ஆர்.கே. நகரில் வெள்ளப்பாதிப்புகளை முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆய்வு

ஆர்.கே. நகரில் வெள்ளப்பாதிப்புகளை முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆய்வு

திங்கள் , நவம்பர் 16,2015,                                                                                                                                                           சென்னை : சென்னையில் பெய்துவரும் கனமழையால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. மழைநீர் பல்வேறு வீடுகளில் புகுந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, முதல்வர் ஜெயலலிதா, தனது சொந்த தொகுதியான ஆர்.கே.நகர் பகுதியை நேரில் பார்வையிட்டு  நிவாரணப் பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால்: முதல்வருக்கு நன்றி

நடிகர் சங்க  தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால்: முதல்வருக்கு நன்றி

சென்னை : சென்னை தலைமைச்செயலகத்தில் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், முதல்வர் ஜெயலலிதாவை சந்தி்த்துப் பேசினர். தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தலை வெற்றிகரமாக நடக்க உறுதுணையாக இருந்ததற்காக, அப்போது அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தனர்.

முதல்வர் ஜெயலலிதா அதிரடி-ஜாதி பிரச்னையை கிளப்பியவர்கள்,கட்சியில் இருந்து நீக்கம்-முதல்வர் நடவடிக்கைக்கு, பல தரப்பினரும் வரவேற்பு

முதல்வர் ஜெயலலிதா அதிரடி-ஜாதி பிரச்னையை கிளப்பியவர்கள்,கட்சியில் இருந்து நீக்கம்-முதல்வர் நடவடிக்கைக்கு, பல தரப்பினரும் வரவேற்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கர்; சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார். இவர் மீது, கட்சியின் கறம்பக்குடி முன்னாள் ஒன்றிய செயலர் சொக்கலிங்கம்; அவரது மனைவியும், கறம்பக்குடி ஒன்றிய தலைவருமான கெங்கையம்மாள் ஆகியோர் புகார் தெரிவித்தனர். ‘தாய் சேய் நல விடுதி அமைப்பது தொடர்பாக, அமைச்சரிடம் ஆலோசிக்க சென்ற போது, ஜாதியை சொல்லி திட்டி அவமானப்படுத்தினார்’ என, இவர்கள் கூறியதை அடுத்து, அமைச்சருக்கு எதிராக, முத்தரையர் சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்; இதில், 1,852 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த

சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தோட்டக்கலைத் துறைக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவரவர் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை அவரவர் வீட்டு மாடியிலே தோட்டம் அமைத்து பயிரிடும் வகையில் ‘நீங்களே செய்து பாருங்கள்’ திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் வீட்டு மாடிகளில் காய்கறி தோட்டம் அமைக்க தோட்டக்கலைத்துறையில் 500 ரூபாய் கட்டினால் தென்னை நாரின் கழிவுகள் அடைத்து பயிரிடுவதற்கு ஏற்ற வகையிலான 6 பெரிய

முதல்வர் ஜெயலலிதா தீபாவளி வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதா தீபாவளி வாழ்த்து

சென்னை: நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன், என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.                           இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை

சென்னை திரும்பினார் முதல்வர்- கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு

சென்னை திரும்பினார் முதல்வர்- கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு

சென்னை: கோட நாட்டில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஜெயலலிதாவைகொட்டும் மழையிலும் அ.தி.மு.க.வினர் ஆயிரக்கணக்கில் திரண்டு உற்சாகமாக வரவேற்றனர்.  முதலமைச்சர் ஜெயலலிதா , கடந்த அக்டோபர் மாதம் 14 ம்தேதி கோடநாட்டுக்கு பயணமானார். அங்கிருந்தவாறே அரசுப்பணிகளை மேற்கொண்டார். உயர்கல்வித்துறை, மின்துறை, பருவ மழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு அவ்வப்போது உரிய உத்தரவுகளை பிறப்பித்தார். ஆர்.கே.நகரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியை வீடியோ கான்பரன்சிங் மூலம்

கல்வித் திட்டத்திற்கான நிதியை குறைக்காதீங்க:75 சதவீதம் அதிகரிக்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

கல்வித் திட்டத்திற்கான நிதியை குறைக்காதீங்க:75 சதவீதம் அதிகரிக்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி யை மேலும் குறைக்க்கூடாது என்றும் ,. இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, குறைந்தபட்சம் 75 சதவீத நிதியை இந்திய அரசு வழங்குமாறு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.       கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:‘சர்வசிக் ஷா அபியான்’ எனப்படும், அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதியுதவி, ஏற்கனவே, 65 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை மேலும்

இடி மின்னல் தாக்கி பலியானவர்கள் குடும்பத்துகு ஒரு லட்சம்:முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

இடி மின்னல் தாக்கி பலியானவர்கள் குடும்பத்துகு ஒரு லட்சம்:முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வேலூர் மாவட்டம்,சென்னாகுப்பம் கொல்லைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேலன் மகன் ராதாகிருஷ்ணன், அரியலூர் வட்டம், கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி கோவிந்தம்மாள்,நாகப்பட்டினம் மாவட்டம், சிறுதலைக்காடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கோவிந்தராஜ் ஆகியோர் இடி, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். பழனி நகர மத்திய பேருந்து நிலைய அம்மா உணவகத்தில் மின்கசிவு ஏற்பட்டதில் அங்கு பணியிலிருந்த அனாதை செட்டி மடத்தைச் சேர்ந்த காவேரி, மகேஸ்வரி, வீரமணி, காஞ்சனா ஆகியோர் காயமடைந்து மருத்துவ மனையில்

முத்துசாமி படைப்புகளுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ 5 லட்சம் பரிசு

முத்துசாமி படைப்புகளுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ 5 லட்சம் பரிசு

நாமக்கல் மாவட்டம், ஆர். புதுப்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த முதுபெரும் திரைப்படப் பாடலாசிரியரும், தமிழறிஞருமான முத்துசாமி படைத்துள்ள பல்வேறு நூல்களுக்குப் பரிசாக 5,00,000/- ரூபாயும், தொடரும் அவரது தமிழ்ப் பணியை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் 5,000/- ரூபாயும் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் பல்வேறு சாதனைகளையும், அரசியல் வெற்றிகளையும் போற்றி `புரட்சித் தலைவியின் புரட்சிக் காப்பியம்”, “புரட்சித் தலைவி அந்தாதி ஆயிரம்” ஆகிய நூல்களையும், கவிதைகளையும் படைத்துள்ளார். அதிமுக பொதுசெயலாளரும் தமிழக

பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம்:இலங்கை சிறைகளில் உள்ள 28 தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும்

பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம்:இலங்கை சிறைகளில் உள்ள 28 தமிழக மீனவர்களை உடனே மீட்க வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டு இருப்பதையும், தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன் பிடிப்பதை தடுக்கப்படுவதையும் உங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். தூத்துக்குடி மாவட்டம் தெரசாபுரத்தில் இருந்து கடந்த 26.9.15 அன்று 7 மீனவர்கள் ஒரு எந்திரப் படகில் மீன் பிடிக்க சென்றனர். 29.9.2015 அன்று அவர்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறை