முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தீவிரம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தீவிரம்

ஞாயிறு, நவம்பர் 29,2015, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, தமிழகம் முழுவதும், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் திரு. R. வைத்திலிங்கம் வழங்கினார். விலையில்லா கல்வி வழிகாட்டு கையேடுகளும் வழங்கப்பட்டன. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மகபூப்பாளையம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

விபத்துகள், நீரில் மூழ்கி உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்; முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

விபத்துகள், நீரில் மூழ்கி உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்; முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

ஞாயிறு, நவம்பர் 29,2015, சென்னை, விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கி உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விருதுநகர், திருநெல்வேலி விருதுநகர் மாவட்டம், வி.முத்துலிங்காபுரம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் குருசாமி என்பவரின் மகன் தங்கப்பாண்டி மற்றும் பழனிச்சாமி என்பவரின் மகன் பெத்துராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம்,

அம்மா உணவகத்தில் உணவை ருசித்து பார்த்த மத்திய குழுவினர்; முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுக்கு பாராட்டு

அம்மா உணவகத்தில் உணவை ருசித்து பார்த்த மத்திய குழுவினர்; முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுக்கு பாராட்டு

ஞாயிறு, நவம்பர் 29,2015, சென்னை, தமிழக வெள்ளசேதங்களை பார்வையிடுவதற்காக மத்திய அரசின் உள்துறை இணைசெயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் 8 பேர் கொண்ட குழு கடந்த 26-ந் தேதி டெல்லியிலிருந்து சென்னை வந்தனர். காஞ்சீபுரம், கடலூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அந்த குழுவினர் இறுதி நாளான நேற்று சென்னை மாவட்டத்தில் வட சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளசேத பகுதிகளை பார்வையிட்டனர். நேற்று காலை 9.40 மணிக்கு தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவிலுள்ள முகாமுக்கு மத்திய குழுவினர் வந்தனர்.

பெண்கள் பணிபுரிய தமிழகம் தான் இந்திய அளவில் சிறந்த மாநிலம்-முதலமைச்சர் ஜெயலலிதாவால் தமிழகத்துக்கு பெருமை

பெண்கள் பணிபுரிய தமிழகம் தான் இந்திய அளவில் சிறந்த மாநிலம்-முதலமைச்சர் ஜெயலலிதாவால் தமிழகத்துக்கு பெருமை

சனி,நவம்பர்,28-2015 முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பெண்களின் பாதுகாப்பிற்காக மேற்கொண்டு வரும் ஏராளமான நடவடிக்கைகளால், பெண்கள் பணிபுரிய தமிழகம் தான் இந்திய அளவில் சிறந்த மாநிலம் என பிரபல நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்வி, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்பு முடித்து தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மத்தியில், பல்வேறு திறன்வளர்ப்பு நிறுவனங்கள் இணைந்து, அவர்கள் பணிபுரிய விரும்பும் மாநிலம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் வெளியிடப்பட்ட “இந்தியா ஸ்கில்ஸ் ரிப்போர்ட் 2016”

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மினி டிராக்டர், பவர் டில்லர் வழங்கப்பட்டன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மினி டிராக்டர், பவர் டில்லர் வழங்கப்பட்டன

சனி,நவம்பர்,28-2015   ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மினி டிராக்டர், பவர் டில்லர் போன்ற விவசாயக் கருவிகள் வழங்கப்பட்டன முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, வேளாண் துறைக்கு மிகுந்த முன்னுரிமை கொடுத்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர், மினி டிராக்டர் போன்ற விவசாயக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 விவசாயிகளுக்கு பவர் டில்லர்களும், 5 விவசாயிகளுக்கு மினி டிராக்டர்களும்

சென்னையில் இந்த அளவிற்கு மழை பாதிப்புகள் ஏற்பட காரணம் முக ஸ்டாலின்: மேயர் சைதை துரைசாமி பேச்சு

சென்னையில் இந்த அளவிற்கு மழை பாதிப்புகள் ஏற்பட காரணம் முக ஸ்டாலின்: மேயர் சைதை துரைசாமி பேச்சு

சனி,நவம்பர்,28-2015 சென்னையில் இந்த அளவிற்கு மழை பாதிப்புகள் ஏற்பட காரணம் இதற்கு முன்பு மாநகராட்சி மேயராக இருந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தான் என்று மேயர் சைதை துரைசாமி குற்றம் சாட்டியுள்ளார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையால் வரலாறு காணாத மழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்று மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பேசினார். மன்ற கூட்டம் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் கட்டிடத்தில் உள்ள மன்ற கூடத்தில் நேற்று பிற்பகல்

மழை கால நிவாரணத் தொகை வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மண்பாண்ட தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்

மழை கால நிவாரணத் தொகை வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,  மண்பாண்ட தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்

சனி,நவம்பர்,28-2015 திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற மண்பாண்ட தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், மழை கால நிவாரணத் தொகை 4 ஆயிரம் ரூபாய் வழங்கிய, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டடது. பாளையங்கோட்டையில் உள்ள வண்ணார்பேட்டையில் அகில இந்திய குலார் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, மழைகால நிவாரணத் தொகையாக தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கியதற்காக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொற்றுநோய்களைத் தடுக்க, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு – தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்க படுகிறது

தொற்றுநோய்களைத் தடுக்க, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு – தமிழகம் முழுவதும்  பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்க படுகிறது

சனி,நவம்பர்,28-2015 மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்க, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் அளிக்கப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் நிலவேம்புக் குடிநீரை பருகினர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளால் இயல்புநிலை திரும்பியது :முதல்வர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க நிவாரண உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டுவருகிறது

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளால் இயல்புநிலை திரும்பியது :முதல்வர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க நிவாரண உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டுவருகிறது

சனி,நவம்பர்,28-2015 தமிழகத்தில், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளால், இயல்புநிலை திரும்பியுள்ளது. முதலமைச்சர் ஆணைக்கிணங்க, நிவாரண உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில், வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் மற்றும் கால்நடைகள் உயிரிழப்புக்கு, நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது. அமைச்சர் திரு. முக்கூர் N. சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டதுடன், நிதியுதவி மற்றும் நிவாரண உதவிப் பொருட்களை

வெள்ள நிவாரணப் பணி: முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலானதமிழக அரசுக்கு மத்தியக் குழு பாராட்டு

வெள்ள நிவாரணப் பணி: முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலானதமிழக அரசுக்கு மத்தியக் குழு பாராட்டு

சனி,நவம்பர்,28-2015 கனமழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, துரிதமாகச் செயல்பட்டு, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டிருப்பதாக, இம்மாவட்டத்தில் வெள்ள சேதங்களைப் பார்வையிட்ட மத்திய ஆய்வுக் குழு பாராட்டு தெரிவித்துள்ளது.   கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை இணைச் செயலர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் 8 உறுப்பினர்கள் கொண்ட மத்திய குழுவினர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர். பண்ருட்டி வட்டம் பெரிய காட்டுப்பாளையத்தில் வெள்ளத்தால்