புதிய முதல்வர் பதவியேற்பு முடிந்த சில மணிநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வீடு மீது தாக்குதல்

புதிய முதல்வர் பதவியேற்பு முடிந்த சில மணிநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வீடு மீது தாக்குதல்

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 17, 2017, சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் காவலர் உட்பட மூன்று பேர் மண்டை உடைந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்து வந்தார். பின்னர் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள

மக்கள் விரோத சசிகலா குடும்பத்தின் ஆட்சியை அகற்றும் வரை தர்ம யுத்தம் தொடரும் : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் சபதம்

மக்கள் விரோத சசிகலா குடும்பத்தின் ஆட்சியை அகற்றும் வரை தர்ம யுத்தம் தொடரும் : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் சபதம்

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 17, 2017, சென்னை: சசிகலா குடும்பம் தான் தற்போது ஆட்சி பதவியில் அமர்ந்துள்ளது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சசிகலா குடும்பத்தின் ஆட்சியை நிக்கி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை தமிழகத்தில் மீட்டெடுக்கும்வரை எங்களது தர்மயுத்தம் தொடரும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு நேற்று இரவு 7.45 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் இ.மதுசூதனன், கே.பி.முனுசாமி, முன்னாள் பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் உள்ளிட்டோர் வருகை

புதிய முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி : சட்ட பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

புதிய முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி : சட்ட பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 17, 2017, சென்னை : தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். சென்னை, கிண்டியில் நேற்று மாலை நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், 30 அமைச்சர்களுக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார். புதிய அமைச்சரவையில் கே.ஏ.செங்கோட்டையன் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்சியை குடும்ப சொத்தாக மாற்றியிருக்கிறார் சசிகலா : கருப்பசாமி பாண்டியன் குற்றச்சாட்டு

கட்சியை குடும்ப சொத்தாக மாற்றியிருக்கிறார் சசிகலா : கருப்பசாமி பாண்டியன் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, பிப்ரவரி 16, 2017, சென்னை : அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமித்ததை எதிர்த்து அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் கருப்பசாமி பாண்டியன். சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குற்றவாளி என்று 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.இதனையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி தினகரனை நியமித்து சசிகலா உத்தரவிட்டார். தினகரனை கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 2011-ம்

அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமனம் : சட்ட விரோதமானது என மதுசூதனன் குற்றச்சாட்டு

அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமனம் : சட்ட விரோதமானது என மதுசூதனன் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, பிப்ரவரி 16, 2017, அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது என்று மசூதனன் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குற்றவாளி என்று 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.இதனையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டார் தினகரன். அதனைத் தொடர்ந்து நேற்று அவரை கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமித்து சசிகலா உத்தரவிட்டார். தினகரனை கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 2011-ம் ஆண்டு

கவர்னர் வித்யாசாகர் ராவுடன் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மீண்டும் சந்திப்பு

கவர்னர் வித்யாசாகர் ராவுடன் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மீண்டும் சந்திப்பு

வியாழக்கிழமை, பிப்ரவரி 16, 2017, சென்னை : முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் சென்னை ராஜ்பவனில் நேற்று மீண்டும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர். நேற்றிரவு 8.45 மணிக்கு பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநரை சந்தித்தார். ஆளுநரிடம் ”பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்” என்ற கோரிக்கையை ஓபிஎஸ் முன்வைத்தார். அதற்குப் பிறகு ஆளுநர் மாளிகையில் இருந்து ஓபிஎஸ் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், விரைவில் ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்வார் என்று

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூரு சிறையில் அடைப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூரு சிறையில் அடைப்பு

வியாழக்கிழமை, பிப்ரவரி 16, 2017, பெங்களூரு : சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை இறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நேற்று மாலை சரணடைந்தனர்.இவர்கள் மூவரையும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு சிறையில் அடைத்து நீதிபதி அஸ்வத் நாராயணா உத்தரவிட்டார். வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து