அ.தி.மு.க இரு அணிகளும் விரைவில் இணையும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

அ.தி.மு.க இரு அணிகளும் விரைவில் இணையும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஆகஸ்ட் 20 , 2017 ,ஞாயிற்றுக்கிழமை,  திருவாரூர் : அ.தி.மு.க இரு அணிகளும் விரைவில் இணையும் என்று திருவாரூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருவாரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திருவாரூர் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விழாவில் கலந்து கொண்ட அவர் எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். எம்.ஜி.ஆர். திருவுருவ படத்தையும் திறந்து வைத்த அவர். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளையும் மக்களுக்கு

அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்து ஒரிரு நாளில் நல்ல முடிவு எடுக்கப்படும் : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்து ஒரிரு நாளில் நல்ல முடிவு எடுக்கப்படும் : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

ஆகஸ்ட் 20 , 2017 ,ஞாயிற்றுக்கிழமை,  சென்னை : அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து ஓரிரு நாட்களில் நல்ல முடிவு எட்டப்படும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார். அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை கீரின்வேஸ்ரோட்டில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது. நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் பகல் 1-20 மணிவரை இந்த ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் மைத்ரேயன், மனோஜ்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்கும் பணி தொடங்கியது

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்கும் பணி தொடங்கியது

ஆகஸ்ட் 20 , 2017 ,ஞாயிற்றுக்கிழமை, சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா இல்லம்’ நினைவு இல்லமாக ஆக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை தொடர்ந்து இதற்கான பணிகள் நேற்று தொடங்கின. கடந்த 17ம் தேதி அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளிக்கையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்லத்தை’ நினைவு இல்லமாக ஆக்கி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

சர்க்கரை மானியத்தை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி தர வேண்டும் : பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

சர்க்கரை மானியத்தை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி தர வேண்டும் : பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

ஆகஸ்ட் 19 , 2017 ,சனிக்கிழமை,  சென்னை : சர்க்கரை மானிய தொகையை கிலோவுக்கு ரூ.28.50 ஆக உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர்கூறியிருப்பதாவது:- அந்யோதயா அன்ன யோஜனா பயனாளிகளுக்கு மட்டும் சர்க்கரை மானியம் கிலோ ரூ.18.50 என வழங்கப்படும் என்றும், அதே நேரத்தில் ஒரு குடும்பத்துக்கு, ஒரு மாதத்துக்கு ஒரு கிலோ மட்டும்