மழை-வெள்ளம்: பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதி:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மழை-வெள்ளம்: பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதி:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

18 November 2015 மழை-வெள்ளத்தில் சிக்கி பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரியூர் கிராமத்தைச் சேர்ந்த பிரீத்தி, அரக்கோணம் அமீர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கெங்க மந்திரி, புளியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அமுதா ஆகிய 4 பேர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தனர். இதேபோல், வேலூர்

சென்னையில் கூடுதலாக 50 பண்ணை பசுமை கடைகள்: காய்கறி விலையைக் கட்டுப்படுத்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

சென்னையில் கூடுதலாக 50 பண்ணை பசுமை கடைகள்: காய்கறி விலையைக் கட்டுப்படுத்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

18 November 2015 சென்னையில் கூடுதலாக 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கடும் மழை காரணமாக, வெளிச்சந்தையில் காய்கறிகளின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த இந்தக் கடைகள் கூடுதலாக திறக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதுகுறித்து, தமிழக அரசு  வெளியிட்ட அறிவிப்பு: தமிழகம் முழுவதும் உள்ள 58 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இரண்டு நகரும் கடைகள் சென்னை மாநகரில் இயக்கப்படுகின்றன.

தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாக உள்ளது: ஜி.கே.வாசன்

தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாக உள்ளது: ஜி.கே.வாசன்

17 November 2015                     மழை நிவாரண உதவிகள் வழங்குவதில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.  தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கொட்டிதீர்த்துள்ள நிலையில் கடலூரில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய ஜி.கே வாசன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மழை நிவாரண உதவிகள் வழங்குவதில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளது.என்று கூறினார்.

முதல்வர் எங்களை மனசார வாழ்த்தினார்!- நாசர்

முதல்வர் எங்களை மனசார வாழ்த்தினார்!- நாசர்

Tuesday, November 17, 2015 சென்னை: நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை முதல்வர் ஜெயலலிதா மனதார வாழ்த்தியதாக நடிகர் நாசர் தெரிவித்தார்.                                               தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடந்தது. புதிய தலைவராக நாசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். விஷால் பொதுச்செயலாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் இருவரும் துணைத்தலைவர்களாகவும், கார்த்தி பொருளாளராகவும், 24 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.                               புதிய நிர்வாகிகள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெறவும், நடிகர் சங்க

மழை பாதிப்பு, வெள்ளநீர் சூழ்ச்சி, மற்றும் அவசர உதவி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தாலூக வாரியான தொலை பேசி எண்கள்:முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

மழை பாதிப்பு, வெள்ளநீர் சூழ்ச்சி, மற்றும் அவசர உதவி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தாலூக வாரியான தொலை பேசி எண்கள்:முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

செவ்வாய், நவம்பர் 17,2015 சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது . முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் சிறப்பு அதிகாரி ஒருவர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு, வெள்ளநீர் சூழ்ச்சி, மற்றும் அவசர உதவி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தாலூக வாரியான தொலை பேசி எண்கள் இங்கே தரப்பட்டுள்ளன . Fort-Tondiarpet 94450 00484 Purasawakkam-Perambur 94450 00485 Egmore-Nungambakkam94450 00486 Mylapore-Triplicane 94450 00487 Mambalam-Guindy 94450 00488 திருவள்ளூர் மாவட்டம்

எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரம்:மக்கள் மத்தியில் எடுபடாது பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா உறுதி

எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரம்:மக்கள் மத்தியில் எடுபடாது பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா உறுதி

November-17;2015 சென்னை: வாக்குகளை கவர்வதற்காக எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் தவறான பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா மக்கள் மத்தியில் பேசினார். தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்குஉட்பட்ட புது வண்ணாரப் பேட்டையிலுள்ள வீரராகவன் தெரு, தண்டையார்பேட்டையிலுள்ள எல்லைய முதலி தெரு, சேணியம்மன் கோவில் தெரு,எண்ணூர் ஹை ரோடு, கொருக்குப்பேட்டையிலுள்ள ஜெ ஜெ நகர்,சுண்ணாம்புக் கால்வாய், திருவள்ளூர் நகர், கொடுங்கையூரிலுள்ள

வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள 24 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள 24 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

November 16, 2015 சென்னை: சென்னை காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை நிவாரணப்பணிகளை முழு வேகத்தில் மேற்கொள்ள 24 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஜெயலலிதா புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பெருமழை பொழிந்து வருகிறது. முன்னெச்சரிக்கை, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கி நான் உத்தரவு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை நிவாரணப் பணிகளுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை நிவாரணப் பணிகளுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

16/11/2015 சென்னை: வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கவும், சீரமைப்புப் பணிகளுக்காகவும் ரூ. 500 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னரே கன மழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆய்வு- பொதுமக்களுக்கு ஆறுதல்!

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஜெயலலிதா  நேரில் ஆய்வு- பொதுமக்களுக்கு ஆறுதல்!

திங்கள் , நவம்பர் 16,2015      கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சென்னை மாநகரமே மழை வெள்ளத்தால் மூழ்கி அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்னை நகரில் எங்கெங்கும் வெள்ளம்… வெள்ள சாலைகளிலேயே படகுகள் மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.                                             இந்நிலையில் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் பார்வையிட்டார். முதலில் தமது ஆர்.கே.நகர் தொகுதியில் வெள்ள பாதிப்புகளை வேனில் அமர்ந்தபடியே அவர் பார்த்தார். பின்னர் வெள்ள நிவாரணப் பணி விவரங்களை கேட்டறிந்தார்.

பெட்ரோல் விலையுயர்வு : முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம்

பெட்ரோல் விலையுயர்வு : முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம்

திங்கள் , நவம்பர் 16,2015, சென்னை : பெட்ரோல், டீசல் விலையுயர்விற்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா வெ ளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரூபாய் மதிப்பு மற்றும் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கருத்தில் கொண்டு இந்த விலையுயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விலையுயர்வை, மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அதில் குறிப்பிட்டுள்ளார்.