ஜார்ஜியா நாட்டில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக மாணவரை மாணவரை இந்தியா அழைத்துவர ரூ.18 லட்சம் உதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜார்ஜியா நாட்டில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக மாணவரை மாணவரை இந்தியா அழைத்துவர ரூ.18 லட்சம் உதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, மார்ச் 07, 2017, சென்னை : ஜார்ஜியா நாட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் திரு.சீனிவாசன் விஜயகுமார், மேல்சிகிச்சைக்காக இந்தியா அழைத்துவர ஏற்படும் 18 லட்சம் ரூபாய் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஜார்ஜியா நாட்டின் தலைநகரான திபிலிசியில் உள்ள ஐரோப்பிய மருத்துவப் பயிற்சி பல்கலைக்கழகத்தில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் விஜயகுமார் என்பவர் படித்து

31 மாவட்ட விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் வறட்சி நிவாரண நிதி : முதல்வர் தொடங்கி வைத்தார்

31 மாவட்ட விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் வறட்சி நிவாரண நிதி : முதல்வர் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, மார்ச் 07, 2017, சென்னை : அனைத்து விவசாயிகளுக்கும் மின்னணு பணப்பரிவர்த்தனை மூலம் வங்கிக்கணக்கில் நிவாரணத்தொகை வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மேலும்  வறட்சியால் பாதிக்கப்பட்ட  31 விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையை முதல்வர் தலைமைச் செயலகத்தில் நேற்று நேரில் வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு:-கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை மூலம் தமிழகத்துக்கு மிகக் குறைவான மழையே கிடைத்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்குக் கடும் வறட்சி

உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஓ. பன்னீர் செல்வம் அணிக்கு போலீசார் அனுமதி

உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஓ. பன்னீர் செல்வம் அணிக்கு போலீசார் அனுமதி

செவ்வாய்க்கிழமை, மார்ச் 07, 2017, சென்னை : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் உண்ணாவிரதத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதை வலியுறுத்தி புதன்கிழமையன்று (மார்ச் 8) தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர். சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்க பகுதியில் உண்ணாவிரதம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இந்த உண்ணாவிரதத்துக்கு சென்னை பெருநகர காவல்துறை

ஒரு குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கி விட்டது : ஆனந்தராஜ் குற்றச்சாட்டு

ஒரு குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கி விட்டது : ஆனந்தராஜ் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, மார்ச் 07, 2017, சென்னை : அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கிவிட்டதாக நடிகர் ஆனந்தராஜ் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆனந்தராஜ், ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சி சென்றுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் எம்ஜிஆரால் அதிமுக தொடங்கப்பட்டது. அந்த கொள்கையையே ஜெயலலிதாவும் கடைபிடித்தார். ஆனால், அதிமுக தற்போது ஒரு குடும்பத்தின் பிடியில் சென்று விட்டது என்றார். கட்சியில் குடும்பத்தினரின் தலையீடு இருக்காது என்று டிடிவி தினகரன் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது? எனக் கேள்வி எழுப்பிய ஆனந்தராஜ்,

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு

மறைந்த முதல்வர்  ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு

திங்கட்கிழமை, மார்ச் 06, 2017, சென்னை:  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த எய்ம்ஸ் மருத்துவர்களின் மருத்துவ அறிக்கை இன்று வெளியாகி உள்ளது. இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாட்டின் உயரிய மருத்துவ நிறுவனமான எய்ம்ஸ் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: எய்ம்ஸ் சார்பில் அதன் மருத்துவர்கள் ஐந்து

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நியாயம் கிடைக்கும்வரை போராட்டம் ; ஓ.பன்னீர்செல்வம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நியாயம் கிடைக்கும்வரை போராட்டம் ; ஓ.பன்னீர்செல்வம்

திங்கட்கிழமை, மார்ச் 06, 2017, சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நியாயம் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் நேற்று திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் டாக்டர் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, க.பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.சி.டி.பிரபாகர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–  மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதா

உண்மையான அதிமுக தொண்டர்கள் பன்னீர் செல்வம் அணிக்கு வர வேண்டும் : நடிகை லதா வேண்டுகோள்

உண்மையான அதிமுக தொண்டர்கள் பன்னீர் செல்வம் அணிக்கு வர வேண்டும் : நடிகை லதா வேண்டுகோள்

செவ்வாய், மார்ச் 05, 2017 , சென்னை : முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து,  நடிகை லதா தனது ஆதரவைத் தெரிவித்தார்.அப்போது அவர் உண்மையான அதிமுக தொண்டர்கள் பன்னீர் செல்வம் அணிக்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு நடிகை லதா இன்று காலை சென்றார். அப்போது, அவரிடம் தனது ஆதரவைத் தெரிவித்தார்.பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’ஜெயலலிதா வழியிலான

ரூ.1,486 கோடியில் நலத்திட்டங்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

ரூ.1,486 கோடியில்  நலத்திட்டங்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

செவ்வாய், மார்ச் 05, 2017 , சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் ரூ.1,486.12 கோடி மதிப்பிலான நிறைவு பெற்ற பணிகளையும் புதிய திட்டப் பணிகளையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று  நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய திட்டங்களுக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். திட்டப் பணிகள் குறித்த தகவல்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுப் பேசியதாவது: சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

செவ்வாய், மார்ச் 05, 2017 , சென்னை : ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி சென்னை ஆர்.கே. நகரில் நேற்று சனிக்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பேசியது: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் நடந்து வரும் போராட்டங்கள் மக்களின் மன உணர்வுகளை காட்டுகிறது. அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில்