தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக குமரி மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் நியமனம்

தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக குமரி மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் நியமனம்

ஞாயிறு, மார்ச் 5, 2017 , நாகர்கோவில் :  டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை தமிழக அரசு நியமித்துள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில், இவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். கேபினட் அந்தஸ்து கொண்ட இந்த சிறப்பு பிரதிநிதி பதவிக்கு தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டிருப்பதால், அவர், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும்

மஞ்சுவிரட்டின்போது மரணமடைந்த காவலரின் மனைவிக்கு அரசு வேலை : அரசாணையை வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மஞ்சுவிரட்டின்போது மரணமடைந்த காவலரின் மனைவிக்கு அரசு வேலை : அரசாணையை வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சனிக்கிழமை, மார்ச் 04, 2017, சென்னை : விருதுநகர் மாவட்டம் கான்சாபுரம் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சின்போது காளை மாடு குத்தியதால் உயிரிழந்த காவலர் சங்கரின் மனைவிக்கு அரசு வேலைக்கான அரசாணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வழங்கினார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் உட்கோட்டம், கான்சாபுரம் கிராமத்தில், கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தனி ஆயுதப்படை காவலர் திரு.வே. சங்கர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக காளைமாடு

நீதி விசாரணை அறிவிப்பு மார்ச் 8-ம் தேதி மாலைக்குள் அறிவிக்காவிட்டால் அறப்போராட்டம் வெடிக்கும் : ஓ.பன்னீர்செல்வம்

நீதி விசாரணை அறிவிப்பு மார்ச் 8-ம் தேதி மாலைக்குள் அறிவிக்காவிட்டால் அறப்போராட்டம் வெடிக்கும் : ஓ.பன்னீர்செல்வம்

சனிக்கிழமை, மார்ச் 04, 2017, சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணையை மார்ச் 8-ம் தேதி மாலைக்குள் அறிவிக்காவிட்டால் அறப்போராட்டம் வெடிக்கும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எச்சரித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது :- மறைந்த முதல்வரின் மரணம் தொடர்பாக 7.5 கோடி மக்கள் மனதிலும் சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தை போக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. 75 நாட்களாக மருத்துவமனையில் அவர் இருந்த போது அளிக்கப்பட்ட சிகிச்சைகள்

முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் : பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை

முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் : பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை

சனிக்கிழமை, மார்ச் 04, 2017, சென்னை : தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவெடுக்கும் வகையில் பட்ஜெட்டை இறுதிசெய்வதற்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங் கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,

தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் இடம் பிடித்த 7 மாணவ – மாணவிகளுக்கு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்

தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் இடம் பிடித்த 7 மாணவ – மாணவிகளுக்கு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்

சனிக்கிழமை, மார்ச் 04, 2017, சென்னை : 2015-2016-ம் கல்வியாண்டில் 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் 2 மற்றும் 3-ம் இடம் பிடித்த சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மாணவ – மாணவிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.பிறமாவட்டங்களைச் சார்ந்த மாணவ-மாணவியர்களுக்கு அந்தந்த மாவட்ட தலை நகரங்களில் மாண்புமிகு அமைச்சர்

சசிகலாவுக்கு பதவி வழங்கிய விவகாரம் தொடர்பாக டி.டி.வி.தினகரன் அனுப்பிய பதிலை ஏற்க தேர்தல் கமிஷன் மறுப்பு

சசிகலாவுக்கு பதவி வழங்கிய விவகாரம் தொடர்பாக டி.டி.வி.தினகரன் அனுப்பிய பதிலை ஏற்க தேர்தல் கமிஷன் மறுப்பு

சனிக்கிழமை, மார்ச் 04, 2017, புதுடெல்லி : அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு பதவி வழங்கிய விவகாரம் தொடர்பாக டி.டி.வி.தினகரன் அனுப்பிய பதிலை ஏற்க மறுத்துவிட்ட தேர்தல் கமிஷன், 10-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு சசிகலாவுக்கு உத்தரவிட்டு இருக்கிறது. இது தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தேர்தல் ஆணையச் செயலாளர் பிரமோத் குமார் சின்ஹா வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில், ’கடந்த பிப்ரவரி 2,15,17 ஆகிய தேதிகளில் உங்கள் பெயருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதங்களுக்கு டி.டி.வி.

அதிமுக ஒரே இயக்கமாக செயல்பட ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை தீபா ஏற்க வேண்டும் : பாண்டியராஜன் வேண்டுகோள்

அதிமுக ஒரே இயக்கமாக செயல்பட ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை தீபா ஏற்க வேண்டும் : பாண்டியராஜன் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, மார்ச் 03, 2017, சென்னை : அதிமுக பிரியாமல் ஒரே இயக்கமாக செயல்படுவதற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை தீபாவும், அவரது ஆதரவாளர்களும் ஏற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கேட்டுக் கொண்டார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:- தற்போதைய நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை வரவேற்கிறோம். ஏற்கெனவே இரு கரங்களாக நாங்கள் (ஓபிஎஸ், தீபா) செயல்படுவோம் என

48 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் கடிதம்

48 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் கடிதம்

வெள்ளிக்கிழமை, மார்ச் 03, 2017, சென்னை : இலங்கை சிறையில் உள்ள 48 மீனவர்களையும் பிடித்துவைக்கப்பட்டுள்ள 122 படகுகளையும் விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தின் விவரம் :- தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் இன்னொரு சம்பவத்தை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி