கொலை செய்யப்பட்ட சிறுமி ரித்திகா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

கொலை செய்யப்பட்ட சிறுமி ரித்திகா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 21, 2017, சென்னை : நகைக்காக படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரித்திகாவின் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் வட்டம், எர்ணாவூர் கிராமம், சுனாமி குடியிருப்பு எண் -3ல் வசித்து வரும் பழனி என்பவரின் மகள் சிறுமி ரித்திகா என்பவரின் சடலம் 19.2.2017 அன்று திருவொற்றியூர் குப்பை மேட்டில் காவல்

500 மதுக்கடைகள் மூடல் உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

500 மதுக்கடைகள் மூடல் உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 21, 2017, சென்னை ; மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் ,ஏழை கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு நிதியாக ரூ.18,000 வழங்கப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு கூடுதல் உதவித்தொகை வழங்கப்படும், 50 சதவீத மானியத்தில் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட ஐந்து திட்டங்களுக்கான கோப்புகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கையெழுத்திட்டார். தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி முறைப்படி நேற்று பகல் 12.30 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.  முன்னதாக அவரை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட

சட்டையை தானே கிழித்து கொண்டு நாடகம் ஆடுகிறார் ஸ்டாலின் : எம்.பி.நவநீதகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சட்டையை தானே கிழித்து கொண்டு நாடகம் ஆடுகிறார் ஸ்டாலின் : எம்.பி.நவநீதகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை : தனக்கு தானே சட்டையை கிழித்து கொண்டு நாடகம் ஆடுகிறார் என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மீது அ.தி.மு.க எம்.பி.நவநீதகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார் அ.தி.மு.க மாநிலங்களவை குழுத்தலைவர் நவநீதக்கிருஷ்ணன். சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்றத்தில் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த தீர்மானத்தில் அமைதியாக இருந்து வாக்குகளை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டதால் இரண்டு முறை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது,. சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களுக்கும்

தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த அறிக்கையை கேட்டார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த அறிக்கையை கேட்டார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்

சென்னை :  தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த அமளி குறித்து பேரவைச் செயலர் ஜமாலுதீனிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கேட்டுள்ளார். அதிமுக எம்எல்ஏக்களால் சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி கடந்த 14-ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அவர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். எடப்பாடி பழனி சாமியை, கடந்த 16-ஆம் தேதி ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அன்று மாலையே முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்கள் 30

நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும் : ஆளுநருக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும் : ஆளுநருக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சென்னை : சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் இன்றி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை ஏற்கக் கூடாது என ஆளுநரை நேற்று சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சிறப்பு சட்டப் பேரவை கூட்டம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்து திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். நாற்காலிகள் வீச்சு, பேப்பர் கிழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து, திமுக எம்எல்ஏக்களை சபைக் காவலர்கள் வெளியேற்றினர்.இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் இல்லாமலே

ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

திங்கட்கிழமை, பிப்ரவரி 20, 2017, சென்னை : ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று சந்தித்தார். அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது அரசு வெற்றி பெற்றதை முறைப்படி ஆளுநரிடம் அவர் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப் பேரவையில் சனிக்கிழமை தனது அமைச்சரவை மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானத்தை தாக்கல் செய்தபோது சட்டப்பேரவையில் பெரும் ரகளை ஏற்பட்டது. இதனால், இரு முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட