ஜெயலலிதா பேரவை சார்பில்,தமிழக அரசின் மகத்தான சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் லட்சியப் பேரணி தொடங்கியது-லட்சக்கணக்கில் தொண்டர்கள் பங்கேற்பு

ஜெயலலிதா பேரவை சார்பில்,தமிழக அரசின் மகத்தான சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் லட்சியப் பேரணி தொடங்கியது-லட்சக்கணக்கில் தொண்டர்கள் பங்கேற்பு

புதன், ஜனவரி 06,2016, தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் தமது பெயரில் செயல்பட்டு வரும் பேரவை சார்பில் நியமிக்கப்படும் ஒவ்வொரு வாக்கு சேகரிப்பாளரும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகளுடன் சென்று அப்பகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து, கழக அரசின் சாதனைகளை எடுத்துரைக்கவேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டதற்கு இணங்க கழக நிர்வாகிகள், தமிழகம் முழுவதும் வாக்காளர்களை சந்தித்து கழக அரசின் சாதனைகளை விளக்கி வருகின்றனர். கழக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் உள்ள

முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் வேட்பாளர்கள்தான் வெற்றி பெறுவார்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் வேட்பாளர்கள்தான் வெற்றி பெறுவார்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

புதன், ஜனவரி 06,2016, வரும் சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளிலும்முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் வேட்பாளர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்றார் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர். புதுக்கோட்டையில் புதன்கிழமை அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணியைத் தொடக்கி வைத்து பேசியது: கடந்த சட்டமன்றத்தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று புதுக்கோட்டை அதிமுகவின் கோட்டை என நிரூபிக்கப்பட்டது. அதே போல 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை

1.91 கோடி குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

1.91 கோடி குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஜனவரி 06,2016, பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், உலகத் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் திருவிழா தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் திருநாளான அறுவடைத் திருநாள் உழவருக்கு நன்றி செலுத்தும் திருநாள் ஆகும். இறைவனுக்கும், இயற்கைக்கும், உழவருக்கும்,உழவருக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி நவில்கின்ற நாள் பொங்கல் திருநாள்.

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் நிதி உதவி:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் நிதி உதவி:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஜனவரி 06,2016, மின்சாரம் தாக்கியும், தேள் மற்றும் பாம்பு கடித்தும் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, தலா 3 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 39 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:- கடந்த நவம்பர் 11-ம் தேதி ஈரோடு மாவட்டம், பிசெட்டிபாளையம் வட்டம், கொளப்பலூர் கிராமத்தைச் சேர்ந்த . சென்னியப்பன்; நவம்பர் 21-ம்

104 தமிழக மீனவர்களையும், 66 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

104 தமிழக மீனவர்களையும், 66 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

புதன், ஜனவரி 06,2016, இலங்கையில் தற்போது, தமிழகத்தைச் சேர்ந்த 104 மீனவர்கள் காவலில் உள்ளதாகவும், இவர்களையும் அங்குள்ள தமிழக மீனவர்களின் 66 படகுகளையும் உடனடியாக விடுவிக்க உயர்மட்ட அளவில் தலையிட்டு நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் திரு. நரேந்திரமோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் கடந்த 24 மணி நேரத்தில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ 25,912 கோடி தேவை மத்திய குழுவிடம் ஜெயலலிதா வலியுறுத்தல்

வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ 25,912 கோடி தேவை மத்திய குழுவிடம் ஜெயலலிதா வலியுறுத்தல்

புதன், ஜனவரி 06,2016, வரலாறு காணாத கனமழை காரணமாக, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை மதிப்பிடுவதற்காக, முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியபடி, தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று சந்தித்தனர். பெருமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிப்பதை தமிழக அரசு முழுவீச்சில் தொடங்கியுள்ளது என்பதை கருத்தில் கொண்டு, மத்திய குழு தனது பரிந்துரைகளை விரைவில் அளித்து, மத்திய அரசு தேவையான நிதி உதவியை உடனடியாக அளிக்க வேண்டும் என முதலமைச்சர்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி,2,733 பேருக்கு திருமண நிதியுதவி:அமைச்சர்கள்,வளர்மதி,கோகுல இந்திரா, மேயர் சைதை எஸ். துரைசாமி உள்ளிட்டோர் வழங்கினர்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி,2,733 பேருக்கு திருமண நிதியுதவி:அமைச்சர்கள்,வளர்மதி,கோகுல இந்திரா, மேயர் சைதை எஸ். துரைசாமி உள்ளிட்டோர் வழங்கினர்

செவ்வாய்கிழமை, ஜனவரி 05, 2016, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 2,733 பயனாளிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, நிதியுதவி வழங்கப்பட்டது. சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலத் துறை அமைச்சர் பா. வளர்மதி, கைத்தறி, துணிநூல் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, மேயர் சைதை எஸ். துரைசாமி உள்ளிட்டோர் வழங்கினர். தண்டையார்பேட்டை மண்டலத்தில் 1090 பேருக்கும், ராயபுரம் மண்டலத்தில் 532 பேருக்கும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 589 பேருக்கும், அண்ணா நகர் மண்டலத்தில்

வேலூர் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பு:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

வேலூர் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பு:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

செவ்வாய், ஜனவரி 05,2016, வேலூர் மாநகராட்சி பகுதியில் 40 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கப்பட்டு, ஒரு லட்சம் பேர் பயனடைந்துள்ளதால், முதலமைச்சருக்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா, வேலூர் மாநகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 40 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டத்தை

வெள்ள நிவாரண பணிகளில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்ட பணிகளுக்கு மத்திய குழு பாராட்டு

வெள்ள நிவாரண பணிகளில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான  தமிழக அரசு மேற்கொண்ட பணிகளுக்கு மத்திய குழு பாராட்டு

செவ்வாய், ஜனவரி 05,2016, தமிழக வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மத்திய உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என். பிரசாத் வெள்ள நிவாரண பணிகளில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்ட பணிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மத்திய உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என். பிரசாத் தலைமையிலான குழுவினர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்கள். அப்போது தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது மாநில அரசின் அனைத்து துறைகளும் மீட்பு மற்றும்

விஸ்வகுடி கல்லாறு நீர்த்தேக்க கட்டுமானப்பணி இறுதிக்கட்டத்தை அடைந்தது:முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு விவசாயிகள் பாராட்டு

விஸ்வகுடி கல்லாறு நீர்த்தேக்க கட்டுமானப்பணி இறுதிக்கட்டத்தை அடைந்தது:முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு விவசாயிகள் பாராட்டு

செவ்வாய், ஜனவரி 05,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், 37 கோடி ரூபாய் மதிப்பில், பெரம்பலூர் மாவட்டத்தில், கல்லணை போல பிரம்மாண்டமாக கட்டப்பட்டுவரும் விஸ்வகுடி கல்லாறு நீர்த்தேக்க கட்டுமானப்பணி நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீண்டநாள் கனவை நிறைவேற்றிவைத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். “நீரின்றி அமையாது உலகு” என்று உரைத்த வான்புகழ் கொண்ட வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப, நீர் ஆதாரத்தை மேம்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா, பல்வேறு சிறப்பு