மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 690 சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு  690 சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு

சென்னை :  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சுகாதாரத் துறையின் மூலம் தமிழகத்தில் 690 சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழக சுகாதாரத் துறை, அரசு மருத்துவமனை மற்றும் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் மூலம் தமிழகம் முழுவதும் பிப்ரவரி 24 முதல் 28-ஆம் தேதி வரை 690 மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. முகாம்களில்

தமிழக அமைச்சரவையில் முதல் மாற்றம் : அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிதித்துறை ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் முதல் மாற்றம் : அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிதித்துறை ஒதுக்கீடு

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 24, 2017, சென்னை :  முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூடுதலாக கவனித்து வந்த நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் ஆகிய துறைகள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளன. இதையடுத்து ஜெயக்குமார் நிதி அமைச்சராகியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் மறைவுக்குப் பின், முதல்வ ராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். தான் கவனித்து வந்த நிதித்துறையுடன், ஜெயலலிதா கவனித்து வந்த உள்துறை, பொதுத்துறைகளையும் தன் வசமே வைத்திருந்தார். அப்போது அமைச்சராக இருந்த

அதிமுக துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் டிடிவி தினகரன்

அதிமுக துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் டிடிவி தினகரன்

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 24, 2017, சென்னை: அதிமுக துணை பொதுச் செயலாளராக சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று  டிடிவி தினகரன்  பொறுப்பேற்றார். அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் சகோதரி மகன் டிடிவி தினகரன். முன்னாள் எம்.பி.யான டிடிவி தினகரன் கடந்த 2011-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து டி.டி.வி.தினகரன் நீக்கப்பட்டார். இந்நிலையில் டி.டி.வி.தினகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோரை சசிகலா கடந்த 15-ம் தேதி அன்று கட்சியில் மீண்டும் சேர்த்தார். சமீப காலத்தில் அதிமுகவில் துணைப் பொதுச்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் : முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் : முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 24, 2017, சென்னை  : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெடங்கி வைக்கிறார். இதற்கான நிகழ்ச்சி சென்னை தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த தினத்தை ஒட்டி, 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும்

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவுப்படி தமிழகத்தில் இன்று முதல் 500 மதுக்கடைகள் மூடல்

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவுப்படி தமிழகத்தில் இன்று முதல் 500 மதுக்கடைகள் மூடல்

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 24, 2017, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் 2வது கட்டமாக 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் 63 பார்கள் இன்று முதல் மூடப்படும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20ம் தேதி ஆட்சிப் பொறுப்பேற்ற உடன், 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு முதல் கையெழுத்திட்டார். ஏற்கனவே 500 கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மேலும் 500 கடைகளை மூடுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சென்னை மண்டலத்தில்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாட்டம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாட்டம்

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 24, 2017, சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69 வது பிறந்தநாளை கொண்டாட அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா 69வது பிறந்த நாள் சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது.