சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் இன்று காலை 10 : 30 மணிக்கு தீர்ப்பு

சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் இன்று காலை 10 : 30 மணிக்கு  தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 14, 2017, சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்டோர் தொடர்புடைய சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று காலை 10 : 30 மணிக்கு வழங்க உள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற இணையதளத்தில் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைப் பட்டியலில் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு

700 கி.மீ. கடந்து வந்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த 80 வயது மூதாட்டி

700 கி.மீ. கடந்து வந்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த 80 வயது மூதாட்டி

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 14, 2017, சென்னை: முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க 700 கி.மீட்டர் தொலைவைக் கடந்து வந்த 80 வயது மூதாட்டியின் செயல் அங்கே இருந்த அனைவரையும்  நெகிழவைத்தது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு80). இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை வள்ளியூரில் இருந்து ரயிலில் புறப்பட்டு, சென்னைக்கு திங்கள்கிழமை காலை அடைந்தார்.அங்கிருந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்தின் வளாகத்துக்கு வந்தார். அவரைப் பார்க்க பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஆனாலும் உணவு சாப்பிடாமல் நீண்ட நேரமாக

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை வெட்டுவதாக கூறிய வி.பி.கலைராஜன் மீது வழக்குப்பதிவு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை வெட்டுவதாக கூறிய வி.பி.கலைராஜன் மீது வழக்குப்பதிவு

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 14, 2017, சென்னை : முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை வெட்டுவதாக கூறிய அதிமுக தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் பிப்ரவரி 9-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.கலைராஜன், ‘அ.தி.மு.க. மீது கை வைத்தால் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு உடம்பில் கை இருக்காது’ என்று மிரட்டும் தொனியில் பேட்டி அளித்தார்.இதையடுத்து, கலைராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அ.தி.மு.க-வின் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மாணவரணி இணைச் செயலரும்

தலைமைச் செயலகத்திற்கு வந்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் : அதிகாரிகளுடன் 7 மணி நேரம் ஆலோசனை

தலைமைச் செயலகத்திற்கு வந்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் : அதிகாரிகளுடன் 7 மணி நேரம் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 14, 2017, சென்னை  : தலைமைச் செயலகத்துக்கு நேற்று வந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏழு மணி நேரம் இருந்தார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், காவல் துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்துக்கு வந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலக சங்கத்தினரிடம் அவர் ஆலோசனை நடத்தினார். மேலும், மரணம் அடைந்த சிறுமி ஹாசினி குடும்பத்துக்கு நிவாரண நிதி உதவியை அறிவித்தார்.சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து உயரதிகாரிகளிடம்

‘‘சட்டசபை கூடும் போது பெரும்பான்மையை நிரூபிப்பேன்’’ ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

‘‘சட்டசபை கூடும் போது பெரும்பான்மையை நிரூபிப்பேன்’’ ; முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

திங்கட்கிழமை, பிப்ரவரி 13, 2017, சென்னை : ‘‘சட்டசபை கூடும்போது பெரும்பான்மையை நிரூபிப்பேன்’’, என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:– கேள்வி:– சசிகலாவுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்களே? பதில்:– நான் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். எங்களிடம் உள்ள எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் சுதந்திரமாக வெளியே உலா