் தொகைத் திட்டத்தில்” சேர்த்திட உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  பெற்றோர்கள் நெஞ்சார்ந்த நன்றி

திங்கள் , ஜனவரி 11,2016, விளையாட்டு வீரர் – வீராங்கனைகளை ஊக்குவிக்க பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, வாள்வீச்சு விளையாட்டில் சர்வதேச மற்றும் தேசியப் போட்டிகளில், குறிப்பிடத்தக்க வெற்றிகள் பெற்றுவரும் சென்னையைச் சேர்ந்த செல்வி சி.எ. பவானிதேவியை, ”உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஊக்க உதவித் தொகைத் திட்டத்தில்” சேர்த்திட ஆணையிட்டுள்ளார். இதன்மூலம், ஆண்டொன்றுக்கு 25 லட்சம் ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்கு தேவைக்கேற்ப நிதியுதவிகள் செய்யப்பட்டு, செல்வி சி.எ. பவானிதேவி, சர்வதேச

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைத் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் 25 ஆயிரம் பேர் கழகத்தில் ஒரே நேரத்தில் இணைந்தனர்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைத் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் 25 ஆயிரம் பேர் கழகத்தில் ஒரே நேரத்தில் இணைந்தனர்

திங்கள் , ஜனவரி 11,2016, மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்டமான அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை முகாமில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும், இளம்பெண்களும் தங்களை கழக உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஏழை-எளியோர் என அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் சக்தியாக முதலமைச்சர் ஜெயலலிதா விளங்கி வருவதால் இளைஞர்கள், தாங்களாகவே முன்வந்து அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். மதுரையில் நடைபெற்ற இந்த முகாமில் அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் குறித்து அமைச்சர்கள் திரு.ஓ.பன்னீர்செல்வம், திரு.நத்தம் ஆர்.விஸ்வநாதன், திரு.செல்லூர் கே.ராஜூ

கோவையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 25,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினர்:பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி

கோவையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 25,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினர்:பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி

திங்கள் , ஜனவரி 11,2016, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, கோவையில் நடைபெற்ற பிரம்மாண்டமான வேலைவாய்ப்பு முகாமில், 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணிக்கு தேர்வு செய்தன. தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டன. முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அவர்கள் அனைவரும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், முதலமைச்சர் ஆணையின்பேரில், சிறப்பு பேருந்துகள், குடிநீர், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. முதலமைச்சர் ஜெயலலிதா

ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி பெற்றுத் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி

ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி பெற்றுத் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி

திங்கள் , ஜனவரி 11,2016, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி பெற்றுத்தந்தமைக்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், அதன் நிர்வாகிகள் இன்று, முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டுமென்று

துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கம் வென்ற ரித்திக்கிற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து: ரூ.4 லட்சம் ஊக்கத்தொகை வழங்கவும் உத்தரவு

துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கம் வென்ற ரித்திக்கிற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து: ரூ.4 லட்சம் ஊக்கத்தொகை வழங்கவும் உத்தரவு

திங்கள் , ஜனவரி 11,2016, சென்னை : துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற சென்னை பள்ளி மாணவர் ரித்திக் என்பவருக்கு ரூ.4 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வருமாறு: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 27.12.2015 அன்று இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட, 17 வயதிற்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட சென்னை, முகப்பேரைச்

பெண்களின் கஷ்டங்களை உணர்ந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா: விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு

பெண்களின் கஷ்டங்களை உணர்ந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா: விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு

திங்கள், ஜனவரி 11,2016, கடலூர், கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இதுவரை ஐந்து கட்டமாக சுமார் ரூ.221 கோடி மதிப்பிலான விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் 5,46,248 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.பெண்களின் கஷ்டங்களை உணர்ந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்றும் அவர் கூறினார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, லால்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுப்பாளையம் எம்.வி.பி.சொக்கலிங்கம் திருமண மண்டபம் ஆகிய

பொதுமக்கள் மட்டுமல்லாது, விலங்குகள் நலனிலும் அக்கறை செலுத்தும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு யானைகளை பார்வையிட வந்த சுற்றுலாப் பயணிகள் பாராட்டு

பொதுமக்கள் மட்டுமல்லாது, விலங்குகள் நலனிலும் அக்கறை செலுத்தும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு யானைகளை பார்வையிட வந்த சுற்றுலாப் பயணிகள் பாராட்டு

ஞாயிறு, ஜனவரி 10,2016, யானைகள் நலவாழ்வு முகாமிற்கு வந்துள்ள யானைகளை சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டு மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் மட்டுமல்லாது, விலங்குகள் நலனிலும் அக்கறை செலுத்தும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சுற்றுலாப் பயணிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் சார்பில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிற்கிணங்க, ஆண்டுதோறும் யானைகள் நல்வாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள தேக்கம்பட்டி பகுதியில் கடந்த 7-ம் தேதி முதல் யானைகள்