வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவல்துறை அலுவலகக் கட்டடங்களை மறு சீரமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவல்துறை அலுவலகக் கட்டடங்களை மறு சீரமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி, டிசம்பர் 25, தமிழகத்தில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவல் நிலையங்கள், காவல்துறை அலுவலகக் கட்டடங்கள், காவலர் குடியிருப்புகள், தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஆகியவற்றை மறு சீரமைப்பது தொடர்பான தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவல்துறை கட்டடங்கள் மற்றும் உடைமைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விவரங்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிக்கப்பட்டது. மழையினால் பாதிக்கப்பட்ட காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள்,

வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1 கோடி நிதி திரிபுரா முதலமைச்சருக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1 கோடி நிதி திரிபுரா முதலமைச்சருக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

வெள்ளி, டிசம்பர் 25, சென்னை : தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிக்க, தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா, திரிபுரா முதலமைச்சர் . மாணிக் சர்க்காருக்கு நன்றி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா, திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்காருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். வெள்ளத்தால்

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, கிறிஸ்தவப் பெருமக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, கிறிஸ்தவப் பெருமக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

வியாழன் , டிசம்பர் 24,2015, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா, கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அனைவரிடத்தும் அன்பு காட்டி, கருணையின் வடிவமாய் விளங்கிய இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என தமது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச்

மணிமுத்தாறு அணையிலிருந்து பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு – 22,852 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெற நடவடிக்கை

மணிமுத்தாறு அணையிலிருந்து பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு – 22,852 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெற நடவடிக்கை

வியாழன் , டிசம்பர் 24,2015, திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு நாளைமுதல் தண்ணீர் திறந்துவிட, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதன்மூலம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 22 ஆயிரத்து 852 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்குக் கோரிக்கைகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று,

எம்.ஜி.ஆர். நினைவுநாள்:தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து அ.இ.அ.தி.மு.க.வினர் அஞ்சலி

எம்.ஜி.ஆர். நினைவுநாள்:தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து அ.இ.அ.தி.மு.க.வினர் அஞ்சலி

வியாழன் , டிசம்பர் 24,2015, அ.இ.அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், பாரத் ரத்னா, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 28-வது ஆண்டு நினைவுதினத்தை யொட்டி, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கும், திருவுருவப் படங்களுக்கும் மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கூட்டுச் சாலையில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு, அமைச்சர் திரு. முக்கூர் N. சுப்பிரமணியன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கீழ்பெண்ணாத்தூர் பேருந்து

எம்.ஜி.ஆர். 28-வது நினைவுநாள்: முதல்வர் ஜெயலலிதா மலர்தூவி அஞ்சலி- அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க உறுதி மொழி

எம்.ஜி.ஆர். 28-வது நினைவுநாள்: முதல்வர் ஜெயலலிதா மலர்தூவி அஞ்சலி- அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க உறுதி மொழி

வியாழக்கிழமை, டிசம்பர் 24, முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 28வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இதையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களும் மரியாதை செலுத்தினர்.அதன் பிறகு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழியை ஏற்றனர். அதில் கூறி இருப்பதாவது:– இதய தெய்வம் எம்.ஜி.ஆரின் ஆணைக்கு இணங்க, அ.தி.மு.க. தலைமைப் பொறுப்பினை ஏற்று, 7ஆவது

முதலமைச்சர் உத்தரவுப்படி,கும்பகோணத்தில் உள்ள 5 வடிநீர் வாய்கால்கள் தூர் வாரப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

முதலமைச்சர் உத்தரவுப்படி,கும்பகோணத்தில் உள்ள 5 வடிநீர் வாய்கால்கள் தூர் வாரப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

வியாழக்கிழமை, டிசம்பர் 24, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள 5 வடிநீர் வாய்கால்கள் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தூர் வாரப்பட்டு வருவது, அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்க அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கும்பகோணம் நகர மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் வழியாக செல்லும் உள்ளூர் வாய்க்கால், பெரும்பாண்டி வாய்க்கால், பழவாத்தான் கட்டளை வாய்க்கால், ஓலைப்பட்டின வாய்க்கால் மற்றும் மோரி வாய்க்கால் ஆகிய

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

வியாழக்கிழமை, டிசம்பர் 24, வரும் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை நடத்தும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்: பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி பல நூற்றாண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இது கிராமப்புற, விவசாய மரபுகளின் ஒரு பகுதியாகவே உள்ளது. பிராணிகள்

சமுதாயத்தில் உயரிய அங்கீகாரம் கிடைக்க செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,திருநங்கைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில் நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது

சமுதாயத்தில் உயரிய அங்கீகாரம் கிடைக்க செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,திருநங்கைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில்  நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது

புதன், டிசம்பர் 23,2015, மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த திருநங்கைகளுக்கு சமுதாயத்தில் உயரிய அங்கீகாரம் கிடைக்க, பல்வேறு சிறப்புத்திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திண்டுக்கல்லில் நடைபெற்ற சட்ட உதவி முகாமில் நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட சமரச தீர்வுமையத்தில் முதல் முறையாக திருநங்கைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் கலந்துகொண்டு பேசிய மாவட்ட முதன்மை நீதிபதி செல்வி பூர்ணிமா,

“மீலாதுன் நபி” திருநாளை முன்னிட்டு, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், முதலமைச்சர் ஜெயலலிதா உளம் கனிந்த நல்வாழ்த்து

“மீலாதுன் நபி” திருநாளை முன்னிட்டு, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், முதலமைச்சர் ஜெயலலிதா உளம் கனிந்த நல்வாழ்த்து

புதன், டிசம்பர் 23,2015, முதலமைச்சர் ஜெயலலிதா, “மீலாதுன் நபி” திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த தினமான “மீலாதுன் நபி” திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், தமது உளம் கனிந்த “மீலாதுன் நபி” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த தினமான “மீலாதுன் நபி” திருநாளை முன்னிட்டு, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், முதலமைச்சர் ஜெயலலிதா தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நபிகள்