உலக மகளிர் தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் அவ்வையார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை

உலக மகளிர் தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் அவ்வையார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை

வியாழக்கிழமை, மார்ச் 09, 2017, சென்னை : உலக மகளிர் தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் சென்னையில் நேற்று  அவ்வையார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. உலக மகளிர் தினத்தையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ் மூதாட்டி அவ்வையாரின் திருவுருவச் சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் .D.ஜெயக்குமார்,  வி.சரோஜா,  பெஞ்சமின்,  நிலோஃபர் கபில், சேவூர் எஸ். ராமச்சந்திரன், எஸ்.வளர்மதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள்

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அலை அலையாய் தொண்டர்கள் கூட்டம் : அதிர்ச்சியில் சசிகலா அணியினர்

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அலை அலையாய் தொண்டர்கள் கூட்டம் : அதிர்ச்சியில்  சசிகலா அணியினர்

புதன்கிழமை, மார்ச் 08, 2017, சென்னை : ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கிடைத்த ஆதரவைக் கண்டு சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சிறையிலிருந்த சசிகலா, கட்சியினரை கண்டித்ததோடு சில கட்டளைகளையும் பிறப்பித்துள்ளார்.  சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர். காலை 10 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 9 மணிக்கெல்லாம் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் உண்ணாவிரதம் நடக்கும் இடத்தில் திரண்டனர். இதையடுத்து 9.15 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம்

ரூ.330 கோடியில் நலத் திட்டப் பணிகள் : முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்

ரூ.330 கோடியில் நலத் திட்டப் பணிகள் : முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்

புதன் , மார்ச் 08,2017, சேலம் : சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ரூ.330.84 கோடியில் சுமார் 3,971 பணிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக சேலம் வந்த முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமிக்கு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலும், சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதி குப்பனூர் பைபாஸ் மற்றும் மகுடஞ்சாவடியிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக

துப்பாக்கிச் சூட்டில் இறந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் : முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

துப்பாக்கிச் சூட்டில் இறந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் : முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

புதன் , மார்ச் 08, 2017, சென்னை : துப்பாக்கிச் சூட்டில் இறந்த மீனவர் பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி தளத்திலிருந்து விசைப் படகில் பாக் வளைகுடா பகுதியில் அவர்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீனவர்கள் திங்கள்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இரவு சுமார் 9.30 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அப்பாவி மீனவர்களை நோக்கி அங்கு

எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளின் அறிக்கைகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது, நீதி விசாரணை வேண்டும் : மாஃபா பாண்டியராஜன்

எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளின் அறிக்கைகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது, நீதி விசாரணை வேண்டும் : மாஃபா பாண்டியராஜன்

செவ்வாய்க்கிழமை, மார்ச் 07, 2017, சென்னை : எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளின் அறிக்கைகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.எனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் இன்று கூறினார். சென்னையில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய மாபா பாண்டியராஜன்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைக்கும், தற்போது வெளியாகியுள்ள அறிக்கைக்கும் வேறுபாடு உள்ளது. போயஸ் தோட்ட