தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வு – அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்பு

தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வு – அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்பு

செவ்வாய், டிசம்பர் 01,2015, தென் மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. நத்தம் ஆர். விசுவநாதன், வீட்டுவசதி,

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில்,தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் ஜெயலலிதா

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில்,தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் ஜெயலலிதா

செவ்வாய், டிசம்பர் 01,2015, சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியைச் சேர்ந்த 194 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம், கால்கள் பாதிக்கப்பட்ட 6 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், ஆயிரத்து 217 பள்ளி மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் ஆகியவற்றை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வழங்கினார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்களின் மனம் குளிரும் வண்ணம் திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம்

தொடர்மழை காரணமாக,அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

தொடர்மழை காரணமாக,அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், டிசம்பர் 01,2015, சென்னை, இது தொடர்பாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே அனைத்து துறை அதிகாரிகளும் எனது ஆணையின் பேரில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனினும், ஒரு சில தினங்களில் மிக அதிக அளவு மழைப் பொழிவு ஏற்பட்டதால், சில மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் மூத்த

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகத்தான திட்டங்களால் அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது : இந்திய – அமெரிக்க அசோசியேஷன் பாராட்டு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகத்தான திட்டங்களால் அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது : இந்திய – அமெரிக்க அசோசியேஷன் பாராட்டு

செவ்வாய், டிசம்பர் 01,2015, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மகத்தான திட்டங்களால் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு, இந்தியாவிலேலேயே முன்னணி மாநிலமாக தலைசிறந்து விளங்குவதாக, இந்திய – அமெரிக்க அசோசியேஷன் சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சியின்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்திய – அமெரிக்க அசோசியேஷன் சார்பில், Elihu Yale International collegiate debate – எனப்படும் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற

சென்னையில், 334 மின்பகிர்மான பெட்டிகள், 106 கிலோ மீட்டருக்கு புதிய மின்கம்பிகள் அமைக்கும் பணி தீவிரம்:மழையினால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை

சென்னையில், 334 மின்பகிர்மான பெட்டிகள், 106 கிலோ மீட்டருக்கு புதிய மின்கம்பிகள் அமைக்கும் பணி தீவிரம்:மழையினால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை

செவ்வாய், டிசம்பர் 01,2015, சென்னை மற்றும் சுற்றுப்புறங்களின் தாழ்வான பகுதிகளில், மழை நீர் தேங்கி இருப்பதால், அப்பகுதிகளில் உள்ள மின் பகிர்மான பெட்டிகளை, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, கூடுதலாக 3 அடி உயரத்தில் நிறுவும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை மற்றும் சுற்றுப்புறங்களின் தாழ்வான பகுதிகளில், மழை நீர் தேங்கியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, அப்பகுதிகளில் உள்ள மின் பகிர்மான பெட்டிகளை, கூடுதலாக 3 அடி உயரத்தில் நிறுவும்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், வழங்கப்பட்டுவரும் நிலவேம்பு குடிநீருக்கு, பொதுமக்களிடையே அமோக வரவேற்பு : 1,061 முகாம்களில் சுமார் 25 லட்சம் பேர் நிலவேம்பு குடிநீரை பருகிப் பயனடைந்துள்ளனர்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், வழங்கப்பட்டுவரும் நிலவேம்பு குடிநீருக்கு, பொதுமக்களிடையே அமோக வரவேற்பு : 1,061 முகாம்களில் சுமார் 25 லட்சம் பேர் நிலவேம்பு குடிநீரை பருகிப் பயனடைந்துள்ளனர்

செவ்வாய், டிசம்பர் 01,2015, மழைக்கால தொற்றுநோய்களைத் தடுக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில் வழங்கப்பட்டுவரும் நிலவேம்பு குடிநீருக்கு, பொதுமக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 5 நாட்களில் ஆயிரத்து 61 முகாம்களில் 24 லட்சத்து 61 ஆயிரம் பேர் நிலவேம்பு குடிநீரை பருகிப் பயனடைந்துள்ளனர். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவுப்படி, மழைக்கால தொற்றுநோய்களைத் தடுக்க, மருத்துவத் துறையின் சித்த மருத்துவ பிரிவு மூலம் அரசு மருத்துவமனைகள் உட்பட ஆயிரத்து 61 மையங்களில் கடந்த 25-ம் தேதி

இந்திய ஏற்றுமதி வர்த்தகத்தில் தமிழகம் பெரும்பங்கு வகிப்பதாக மத்திய தொழில்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் பாராட்டு

இந்திய ஏற்றுமதி வர்த்தகத்தில் தமிழகம் பெரும்பங்கு வகிப்பதாக மத்திய தொழில்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் பாராட்டு

செவ்வாய், டிசம்பர் 01,2015, இந்தியாவிலேயே அதிகமாக 36 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தமிழகத்தில் செயல்படுவதாகவும், அவை இந்திய ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரும்பங்கு வகிப்பதாகவும் மத்திய அரசு பாராட்டியுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமான பதிலளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், இந்திய அளவில் தற்சமயம் 204 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சிறப்புடன் செயல்படுவதாகவும், அவற்றில் பணியாற்றும் சுமார் 15 லட்சம் ஊழியர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள், இந்தியாவின் மொத்த ஏற்றுமதி

ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரையும், 2 படகுகளையும் விடுவிக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்குக் கடிதம்

ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரையும், 2 படகுகளையும் விடுவிக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்குக் கடிதம்

செவ்வாய், டிசம்பர் 01,2015, இலங்கை கடற்படையினரால்  பிடித்துச் செல்லப்பட்ட, ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரையும், 2 படகுகளையும் விடுவிக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏற்கெனவே இலங்கை சிறையில் உள்ள 29 தமிழக மீனவர்களையும், இலங்கை அரசின் வசம் உள்ள 53 மீன்பிடிப் படகுகளையும் மீட்க, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் கைது சம்பவங்களுக்கு, உடனடி

கொள்கை–குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் தஞ்சாவூர், திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை

கொள்கை–குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் தஞ்சாவூர், திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை

செவ்வாய், டிசம்பர் 01,2015,   சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அ.தி.மு.க.வின் கொள்கை–குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அ.தி.மு.க. கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் எஸ்.மதியழகன், தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம், ஆரலூர் ஊராட்சி, ஆலவேலி ஆதிதிராவிடர் காலனி கிளைச்செயலாளர் ஆர்.வீரக்குமார், திண்டுக்கல் மாவட்டம்

சாயக்கழிவுகளை சுத்திகரிக்க ஒருங்கிணைந்த சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது

சாயக்கழிவுகளை சுத்திகரிக்க ஒருங்கிணைந்த சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது

செவ்வாய், டிசம்பர் 01,2015, நாமக்கல், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் சாயக்கழிவுகளை சுத்திகரிக்க ஒருங்கிணைந்த சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்ததன் அடிப்படையில், அந்தத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, தொழில் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. P. தங்கமணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திருமதி. கோகுலஇந்திரா