முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடிகர் ராமராஜன் ஆதரவு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நடிகர் ராமராஜன் ஆதரவு

திங்கட்கிழமை, பிப்ரவரி 13, 2017, சென்னை ; எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரும், அதிமுக பிரமுகருமான ராமராஜன், நடிகர்கள் அருண்பாண்டியன், தியாகு ஆகியோர் நேற்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தனர். பன்னீர் செல்வம் அணியில் வந்து இணைந்த நடிகர் ராமராஜன் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது: – ஓ.பி.எஸ். என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?. ஓயாமல் பொறுப்பாக செயல்படுபவர் என்பது தான் அர்த்தம். பன்னீர்செல்வத்தின் ஆட்சியில் குறை ஒன்றும் இல்லை. அம்மா அம்மாவால் அடையாளம்

‘அ.தி.மு.க.வுக்கு பிரச்சினை வந்தால் உயிரை கொடுத்து காப்பேன்’ ; எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா பேச்சு

‘அ.தி.மு.க.வுக்கு பிரச்சினை வந்தால் உயிரை கொடுத்து காப்பேன்’ ; எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா பேச்சு

திங்கட்கிழமை, பிப்ரவரி 13, 2017, சென்னை : கட்சிக்கு பிரச்சினை வந்தால் உயிரை கொடுத்து காப்பேன் என்றும்,அ.தி.மு.க.வை உடைக்க முயற்சி நடப்பதாகவும், கட்சிக்கு பிரச்சினை வந்தால் உயிரை கொடுத்து காப்பேன் என்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா பேசினார். கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூரில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் சசிகலா நேற்று பேசியதாவது:- நான் இந்த இயக்கத்தை நடத்த முன் வந்ததுமே, உங்களுக்கு தெரியாதது இல்லை. அந்த அளவுக்கு நம் எதிரிகள் வலை பின்னுகிறார்கள்.

முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மேலும் 6 எம்.பிக்கள் ஆதரவு

முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மேலும் 6 எம்.பிக்கள் ஆதரவு

திங்கட்கிழமை, பிப்ரவரி 13, 2017, சென்னை : அ.தி.மு.க.வைச் சேர்ந்த மேலும் 6 எம்.பி.க்கள் நேற்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து இவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்து அவரை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே சட்டப்பேரவை உறுப்பினர்கள் 7 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று காலை அ.தி.மு.க எம்.பி.க்கள் 3 பேர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். வேலூர் எம்பி செங்குட்டுவன், தூத்துக்குடி

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இதுவரை 4 எம்.பிக்கள் நேரில் ஆதரவு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இதுவரை 4 எம்.பிக்கள் நேரில் ஆதரவு

ஞாயிறு, பிப்ரவரி 12, 2017, சென்னை : கிருஷ்ணகிரி எம்.பி அசோக்குமார், நாமக்கல் எம்.பி பி.ஆர்.சுந்தரம் உள்ளிட்ட 4 எம்.பிக்கள் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளனர். முதல்வர் பதவிக்கு சசிகலாவை அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அறிவித்ததிலிருந்தே அக்கட்சியில் பெரும் கொந்தளிப்பு நிலவி வருகிறது. முதல்வர் பன்னீர்செல்வம் தன்னிடம் கட்டாய ராஜினாமா பெறப்பட்டதாக அறிவித்தது முதல் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. முதற்கட்டமாக 4 எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீடு நினைவு இல்லமாக மாற்றபடும் : முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீடு நினைவு இல்லமாக மாற்றபடும் : முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஞாயிறு, பிப்ரவரி 12, 2017, சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லம் எனப்படும் பங்களாவில் வசித்து வந்தார். திரை உலகில் அவர் புகழ் பெற்று இருந்த போது தனது தாயார் சந்தியாவுடன் சேர்ந்து அந்த பங்களாவை கட்டினார். இதற்கிடையே ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக ஆக்க வேண்டும் என்று

எம்.எல்.ஏ.க்களுடன் சந்திக்க உடனே நேரம் ஒதுக்கக் கோரி கவர்னருக்கு சசிகலா மீண்டும் கடிதம்

எம்.எல்.ஏ.க்களுடன் சந்திக்க உடனே நேரம் ஒதுக்கக் கோரி கவர்னருக்கு சசிகலா மீண்டும் கடிதம்

ஞாயிறு, பிப்ரவரி 12, 2017, சென்னை  ; தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஏதுவாக, தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கக் கோரி, பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நேற்று கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி நடந்தது. அதில், என்னை அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை இணைத்து, உங்களைச் சந்திக்க நேரம் கேட்டு 5 மற்றும் 7