மனித உயிர்களை காத்திட ரத்த தானம் செய்ய முன்வரவேண்டும்: முதலமைச்சர் ஜெயலலிதா அழைப்பு

மனித உயிர் காக்கும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்திடும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக அனுசரிக்கப்படுகிறது. மனித நேய வெளிப்பாட்டின் மிகச் சிறந்த அடையாளம் ரத்ததானம் ஆகும்.ஒவ்வொரு நாளும் ரத்தத்தின் தேவை அதிகரிப்பதால், தமிழ்நாட்டில் தன்னார்வ ரத்த தான முகாம்களை அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து தொண்டு நிறுவனங்களுக்கும்,

விபத்தில் உயிரிழந்த மின் ஊழியர் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் முதல்வர் ஜெயலலிதா நிதி உதவி

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் வட சென்னை அனல் மின் நிலையம் அலகு 1-ல் ஒப்பந்த தொழிலாளராகப் பணி புரிந்து வந்த பொன்னேரி வட்டம், சீமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த . தங்கவேல் என்பவரின் மகன் பாபு 28.9.2015 அன்று மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கன்வேயர் பெல்ட் அறுந்ததால், தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

குறைந்த விலையில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் விற்பனை நீடிப்பு ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை வெளிச்சந்தையில் அதிகமாக உள்ள காரணத்தால், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை மிகக் குறைந்த விலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம்  வழங்கப்பட்டு வருகின்றன.  துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவை கிலோ 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.  பொது விநியோகத் திட்டத்தின் கீழ்

முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரதிதாசன் பேரன் நன்றி

அறக்கட்டளை தலைவரும் பாரதிதாசன் பேரனுமான பாரதி அறிக்கை: புதுச்சேரி : பாரதிதாசன் பிறந்த நாள், கவிஞர் நாளாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, பாரதி தாசன் அறக்கட்டளை நன்றி தெரிவித்துள்ளது. பாரதிதாசன் பிறந்த நாள், இனி ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் கவிஞர் நாளாக கொண்டாடப்படும். பாரதிதாசன் 125வது ஆண்டு பிறந்த நாள் விழா, 125 கவிஞர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் கவியரங்கம் நடக்கும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்.இந்த

”அம்மா இலக்கிய விருது” ஆண்டுதோறும் ஒரு பெண் எழுத்தாளருக்கு வழங்கப்படும்

பெண் எழுத்தாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் நடப்பாண்டு முதல் இலக்கிய பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்மா இலக்கிய விருது என்ற புதிய விருது சித்திரை தமிழ்ப்புத்தாண்டு நாளில் வழங்கப்படும் என்றும், அதன்படி விருது பெறுபவருக்கு 1 லட்ச ரூபாய் பண முடிப்பு, தகுதி உரையும் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது தவிர, தரமான பிற மொழி படைப்புகளை சிறந்த மொழியில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டு தோறும் சிறந்த மொழி பெயர்ப்பாளர்

பொன்னேரியில் ரூ.13 ஆயிரம் கோடியில் தொழில் முனையம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரூ.13 ஆயிரத்து 314 கோடியில் தொழில் முனையம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ன்படி, சென்னை – பெங்களூரு தொழில் வளாகத் திட்டத்தில் உள்ள பொன்னேரி தொழில் முனையம் ரூ.13 ஆயிரத்து 314 கோடியில் 20 ஆண்டுகளில் 3 கட்டங்களாக மேம்படுத்தப்படும். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள 10 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 21 ஆயிரத்து 996 ஏக்கரில் இந்த மையம் அமையும். ரூ.50 கோடியில்

சுய உதவிக் குழுக்களுக்கு 20 ஆயிரம் ‘அம்மா’ அலைபேசிகள்: முதல்வர் அறிவிப்பு

சட்டசபையில் முதல்வரின் அறிவிப்பு: கடந்த, 1991ல் துவங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கை, தற்போது, ஆறு லட்சமாக உயர்ந்துள்ளது; இவற்றில், 92 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.இக்குழுக்களை இணைக்க, ஊராட்சி அளவில், கூட்டமைப்புகள் உள்ளன. ஒரு கூட்டமைப்பின் கீழ், 20 முதல், 25 குழுக்கள் உள்ளன. இவற்றை மேற்பார்வையிட, பயிற்றுனர்கள் உள்ளனர். புதிதாக சுயஉதவிக் குழுக்கள் அமைக்கவும், இவர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.குழு கூட்டங்கள், சந்தா தொகை செலுத்துதல், சேமிப்பு, உட்கடன் விவரம் மற்றும் கடன் வசூலிப்பு போன்றவற்றுக்கு, பதிவேடுகள்

பத்திரிகையாளர்களின் ஒய்வூதியம் உயர்வு முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: பத்திரிகையாளர்களின் ஒய்வூதியம் மற்றும் குடும்ப ஒய்வூதியம் ஆகியவை உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவி்த்துள்ளார்.  இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டபேரவையில் விதி எண் -110 கீழ் வெளியிட்ட அறிவி்ப்பு வருமாறு: “கத்தி முனையை விட பேனா முனை வலுவானது”” என்று பேரறிஞர் அண்ணா கூறினார். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்குபவர்கள் பத்திரிகையாளர்கள். காலம் நேரம் பாராமல் உழைக்கின்ற பத்திரிகையாளர்கள், தாங்கள் ஓய்வு பெறும் காலத்தில் மன நிறைவோடும், மன அமைதியோடும் வாழ்ந்திட

ஆர்.கே. நகர் தொகுதியில் புதிய கலைக் கல்லூரி தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார

சென்னை, முதல் – அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்ப தாவது:- கல்வி வளர்ச்சியின் மூலமே மக்களின் பொருளா தார நிலை ஏற்றம் பெறும் என்பதாலும், சமூக பொருளாதார வேறுபாடுகள் களையப்படும் என்பதாலும், பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி ஆகியவற்றிற்கு மிகுந்த முக்கியதுவத்தை எனது தலைமையிலான அரசு அளித்து வருகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 4  அரசு பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட 53 கல்லூரிகள்