தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது:பயனாளிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது:பயனாளிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி

சனி , ஜனவரி 09,2016, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் ஒருகோடியே 91 லட்சம் குடும்பங்களுக்கு 318 கோடி ரூபாய் செலவில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததையடுத்து, பல்வேறு மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு, சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒருகிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு மற்றும் 100 ரூபாய் ரொக்கம் ஆகியன அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான நடவடிக்கையால் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு, சிறந்த கட்டமைப்பு, கல்வித் தரத்திற்கான “12-B Status” அந்தஸ்து கிடைத்துள்ளது

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான நடவடிக்கையால் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு, சிறந்த கட்டமைப்பு, கல்வித் தரத்திற்கான “12-B Status” அந்தஸ்து கிடைத்துள்ளது

சனி , ஜனவரி 09,2016, முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளால் சிறந்த கட்டமைப்பு மற்றும் கல்வி தரத்திற்கான “12-B Status” அந்தஸ்த்தை தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகம் பெற்றுள்ளது. தொலைதூர கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகம் மிகச்சிறப்பாக சேவையாற்றி வருகிறது. இந்த சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், UGC குழு ஒன்று கடந்த மே மாதம் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்திற்கு

முதலமைச்சர் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் ஒன்றான அம்மா உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு – வேலூர் மாநகராட்சியில் மூன்று அம்மா உணவகங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று

முதலமைச்சர் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் ஒன்றான அம்மா உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு – வேலூர் மாநகராட்சியில் மூன்று அம்மா உணவகங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று

சனி , ஜனவரி 09,2016, முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் மகத்தான மக்கள் நலத்திட்டங்களில் ஒன்றான அம்மா உணவகம், வேலூரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக I.S.O தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஏழை-எளிய நடுத்தர மக்கள் மலிவு விலையில் சுகாதாரமான மற்றும் தரமான உணவை வயிறார உண்ணும் வகையில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அம்மா உணவகங்கள் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியதால் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம் – முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொது மக்கள் பாராட்டு

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியதால் பட்டாசு  வெடித்து மக்கள் கொண்டாட்டம் – முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொது மக்கள் பாராட்டு

வெள்ளி, ஜனவரி 08,2016, ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கப்பட்டதையொட்டி, பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். தடையை நீக்குவதற்காக பெரும் முயற்சி மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, நெஞ்சார்ந்த நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர முயற்சியைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை, வரவேற்று, ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெறும் அலங்காநல்லூர், வாடிப்பட்டி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி

வெள்ளி, ஜனவரி 08,2016, முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் திரு.நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தின் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உடனடி நடவடிக்கை மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். ஜல்லிக்கட்டை நடத்த தாம் தொடர்ந்து போராடி வந்துள்ளதையும் முதலமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் திரு.நரேந்திரமோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வகையில், மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்கள் அமைச்சகம் நேற்று

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொடர் முயற்சிக்கு கிடைத்தது வெற்றி: ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொடர் முயற்சிக்கு கிடைத்தது வெற்றி:   ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி

வெள்ளி, ஜனவரி 08,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொடர் முயற்சி காரணமாக, தமிழ்நாட்டில், பொங்கல் திருநாளையொட்டி, தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசின் அறிவிக்கையையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பும் படி தலைமைச் செயலாளருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டு தமிழகத்தில் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது –

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளும், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளும், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன

வெள்ளி, ஜனவரி 08,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளும், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டம் எலவனாசூர் கோட்டை, வணக்கம்பாடி ஆகிய இடங்களில் 2,652 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர் திரு. ப. மோகன் வழங்கினார். ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 187 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் தோப்பு திரு. N.D. வெங்கடாசலம் வழங்கினார். இதனை

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி அதிமுகவினர் வீடு, வீடாக காலண்டர் விநியோகம்

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி அதிமுகவினர் வீடு, வீடாக காலண்டர் விநியோகம்

வெள்ளி, ஜனவரி 08,2016, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர் தலை முன்னிட்டு, தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் தினசரி காலண்டரை தயார் செய்து தேனி மாவட்டத்தில் அதிமுகவினர் வீடு வீடாக விநியோகம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்று, வாக்குகள் மே மாதத்தில் எண்ணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து கட்சியினரும் தேர்தலுக்கான ஆயத் தப்பணிகளில் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர். இந்நிலையில், தேனி மாவட்ட அதிமுகவினர் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில்

அமைதிக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் முப்தி முகமது சையத்: முதலமைச்சர் ஜெயலலிதா புகழஞ்சலி

அமைதிக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் முப்தி முகமது சையத்: முதலமைச்சர் ஜெயலலிதா புகழஞ்சலி

வெள்ளி, ஜனவரி 08,2016, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதி மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவற்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முதல்வர் முப்தி முகம்மது சையத் என முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முப்தி முகமது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உயர்ந்த தலைவர்களின் ஒருவரான முப்தி முகம்மது சையீத், அம்மாநில அரசியலிலும், தேசிய அரசியலிலும் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். அவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதி மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவற்கு

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு:9 ஆயிரத்து 12 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு:9 ஆயிரத்து 12 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

வெள்ளி, ஜனவரி 08,2016, கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து இரண்டாம் போக சாகுபடிக்காக,வெள்ளிக்கிழமை(ஜன.8) முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9,012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து, இரண்டாம் போக சாகுபடிக்காகத் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து இரண்டாம் போக சாகுபடிக்காக வெள்ளிக்கிழமை(ஜன.8)