பொங்கல் திருநாளை முன்னிட்டு,சுமார் 3 கோடியே 36 லட்சம் வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் : 5 குடும்பங்களுக்கு நேரில் வழங்கினார்

பொங்கல் திருநாளை முன்னிட்டு,சுமார் 3 கோடியே 36 லட்சம் வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் : 5 குடும்பங்களுக்கு நேரில் வழங்கினார்

செவ்வாய், டிசம்பர் 29,2015, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின்கீழ், இந்த ஆண்டு 486 கோடியே, 36 லட்சம் ரூபாய் செலவில், சுமார் 3 கோடியே 36 லட்சம் வேட்டி, சேலைகள் வழங்குவதன் அடையாளமாக, முதலமைச்சர் ஜெயலலிதா, 5 குடும்பங்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கி, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். விவசாயத்தை அடுத்து, கிராம மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக நெசவுத்தொழில் விளங்கி வருகிறது –

சென்னையில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு 10,000 வீடுகள் ஒதுக்கீடு:5 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஜெயலலிதா

சென்னையில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு 10,000 வீடுகள் ஒதுக்கீடு:5 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஜெயலலிதா

செவ்வாய், டிசம்பர் 29,2015, சென்னையில் வீடுகளை இழந்தவர்களுக்கு 10,000 வீடுளை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்- அமைச்சர் ஜெயலலிதா  இன்று தலைமைச் செயலகத்தில், சென்னையில் அண்மையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளை இழந்த அடையாறு கரையோரங்களில் குடிசை வீடுகளில் வசித்த குடும்பங்களுக்கு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம்  முதற்கட்டமாக சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 10,000 அடுக்குமாடி குடியிருப்புகளை

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை சிறந்த முறையில் நடத்திட ரூ.2 கோடி நிதி:முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை சிறந்த முறையில் நடத்திட ரூ.2 கோடி நிதி:முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

செவ்வாய், டிசம்பர் 29,2015, சென்னை, இந்த சீசனுக்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை சிறந்த முறையில் நடத்திட உதவிடும் வகையில் தமிழக அரசின் சார்பில் ரூ.2 கோடி நிதியை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-தமிழகத்தில் திறமைமிக்க விளையாட்டு வீரர்களை கண்டறிந்து, அவர்கள் தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வகையில் சிறந்த பயிற்சி அளித்தல், சாதனை புரியும் வீரர் வீராங்கனைகளுக்கு

தமிழகம் முழுவதும் ரூ.71.55 கோடி மதிப்பிலான வருவாய்த்துறை கட்டிடங்கள்:முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் ரூ.71.55 கோடி மதிப்பிலான வருவாய்த்துறை கட்டிடங்கள்:முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

செவ்வாய், டிசம்பர் 29,2015, சென்னை,தமிழகம் முழுவதும் ரூ.71.55 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மாவட்ட கலெக்டர் வளாகம் அரசின் மக்கள் நலத் திட்டங்களை ஏழை-எளிய மக்களிடையே முறையாக கொண்டுசென்று அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்கும் வருவாய்த்துறையின் மேம்பாட்டிற்காக, புதிய வருவாய் வட்டங்களை உருவாக்குதல், வருவாய்த்துறைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டிடங்கள் கட்டுதல், அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு

தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன :பயனாளிகள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி

தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன :பயனாளிகள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி

திங்கள் , டிசம்பர் 28,2015, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, சிறப்புத் திட்டங்களின் கீழ், தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்தில், 10,422 பயனாளிகளுக்கு 9 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திரு. நத்தம் ஆர். விஸ்வநாதன் வழங்கினார்.

மழை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு,நிவாரண உதவிகள் வழங்கும் பணி தீவிரம்:முதல்வர் ஜெயலலிதாவிற்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

மழை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு,நிவாரண உதவிகள் வழங்கும் பணி தீவிரம்:முதல்வர் ஜெயலலிதாவிற்கு  பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

திங்கள் , டிசம்பர் 28,2015, தமிழகத்தில் கனமழை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அண்மையில் பெய்த கனமழை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, நிவாரண உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிதியுதவிகளும் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்திற்கு பலியான

மழை வெள்ளத்தினால் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இழந்த பல்லாயிரக்கணக்கானோர்,முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், கட்டணமின்றி நகல் சான்றிதழ்களை சிறப்பு முகாம்கள் மூலம் பெற்று பயனடைந்தனர்

மழை வெள்ளத்தினால் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இழந்த பல்லாயிரக்கணக்கானோர்,முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், கட்டணமின்றி நகல் சான்றிதழ்களை சிறப்பு முகாம்கள் மூலம் பெற்று  பயனடைந்தனர்

திங்கள் , டிசம்பர் 28,2015, மழை வெள்ளத்தினால் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இழந்த பல்லாயிரக்கணக்கானோர்,முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், கட்டணமின்றி நகல் சான்றிதழ்களை சிறப்பு முகாம்கள் மூலம் பெற்று  பயனடைந்தனர் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ஏராளமானோர் தங்களது வீட்டுமனைப்பட்டா, கல்வி சான்றிதழ், எரிவாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நிலம் மற்றும் வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட பல்வேறு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில்,ஆம்வே இந்தியா நிறுவன தொழிற்சாலையை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில்,ஆம்வே இந்தியா நிறுவன தொழிற்சாலையை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

திங்கள் , டிசம்பர் 28,2015, முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஆம்வே இந்தியா நிறுவன தொழிற்சாலையை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் அமெரிக்காவின் மிகப்பெரிய 25 தனியார் நிறுவனங்களில் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்ட ஆம்வே நிறுவனமானது 55 ஆண்டு கால பாரம்பரிய நிறுவனமாகும் – இந்நிறுவனம் ஊட்டச்சத்து, அழகு சாதனப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து

கனமழைக்கு பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

கனமழைக்கு பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

திங்கள் , டிசம்பர் 28,2015, சென்னை,கனமழைக்கு பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கனமழை காரணமாக 4.12.2015 அன்று திருநெல்வேலி மாவட்டம், ராயகிரி பகுதியைச் சேர்ந்த மாடன் என்பவரின் மகன் சிவன்பாண்டியன்; சென்னை, பள்ளிக்கரனை பகுதியைச் சேர்ந்த மருதநாயகம் மற்றும் அவரது மனைவி நிர்மலா புஷ்பம்; 5.12.2015 அன்று செய்யார் வட்டம், திருவத்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த காங்கன் என்பவரின் மகன்

மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு:22,852 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்துள்ளதால் முதலமைச்சருக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு:22,852 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்துள்ளதால் முதலமைச்சருக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

ஞாயிறு, டிசம்பர் 27,2015, முதலைமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கேற்ப மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடங்கிய 22,852 ஏக்கர் நிலங்களுக்கு, பாசன வசதி கிடைத்துள்ளதால், மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். முதலைமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கேற்ப திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு பிரதான கால்வாயில் 1 , 2, 3 மற்றும் 4வது பிரிவு பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு கலெக்டர் மு.கருணாகரன் தலைமையில், விஜிலா சத்தியானந்த் எம்.பி, கே.ஆர்.பி பிரபாகரன்