ரூ.25 கோடி நிதியுதவி அளித்த உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி

ரூ.25 கோடி நிதியுதவி அளித்த உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி

சனி, டிசம்பர் 12,2015, தமிழக வெள்ள நிவாரணப் பணிக்காக ரூ.25 கோடி நிதியுதவி அளித்த உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், “தமிழக வெள்ள நிவாரணப் பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு தாராளமாக ரூ.25 கோடி அளித்ததற்காக தங்களுக்கு உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலையை மீட்டெடுக்க தமிழக அரசு ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறது” எனஅந்த கடிதத்தில்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க,மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை கண்டறிந்து நிவாரண நிதி வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க,மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை கண்டறிந்து நிவாரண நிதி வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சனி, டிசம்பர் 12,2015, முதலமைச்சர்  ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, சென்னையில் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை கண்டறிந்து நிவாரண நிதி வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஒருவாரத்தில் நிறைவடையும் என ஊழியர்கள் தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழையால் சென்னை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்களை கண்டறிந்து உரிய நிவாரண நிதி வழங்கிட, முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தொல்லியல்துறை ஆணையர் திரு. டி. கார்த்திகேயன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்

வெள்ளத்தால் பாதித்த வாகனங்களுக்கு இன்று முதல் இலவச பழுது நீக்கு முகாம்,சான்று ஆவணங்கள் ஏதும் தேவையில்லை:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளத்தால் பாதித்த வாகனங்களுக்கு இன்று முதல் இலவச பழுது நீக்கு முகாம்,சான்று ஆவணங்கள் ஏதும் தேவையில்லை:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, டிசம்பர் 12,2015, சென்னை- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பழுதடைந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றுக்கான இலவசமாக பழுதுபார்க்கும் சிறப்பு முகாம்களை இன்று முதல் 21.12.15 வரை 10 நாட்களுக்கு மோட்டார் வாகன நிறுவனங்கள் நடத்துகின்றன.இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள 200-க்கும் அதிகமான முகவர்கள் மூலம் இந்த பழுது பார்க்கும் கட்டணமில்லா சேவை முகாம் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள்-ஆட்டோக்களை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இழந்துள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களின் நகல்களை வழங்க 132 முகாம்கள், : முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி, டிசம்பர் 11,2015, கனமழை மற்றும் வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை இழந்த பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவியர்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், சான்றிதழ்களின் நகல்களை வழங்குவதற்கான முகாம்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உரிய வழிமுறைகளைப் பின்பற்றி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் நகல்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் ஆகிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இழந்துள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு, முதலமைச்சர்

கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, நடைபெற்று வரும் சீரமைப்பு – நிவாரணப் பணிகளால் – இயல்பு நிலை திரும்பியது:கடலூர் மக்கள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி,  நடைபெற்று வரும் சீரமைப்பு – நிவாரணப் பணிகளால் – இயல்பு நிலை திரும்பியது:கடலூர் மக்கள் மகிழ்ச்சி

வெள்ளி, டிசம்பர் 11,2015, கனமழையினால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு- நிவாரணப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டதால், அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. முதலமைச்சரின் நடவடிக்கைக்கு, கடலூர் மக்கள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர். அண்மையில் பெய்த கனமழையினால், பாதிக்கப்பட்ட கடலூரில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, அமைச்சர்கள், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட அரசின் பல்வேறுத்துறையினர் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, மருத்துவ

முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது :சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது :சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

வெள்ளி, டிசம்பர் 11,2015, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, சென்னையில் வெள்ளம் பாதித்த இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தினமும் ஏராளமானோர் இந்த முகாம் மூலம் பயனடைந்து வருகின்றனர். சென்னையில் செயல்பட்டு வரும் இந்த மருத்துவ முகாம்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் பார்வையிட்டார்.

தமிழகத்தை ‘கடும் இயற்கை பாதிப்பு’ மாநிலமாக அறிவித்தது மத்திய அரசு:முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை ஏற்பு

தமிழகத்தை ‘கடும் இயற்கை பாதிப்பு’ மாநிலமாக அறிவித்தது மத்திய அரசு:முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை ஏற்பு

வெள்ளி, டிசம்பர் 11,2015, மத்திய அரசு, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ‘கடுமையான இயற்கை பாதிப்புகள்’ என அறிவித்துள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். முன்னதாக, தமிழகத்துக்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ‘தேசிய பேரிடர்’ என அறிவிக்கும்படி பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டது கவனிக்கத்தக்கது. முதல்வர் ஜெயலலிதா  வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வழக்கமாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய நீடிக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை

வெள்ளம் காரணமாக,தொற்று நோய் பரவாமல் தடுக்க ஆட்டோ வாகனங்களில் ஒலிப் பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளம் காரணமாக,தொற்று நோய் பரவாமல் தடுக்க ஆட்டோ வாகனங்களில் ஒலிப் பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வியாழன் , டிசம்பர் 10,2015, சென்னையில் மழை வெள்ளம் காரணமாக, நோய் ஏற்படாமல் இருப்பதற்காக பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து, முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவுப்படி, ஆட்டோ வாகனங்களில் ஒலிப் பெருக்கி பொருத்தப்பட்டு, விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பிரச்சாரத்தை தொடங்கிவைத்தார். பின்னர் பேசிய, அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் பரவாமல் இருக்க மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் பல்வேறு பன்முக சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பபட்டுள்ளது. அதன்

சென்னை மாநகர் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்கிற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு, பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்: “தினமணி” நாளிதழ் பாராட்டு

சென்னை மாநகர் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்கிற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு, பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்: “தினமணி” நாளிதழ் பாராட்டு

வியாழன் , டிசம்பர் 10,2015, சென்னையிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் சென்னை மாநகர பேருந்துகளில் கடந்த 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்ற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் அறிவிப்பு, பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருந்ததாக பிரபல தமிழ் நாளிதழான “தினமணி” பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பாதிப்பு அடைந்துள்ள மக்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின் பேரில்

திருவாரூர் மாவட்டத்தில்,பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ஆர். காமராஜ் நேரில் ஆய்வு:முதலமைச்சர் அறிவித்தபடி நிவாரண உதவிகளையும் வழங்கினார்

திருவாரூர் மாவட்டத்தில்,பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்  ஆர். காமராஜ் நேரில் ஆய்வு:முதலமைச்சர் அறிவித்தபடி நிவாரண உதவிகளையும் வழங்கினார்

வியாழன் , டிசம்பர் 10,2015, திருவாரூர் மாவட்டத்தில், கடந்த ஒருவாரகாலமாக பெய்த தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காவேரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை பாசன மாவட்டமான திருவாரூரில், கடந்த ஒருவார காலமாக பெய்த தொடர் மழை காரணமாக, 69,213 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் நீரால் சூழப்பட்டன. இந்நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா ஆணைக்கிணங்க, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் திரு. ஆர். காமராஜ், மாவட்ட ஆட்சியர்