‘எம்.ஜி.ஆர்-அம்மா- தீபா பேரவை’ என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கினார் ஜெ.தீபா

‘எம்.ஜி.ஆர்-அம்மா- தீபா பேரவை’ என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கினார் ஜெ.தீபா

சனிக்கிழமை, பிப்ரவரி 25, 2017, சென்னை  : எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கினார்.மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிடவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். சென்னை தி.நகரில் நேற்று எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையைத் தொடங்கி வைத்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேசியதாவது:- தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று இந்தப் பேரவை தொடங்கப்பட்டுள்ளது. பேரவையின் பொருளாளராக நான் செயல்படுவேன். இது கட்சியல்ல; அமைப்புதான். தற்போதைக்கு பேரவையாகச் செயல்படும்; பின்னர்

ஒரு குடும்பத்தின் பிடியில் இருக்கும் அதிமுகவை மீட்கும்வரை தர்ம யுத்தம் தொடரும் : ஓ.பன்னீர்செல்வம்

ஒரு குடும்பத்தின் பிடியில் இருக்கும் அதிமுகவை மீட்கும்வரை தர்ம யுத்தம் தொடரும் :  ஓ.பன்னீர்செல்வம்

சனிக்கிழமை, பிப்ரவரி 25, 2017, சென்னை : கட்சியும் சரி, ஆட்சியும் சரி ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்துக்குள் சென்று விட்டன  என்றும் அந்த குடும்பத்தின் பிடியில் இருந்து அதிமுகவை மீட்பதே தாங்கள் மேற்கொள்ளும் தர்ம யுத்தமாக இருக்கும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்படுகிறது. ஜெயலலிதாவின் தொகுதியயான சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற விழாவில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.15 கோடி இடைக்கால நிவாரணம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.15 கோடி இடைக்கால நிவாரணம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சனிக்கிழமை, பிப்ரவரி 25, 2017, சென்னை : எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.15 கோடி நிவாரணமாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கடலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 15 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே நடுக்கடலில் 2 சரக்கு கப்பல் மோதிக்கொண்ட விபத்தில், கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சனிக்கிழமை, பிப்ரவரி 25, 2017, சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று 69-வது பிறந்தநாள். இதையொட்டி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தமிழக அரசு சார்பிலும் ஜெயலலிதாவின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. நேற்று ஜெயலலிதாவுக்கு 69-வது பிறந்த தினம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும்

மறைந்த முதல்வர் அம்மாவின் 69-வது பிறந்த நாள் : தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அதிமுக வினர் உற்சாக கொண்டாட்டம்

மறைந்த முதல்வர் அம்மாவின் 69-வது பிறந்த நாள் : தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அதிமுக வினர் உற்சாக கொண்டாட்டம்

சனிக்கிழமை, பிப்ரவரி 25, 2017, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்டந்தோறும் கழக நிர்வாகிகள் மாண்புமிகு அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், அம்மா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 690 மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. இதில், முதல் நிகழ்ச்சியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், அமைச்சர்கள் திரு. D.