பாதிக்கப்பட்ட ஆர்.கே.நகர் பகுதிக்கு,அமைச்சர் விஸ்வநாதன் தலைமையிலும்,திருவொற்றியூர் பகுதியில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலும் வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

பாதிக்கப்பட்ட ஆர்.கே.நகர் பகுதிக்கு,அமைச்சர் விஸ்வநாதன் தலைமையிலும்,திருவொற்றியூர் பகுதியில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலும் வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

ஞாயிறு, டிசம்பர் 06,2015, தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை மென்மேலும் துரிதப்படுத்தி வருகின்றனர். முதலமைச்சர் ஆணைப்படி நிவாரண உதவிகளும் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. மழைக்கால தொற்று நோய் பரவாமல் தடுக்க, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன. இந்நிலையில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டஆர்.கே.நகர் பகுதிக்கு அமைச்சர் விஸ்வநாதன் தலைமையிலும்,திருவொற்றியூர் பகுதியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

விரைந்து நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, காது கேளாத,வாய் பேச இயலாத சிறுமலர் பள்ளி நிர்வாகம் பாராட்டு !

விரைந்து நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, காது கேளாத,வாய் பேச இயலாத சிறுமலர் பள்ளி நிர்வாகம் பாராட்டு !

ஞாயிறு, டிசம்பர் 06,2015, சென்னை,  முதலமைச்சர்ஜெயலலிதாவுக்கு லிட்டில் பிளவர் கான்வென்ட் நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு; கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக, சென்னை அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகில் அமைந்துள்ள சிறுமலர் பள்ளியில் மழை நீர் புகுந்தது. இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட காது கேளாத, மற்றும் வாய் பேச இயலாத மற்றும் பார்வையற்ற மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இச்செய்தியறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மாநகராட்சி மற்றும் தீயணைப்புத்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நேரத்தில் கை கொடுத்த கட்டணமில்லா பேருந்து பயணம்:முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு தரப்பினர் நன்றி

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நேரத்தில் கை கொடுத்த கட்டணமில்லா பேருந்து பயணம்:முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு தரப்பினர் நன்றி

ஞாயிறு, டிசம்பர் 06,2015, சென்னை, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் இலவச பஸ் சேவை கை கொடுத்துள்ளது. அனைத்து பஸ்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. எந்த வித கட்டணமின்றி மாறி, மாறி பஸ்களில் பயணம் செய்து தங்கள் இலக்கை பொது மக்கள் அடைந்தனர்.இதனால் பல்வேறு தரப்பினரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். பேய் மழை; சென்னை மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களை புரட்டி போட்ட பேய் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதித்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

ஞாயிறு, டிசம்பர் 06,2015, சென்னை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தட்டுப்பாடின்றி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– ஜெயலலிதா உத்தரவு தமிழ்நாடு முதல்–அமைச்சர் ஜெயலலிதா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்கு, தட்டுப்பாடின்றி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்க உத்தரவிட்டுள்ளார். இந்த

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில்,சென்னையில் 32 இடங்களில் கூடுதலாக 11 நகரும் மலிவுவிலை காய்கறி கடைகள்:தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில்,சென்னையில் 32 இடங்களில் கூடுதலாக 11 நகரும் மலிவுவிலை காய்கறி கடைகள்:தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

ஞாயிறு, டிசம்பர் 06,2015,   சென்னை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில்,சென்னையில் 32 இடங்களில் கூடுதலாக 11 நகரும் மலிவுவிலை காய்கறி கடைகள் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பண்ணை பசுமை கடைகள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013–ம் ஆண்டு ஜூன் 20–ந்தேதி, நுகர்வோர்களுக்கு தரமான காய்கறிகள் நியாயமான விலையில் கிடைத்திடவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திடவும், 58 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளை தொடங்கி வைத்தார். நகரும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை வலுப்படுத்த கூடுதலாக 1139 துப்புரவு பணியாளர்கள்:தமிழக அரசு நடவடிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை வலுப்படுத்த கூடுதலாக 1139 துப்புரவு பணியாளர்கள்:தமிழக அரசு நடவடிக்கை

சனி, டிசம்பர் 05,2015, சென்னை மாநகரப் பகுதியில் துப்புரவு பணிகளை வலுப்படுத்த கூடுதலாக 1139 துப்புரவு பணியாளர்கள் பிற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சென்னையில் கடந்த இரு நாட்களாக மழை குறைந்துள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபட்டு

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,மக்களுக்கு உதவிட சென்னையில் கூடுதலாக 200 வெள்ள நிவாரண சிறப்பு முகாம்கள்:அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,மக்களுக்கு உதவிட சென்னையில் கூடுதலாக 200 வெள்ள நிவாரண சிறப்பு முகாம்கள்:அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

வெள்ளி, டிசம்பர் 04,2015, சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் கூடுதலாக 200 வெள்ள நிவாரண சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முகாம்களில் மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை ஆகியவை அளிக்கப்படும் என்றும், மக்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். சென்னையில் கூடுதலாக 200 வெள்ள நிவாரண சிறப்பு முகாம்கள் அமைப்பது தொடர்பாக நல்வாழ்வுத்துறை அமைச்சர்

நிவாரணப் பணிகளில் இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை:அதிமுக அறிவிப்பு

நிவாரணப் பணிகளில் இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை:அதிமுக அறிவிப்பு

சனி, டிசம்பர் 05,2015, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாக 044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் அதிமுக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் ஒருவர் அளித்த பேட்டியில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு  சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கலாம். 044-28130787,

பேருந்தில் இலவசப் பயணம்:முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொது மக்கள் நன்றி

பேருந்தில் இலவசப் பயணம்:முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொது மக்கள் நன்றி

சனி, டிசம்பர் 05,2015,                 சென்னை மாநகரப் பேருந்துகளில் வரும் 8-ம் தேதி வரை இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததால் இன்று சென்னை மாநகரப் பேருந்துகளில் மக்கள் இலவசமாகப் பயணம் செய்தார்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இப்போது இயல்பு வாழ்க்கை படிப்படியாகத் திரும்பி வருகிறது. மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும், இந்த வேளையில் மக்கள் உள்ளூர் பயணங்கள் மேற்கொள்ளும் அவசியம் ஏற்படும். எனவே, இதற்கு வசதியாக சனிக்கிழமை

பொது மக்களுக்கு,ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை

பொது மக்களுக்கு,ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை

சனி, டிசம்பர் 05,2015, சென்னை, சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. பல இடங்களில் பால் கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக