வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா பார்வையிட்டு வருகிறார்:பார்வையிட்ட பிறகு நிவாரண உதவிகள் குறித்த முடிவு அறிவிக்கப்படும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா பார்வையிட்டு வருகிறார்:பார்வையிட்ட பிறகு நிவாரண உதவிகள் குறித்த முடிவு அறிவிக்கப்படும்

வியாழன் , டிசம்பர் 03,2015, சென்னை விடாமல்  கொட்டிய மழையால் சென்னை நகரம் முழுவதும்  வெள்ளத்தில் மிதக்கிறது.சென்னை, காஞ்சீ புரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட பகுதிகளை  முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று காலை ஹெலிகாப்டர்  மூலம் பார்வையிட்டு வருகிறார். இதற்காக அவர் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப் பட்டார். நேப்பியர் பாலம் அருகே ராணுவ குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஐ.என்.எஸ்.   அடையார்

கனமழையால் சேதமடைந்த பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா , ஹெலிகாப்டர் மூலம் இன்று பார்வையிடுகிறார்

கனமழையால் சேதமடைந்த பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா , ஹெலிகாப்டர் மூலம் இன்று பார்வையிடுகிறார்

வியாழன் , டிசம்பர் 03,2015,   சென்னை, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் இன்று பார்வையிடுகிறார். திருவள்ளூர் மாவட்டம் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– திருவள்ளூர் மாவட்டத்தில் 2–ந் தேதி சராசரியாக 24 செ.மீ. மழை பெய்துள்ளது. செம்பரம்பாக்கத்தில் 47 செ.மீ., பொன்னேரியில் 31 செ.மீ., பூந்தமல்லியில் 33 செ.மீ., செங்குன்றத்தில் 32 செ.மீ., என்ற அளவில் மழை பெய்துள்ளது. அம்பத்தூர், பொன்னேரி,

வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:

வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு:

வியாழன் , டிசம்பர் 03,2015,   சென்னை – சென்னை நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட்டனர்.. சென்னை நகரில் கடந்த சில நாட்களாக விடிய விடிய மழை கொட்டோ கொட்டென்று கொட்டி வருகிறது. எங்கும் மழைநீர் தேங்கி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மழைநீர் தேங்கிய பகுதிகளில் சென்னை மாநகராட்சி மோட்டார் யந்திரங்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எங்கெங்கு

தமிழக மழை-வெள்ளப் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தல்

தமிழக மழை-வெள்ளப் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தல்

வியாழன் , டிசம்பர் 03,2015, புதுடெல்லி, தமிழக வெள்ள சேதம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு தமிழக அ.தி.மு.க. எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். பாராளுமன்றத்தில் நேற்று 193-வது விதியின்கீழ், தமிழக வெள்ள சேதம் குறித்த ஒத்திவைப்பு தீர்மான விவாதத்தை அ.தி.மு.க. உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசுகையில், தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.8 ஆயிரத்து 480 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். உடனடியாக மத்தியப்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில்,தென் மாவட்டங்களுக்கு செல்ல மாற்றுப்பாதையில் 400 பேருந்துகள் இயக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில்,தென் மாவட்டங்களுக்கு செல்ல மாற்றுப்பாதையில் 400 பேருந்துகள் இயக்கம்

புதன், டிசம்பர் 02,2015, மழையால் பாதிக்கப்பட்டுள்ள,  பொதுமக்களுக்கு உதவும் வகையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 400 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.                                      சென்னையில் பெய்து வரும் கனமழையால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், ஏற்கனவே நிரம்பியுள்ள ஏரிகள், குளங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், சென்னையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் ஜிஎஸ்டி சாலை முழுவதும் வெள்ளம் நிரம்பியுள்ளது. பார்ப்பதற்கு அது

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழகத்தில் பெரிய அளவிலான சேதங்கள் தவிர்ப்பு – நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழகத்தில் பெரிய அளவிலான சேதங்கள் தவிர்ப்பு – நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் தகவல்

புதன், டிசம்பர் 02,2015, தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னரே, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பெருமளவு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. தெரிவித்துள்ளது. மேலும், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய பேரிடர் நிவாரண நிதியை விரைந்து வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்தமாத தொடக்கத்திலிருந்தே கனமழை பெய்து, மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி உள்ள போதிலும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அரசு நிர்வாகத்தை முழுவீச்சில் முடுக்கிவிட்டு, மேற்கொண்ட துரித நடவடிக்கைகளால், பெருமளவு உயிரிழப்பும்,

வெள்ளம் பாதிப்பு;தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்வதாக முதல்வர் ஜெயலலிதாவிடம் பிரதமர் மோடி உறுதி

வெள்ளம் பாதிப்பு;தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்வதாக முதல்வர் ஜெயலலிதாவிடம் பிரதமர் மோடி உறுதி

புதன், டிசம்பர் 02,2015,   சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தமிழகத்தில் மீண்டும் பெய்து வரும் இடைவிடாது மழை குறித்து பிரதமர் தனது கவலையை தெரிவித்தார்.  தமிழகத்தில் மழை ஓய்ந்த சில நாள்களுக்குள் 2-வது முறையாக மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் மோடி முதல்வருடன் தொலைபேசியில் பேசினார்.  அப்போது பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். தமிழகத்திற்கு

மழை – வெள்ளத்தால் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு16 லட்சம் ரூபாய் நிதியுதவி:உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு,கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்வதற்காக 15 சிறப்பு அதிகாரிகளையும் நியமித்தார்

செவ்வாய், டிசம்பர் 01,2015, முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கடந்த 28ம் தேதி, திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான், உதயனேரி கிராமத்தைச் சேர்ந்த திரு. சங்கரபாண்டி மகன் ஆறுமுக காந்தி தனது வயலுக்குச் சென்ற போது, வெள்ளப் பெருக்கின் காரணமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டம், மாம்பலம் வட்டம், கே.கே நகரைச்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,பொது மக்களுக்காக கனமழையிலும் மாநகர பஸ்கள் இயக்கம்,மழையிலும் சாலைகளை சீரமைப்புப் பணி தீவிரம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,பொது மக்களுக்காக கனமழையிலும் மாநகர பஸ்கள் இயக்கம்,மழையிலும் சாலைகளை சீரமைப்புப் பணி தீவிரம்

புதன், டிசம்பர் 02,2015,   சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையிலும் பொதுமக்களின் வசதிக்காக மாநகர பஸ்கள் நிறுத்தாமல் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கனமழை பெய்து வருவதால்,  பூந்தமல்லி சாலை, அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கியமான சாலைகள் சேதமடைந்து மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய பைக், கார் போன்ற வாகனங்களை வீடுகளில் விட்டுவிட்டு அரசு பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். மாநகர போக்குவரத்துக்கழகமும் பொதுமக்களின் வசதிக்காக பஸ்களை நிறுத்தாமல் இயக்கி

கனமழை பெய்து வரும் பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த, அமைச்சர்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

கனமழை பெய்து வரும் பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த, அமைச்சர்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், டிசம்பர் 01,2015, தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை மென்மேலும் துரிதப்படுத்தி வருகின்றனர். முதலமைச்சர் ஆணைப்படி நிவாரண உதவிகளும் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. மழைக்கால தொற்று நோய் பரவாமல் தடுக்க, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன. சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள சாலைகளில் தேங்கிய மழைநீர், உடனுக்குடன் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர்