மக்களின் குடிநீர் பிரச்னைக்கு முன்னுரிமை அளிப்போம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மக்களின் குடிநீர் பிரச்னைக்கு முன்னுரிமை அளிப்போம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஞாயிறு, பிப்ரவரி 19, 2017, மக்களின் குடிநீர் பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதி, எம்ஜிஆர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா எடுத்த சபதம் நிறைவேறியுள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சி மலர்ந்தது. மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் கனவுகளை நிறைவேற்றுவதே அரசின் குறிக்கோள்.அதிமுக அரசை

சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக படுகொலை : தீபா பேட்டி

சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக படுகொலை : தீபா பேட்டி

ஞாயிறு, பிப்ரவரி 19, 2017, சென்னை : சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக படுகொலை என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். மேலும் ஒரு குறிப்பிட்ட குடும்பம் ஆட்சியை கைப்பற்றிவிடக் கூடாது எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஏற்பட்ட அமளியினால் 2 முறை பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 3 வது முறையாக 3 மணிக்கு அவை மீண்டும் தொடங்குவதற்குள் திமுகவினரை

அம்மா ஜெயலலிதா ஒதுக்கி வைத்த குடும்பத்தின் ஆட்சி வெற்றி பெற்றுள்ளது,தர்மம் மீண்டும் வெல்லும் : ஓ.பன்னீர்செல்வம்

அம்மா ஜெயலலிதா ஒதுக்கி வைத்த குடும்பத்தின் ஆட்சி வெற்றி பெற்றுள்ளது,தர்மம் மீண்டும் வெல்லும் : ஓ.பன்னீர்செல்வம்

ஞாயிறு, பிப்ரவரி 19, 2017, சென்னை : எந்தக் குடும்பத்தை ஜெயலலிதா ஒதுக்கிவைத்தாரோ, அந்தக் குடும்பத்தின் ஆட்சி தற்போது வெற்றி பெற்றுள்ளது.தர்மம் வெல்லுவதற்கு மீண்டும் கால அவகாசம் உள்ளது. உறுதியாகச் சொல்லுகிறேன். இறுதியில் தருமமே வெல்லும். என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறியதாவது;- தர்மம் வெல்லுவதற்கு மீண்டும் கால அவகாசம் உள்ளது. உறுதியாகச் சொல்லுகிறேன். இறுதியில் தருமமே வெல்லும்.15 நாள்கள் அடைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களை தொகுதிக்கு

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி

ஞாயிறு, பிப்ரவரி 19, 2017, சென்னை  :  தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் மூலம்   வாக்கெடுப்பில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.  முன்னதாக சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இருமுறை சபை ஒத்தி வைக்கப்பட்டது. . இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.  தமிழக சட்டப்பேரவை  நேற்றுக் காலை 11 மணிக்கு

அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு விவகாரம் : சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு விவகாரம் : சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சனி, பிப்ரவரி 18, 2017, சென்னை :அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வுக்கு எதிராக தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயன் குழுவினர் அளித்துள்ள மனுவுக்கு வரும் 28-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று வி.கே.சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நேற்று  நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயன் தலைமையில் அதிமுக (ஓ.பன்னீர்செல்வம் அணி) எம்.பி.க்கள் 11

தமிழக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : வெற்றி யாருக்கு?

தமிழக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : வெற்றி யாருக்கு?

சனி, பிப்ரவரி 18, 2017, சென்னை : புதிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை  வாக்கெடுப்பு  இன்று தமிழக சட்டசபையில் நடைபெறுகிறது. இந்த  நம்பிக்கை தீர்மானத்தில் பங்கேற்று வாக்களிக்குமாறு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென  சபாநாயகரிடம் முன்னாள் அமைச்சர் மா.பா .பாண்டியராஜன் உள்ளிட்ட ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் முதல்வராக பதவியேற்குமாறு கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் விடுத்த அழைப்பினை