மழை கொட்டி தீர்த்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மக்களை பாதுகாத்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா : ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் பாராட்டு

மழை கொட்டி தீர்த்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மக்களை பாதுகாத்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா : ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் பாராட்டு

வெள்ளி,நவம்பர்,27-2015 சென்னை உட்பட வட மாவட்டங்களில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 3 நாட்களில் கொட்டி தீர்த்த போதிலும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, பாதுகாத்தது குறித்து ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் பாராட்டு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து, பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென நம்பெருமாளை பிரார்த்திப்பதாகவும் ஆண்டவன் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீரங்கம் கோயிலில் பழைமை மாறாமல் பல கோடி ரூபாய்

உடலுறுப்புகள் தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே முதலிடம்: முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி தமிழகத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு

உடலுறுப்புகள் தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே முதலிடம்: முதலமைச்சர் ஜெயலலிதாவை  பாராட்டி தமிழகத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு

வெள்ளி,நவம்பர்,27-2015 மருத்துவ ரீதியில் மக்களுக்கு சேவை செய்வதில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அளப்பரியவை என்று மத்திய அரசு பாராட்டியுள்ளது. உடலுறுப்புகள் தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே முதலிடம் வகிப்பதற்காக தமிழகத்திற்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்திய உடலுறுப்புதான தினவிழா டெல்லியில் இன்று நடைபெற்றது. மத்திய சுகாதாரத்தறை அமைச்சர் திரு. ஜெகத் பிரசாத் நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், உடலுறுப்புகள் தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே

சிறை பிடித்த ‘29 மீனவர்கள், 53 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்’; பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம்

சிறை பிடித்த ‘29 மீனவர்கள், 53 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்’; பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம்

வெள்ளி,நவம்பர்,27-2015   சென்னை, இலங்கை சிறை பிடித்த 29 மீனவர்களையும், 53 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பாக் நீரிணைப்பகுதியில் பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள மற்றொரு சம்பவம் குறித்து தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது சம்பவங்கள் தொடர்ந்து நீடித்து வருவது,

பாசனத்துக்காக வைகை அணை நாளை திறப்பு:தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பாசனத்துக்காக வைகை அணை நாளை திறப்பு:தமிழக முதல்வர்  ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி,நவம்பர்,27-2015   வைகை அணையிலிருந்து நாளை (28.11.2015) முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதானக் கால்வாய் ஒருபோக பாசன நிலங்களுக்கும், இருபோக பாசனத்தில் இரண்டாவது போகப் பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின்கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசனப் பகுதிகளுக்கும் தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண்

முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமை கழக நிர்வாகிகள் சந்தித்து ஆசி

முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமை கழக நிர்வாகிகள் சந்தித்து ஆசி

வியாழன்,நவம்பர்,26-2015 சென்னை, முதலமைச்சர் ஜெயலலிதாவை  அ தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் சந்தித்து ஆசி பெற்றனர்.தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். . அவைத் தலைவர் இ. மதுசூதனன், அமைப்புச் செயலாளர் சி. பொன்னையன், அமைச்சர்களும், தலைமைக் கழக நிர்வாகிகளுமான ஓ. பன்னீர்செல்வம், நத்தம் இரா. விசுவநாதன், ஆர். வைத்திலிங்கம், எடப்பாடி கே. பழனிசாமி, பி. பழனியப்பன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ. தமிழ்மகன் உசேன், அமைப்புச் செயலாளர்கள் டாக்டர் விசாலாட்சி

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி,காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து சித்த மருத்துவ பிரிவுகளிலும் நிலவேம்பு குடிநீர்-கலெக்டர் தகவல்

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி,காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து சித்த மருத்துவ பிரிவுகளிலும் நிலவேம்பு குடிநீர்-கலெக்டர் தகவல்

வியாழன்,நவம்பர்,26-2015   காஞ்சீபுரம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து அரசு சித்த மருத்துவ பிரிவுகளிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது என்று கலெக்டர்.கஜலட்சுமி தெரிவித்துள்ளார். நிலவேம்பு குடிநீர் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களை கட்டுப்படுத்த அரசு ஆஸ்பத்திரிகள், வட்டம் மற்றும் வட்டம் சாரா ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களில் சித்த மருத்துவ பிரிவின்

கருணாநிதி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு – கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வலியுறுத்தல்

கருணாநிதி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு – கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வலியுறுத்தல்

வியாழன்,நவம்பர்,26-2015 முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது முதலமைச்சர் சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் திரு. எம்.எல். ஜெகன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று 2 மனுக்களை தாக்கல் செய்தார். கடந்த 21ம் தேதி முரசொலி நாளிதழில் கருணாநிதி எழுதியிருந்த கேள்வி-பதில் பகுதியில், முதலமைச்சர் குறித்தும், தமிழக அரசு பற்றியும்

வெள்ளம் வடிந்த பகுதிகளில் நோய் பரவாமல் இருக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

வெள்ளம் வடிந்த பகுதிகளில் நோய் பரவாமல் இருக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

வியாழன்,நவம்பர்,26-2015   சென்னை, வெள்ளம் வடிந்த பகுதிகளில் நோய் பரவாமல் இருக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். சுகாதாரத்துறை நடவடிக்கை கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. தற்போது வெள்ளம் வடிந்த பகுதிகளில் நோய் பரவாமல் இருக்க தமிழக அரசு சார்பில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்ட

மழையால் பாதித்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு புத்தகங்கள் இலவசமாக வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

மழையால் பாதித்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு புத்தகங்கள் இலவசமாக வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வியாழன்,நவம்பர்,26-2015   சென்னை, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ஜெயலலிதா அறிவிப்பு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பல மாணவ–மாணவிகளின் பாடப்புத்தகங்கள் நனைந்தும், வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் அவர்கள்

தமிழக அரசின் சாதனைகள் குறித்து மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு

தமிழக அரசின் சாதனைகள் குறித்து மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு

புதன்,நவம்பர்,25-2015 முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து, மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் மகத்தான சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து, மதுரை மாவட்டம் ஒபுளா படித்துறையில், நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டி – எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி, வரலாற்று சாதனை படைத்து வரும் முதலமைச்சர் செல்வி