மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.நடராஜூக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.நடராஜூக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

வியாழக்கிழமை, பிப்ரவரி 23, 2017, சென்னை : மயிலாப்பூர் தொகுதியில் குறைகள் கேட்க சென்ற எம்எல்ஏ ஆர்.நடராஜூக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த நடராஜ் தனது தொகுதிக்குட்பட்ட பிஎம் தர்கா, லாயிட்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். அப்போது மயிலாப்பூர் தொகுதி பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ ஆர்.நடராஜூ, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளுக்கு செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்

நலத்திட்ட உதவிகளை வழங்கி, மறைந்த முதலமைச்சர் அம்மாவின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது என அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் இளைஞரணி தீர்மானம்

நலத்திட்ட உதவிகளை வழங்கி, மறைந்த முதலமைச்சர் அம்மாவின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது என அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் இளைஞரணி தீர்மானம்

வியாழக்கிழமை, பிப்ரவரி 23, 2017, சென்னை : தமிழகம் முழுவதும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடுவது என அ.இ.அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் இளைஞரணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. புரட்சி தலைவி அம்மாவின் 69-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில்,சென்னை ராயபேட்டையில் உள்ள அ.இ.அ.தி.மு.க தலைமை கழகத்தில்நடைபெற்ற கூட்டத்தில், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் திரு.என்.ஆர்.சிவபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,

அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

வியாழக்கிழமை, பிப்ரவரி 23, 2017, சென்னை : 7-வது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பது தொடர்பான பரிந்துரைக்குழுவை அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டஅறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசுப் பணியாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன்,

விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகை 2,247 கோடி ரூபாய் அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு தமிழக விவசாயிகள் நன்றி

விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகை 2,247 கோடி ரூபாய் அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு தமிழக விவசாயிகள் நன்றி

வியாழக்கிழமை, பிப்ரவரி 23, 2017, சென்னை : விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத் தொகை அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர். தமிழகத்தில் வறட்சி நிலவரத்தை அடுத்து, விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக 2,247 கோடி ரூபாய் ஒதுக்கி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி உத்தரவிட்டார். இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், தமிழக விவசாயிகள் சங்கத்தினர் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமியை இன்று சந்தித்து நன்றி தெரிவித்தனர். சென்னை

தமிழகத்து கடைகளில் கோக், பெப்சி விற்பனை இல்லை : வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி

தமிழகத்து கடைகளில் கோக், பெப்சி விற்பனை இல்லை : வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி

வியாழக்கிழமை, பிப்ரவரி 23, 2017, சென்னை : மார்ச் 1 -ஆம் தேதிக்குள் தமிழகத்தில் எந்தக் கடைகளிலும் பெப்சி, கோக் விற்கப்படாது என நம்புவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வெளிநாட்டு குளிர்பானங்களை குடிக்கமாட்டோம் என மாணவர்கள், இளைஞர்கள் சூளுரைத்தனர். இதைத்தொடர்ந்து மார்ச் 1 -ஆம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் ஆகிய குளிர்பானங்களை விற்கமாட்டோம் என தமிழ்நாடு