மின்சாரம் தாக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, மார்ச் 03, 2017, சென்னை : தமிழகம் முழுவதும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மாவட்டம், ஆலங்கனேரி கிராமத்தைச் சேர்ந்த செல்வன்.மைதீஷ்குமார்; கன்னியாகுமரி மாவட்டம், சுருளகோடு கிராமத்தைச் சேர்ந்த திரு. அய்யாதுரை, திருமதி மேரி; திற்பரப்பு கிராமத்தைச் சேர்ந்த திரு ராஜன்; வடசேரி

தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று மாலை கூடுகிறது

தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று மாலை கூடுகிறது

வெள்ளிக்கிழமை, மார்ச் 03, 2017, சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று மாலை நடைபெற உள்ளது. முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின், அவரது தலைமையில், முதல் அமைச்சரவை கூட்டம், இன்று மாலை, 4:30 மணிக்கு, தலைமை செயலகத்தில், நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், தமிழக அரசின், 2017 – 18ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும். மேலும், தமிழகத்தில் நிலவும் வறட்சி, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்குவது உட்பட, வேறு பல பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை தர்ம யுத்தம் தொடரும் : மாஃபா. பாண்டியராஜன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை தர்ம யுத்தம் தொடரும் : மாஃபா. பாண்டியராஜன்

வியாழக்கிழமை, மார்ச் 02, 2017, சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது என்று மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.  சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில், மாஃபா. பாண்டியராஜன் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது. அதனால் மத்திய அரசு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். இதை வலியுறுத்தி மார்ச் 8-இல் மாவட்டந்தோறும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. மேலும், அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அரசு அனுமதி அளிக்காது : போராட்டத்தை கைவிட நெடுவாசல் மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அரசு அனுமதி அளிக்காது : போராட்டத்தை கைவிட நெடுவாசல் மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

வியாழக்கிழமை, மார்ச் 02, 2017, சென்னை : ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழக அரசு அத்திட்டத்திற்கு அனுமதி அளிக்காது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். எனவே நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த சி.வேலு தலைமையிலான 11 பேர் கொண்ட குழு தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நேற்று சந்தித்தது.

மாணவர்கள் நலனுக்காக ‘அம்மா கல்வியகம்’ என்ற கட்டணமில்லா இணையதளத்தை தொடங்கி வைத்தார் ஓ.பன்னீர்செல்வம்

மாணவர்கள் நலனுக்காக ‘அம்மா கல்வியகம்’ என்ற கட்டணமில்லா இணையதளத்தை தொடங்கி வைத்தார் ஓ.பன்னீர்செல்வம்

புதன்கிழமை, மார்ச் 01, 2017, சென்னை : கிராமப்புற மாணவர்கள் நலனுக்காக ‘அம்மா கல்வியகம்’ என்ற பெயரில் கட்டணமில்லா புதிய இணையதளத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார். ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொன்னையன், கே.பி.முனுசாமி, மா.பா.பாண்டியராஜன், மற்றும் தொண்டர்கள், மாணவ – மாணவியர் கலந்துகொண்டனர். இந்த இணைய தளத்தில் தற்போது 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடநூல்கள் வெளியிடப்படும் என்றும் பின்னர் இது கல்லூரி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் ஒன்றிய கழகத்தின் சார்பில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம்

மறைந்த முதல்வர்  ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் ஒன்றிய கழகத்தின் சார்பில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம்

புதன்கிழமை, மார்ச் 01, 2017, திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் தங்களாச்சேரி கிராமத்தில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு திருமங்கலம் ஒன்றிய கழகத்தின் சார்பில்  பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு  அன்னதானம் வவழங்கப்பட்டது. திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலிருக்கும் அனைத்து கிராமங்கள் மற்றும் ஊராட்சிகளில் மறைந்த தமிழக முதல்வரின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கிடும் நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக தொடர்ந்து

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, மார்ச் 01, 2017, புதுடெல்லி : சென்னையில் பல ஆண்டுகளாக தேக்க நிலையில் இருக்கும் மதுரவாயல் – துறைமுகம் இடையிலான பறக்கும் சாலைத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். டெல்லிக்கு மூன்று நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்தார்.இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை அவரது இல்லத்தில் முதல்வர் பழனிசாமி சந்தித்து, மாநில நலன் சார்ந்த முக்கியத் திட்டங்களுக்கு மத்திய அரசு அளிக்க