பாம்பாற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

பாம்பாற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, பிப்ரவரி 02, 2017, சென்னை ; பாம்பாற்றின் குறுக்கே  அணையை கேரள அரசு மும்முரமாக கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் மூலம்  வலியுறுத்தியுள்ளார். அமராவதியின் முக்கிய கிளை நதியான பாம்பாற்றின் குறுக்கே  அணையை கட்ட கேரள அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் அமராவதி ஆற்றுப்பாசனம் பாதிக்கப்படுவதோடு மக்களுக்கு குடிநீர் ஆதாரமும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாம்பாற்றின் குறுக்கே பத்திசேரி என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கேரள அரசானது

நீட் தேர்வின்றி மருத்துவ படிப்பில் சேர்வதற்கான மசோதா ; தமிழக சட்டபேரவையில் நிறைவேறியது

நீட் தேர்வின்றி மருத்துவ படிப்பில் சேர்வதற்கான மசோதா ; தமிழக சட்டபேரவையில் நிறைவேறியது

வியாழக்கிழமை, பிப்ரவரி 02, 2017, சென்னை : நீட் தேர்வின்றி மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான மசோதா உள்ளிட்ட 12 சட்டமுன்வடிவுகள் தமிழக சட்டபேரவையில் நேற்று ஒரே நாளில் ஆய்வுக்கு வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தமிழக சட்டசபை கடந்த 23-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. 27 மற்றும் 30ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று முதல்வர் பன்னீர்செல்வம் உறுப்பினர்களுக்கு பதிலளித்தார். நீட் தேர்வுக்கு பதிலாக ப்ளஸ்

பனிச்சரிவில் சிக்கி வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர்களுக்கு, அமைச்சர்கள் அஞ்சலி ; பெற்றோர்களிடம் நிதியுதவி வழங்கி ஆறுதல்

பனிச்சரிவில் சிக்கி வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர்களுக்கு, அமைச்சர்கள் அஞ்சலி ; பெற்றோர்களிடம் நிதியுதவி வழங்கி ஆறுதல்

புதன்கிழமை, பிப்ரவரி 01, 2017, ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த கிராமங்களுக்கு எடுத்துச் வரப்பட்டன. வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு, தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தியதுடன், 20 லட்சம் ரூபாய்கான காசோலையையும், பெற்றோர்களிடம் வழங்கி ஆறுதல் கூறினர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன், ஜம்மு-காஷ்மீரில் உள்ள குரேஸ் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். இவரது உடல்

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

புதன்கிழமை, பிப்ரவரி 01, 2017, சென்னை ; தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உரிய வகையில் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியது: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை புதன்கிழமை (பிப்ரவரி

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து வகையிலும் உதவிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நன்றி

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து வகையிலும் உதவிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  நன்றி

புதன்கிழமை, பிப்ரவரி 01, 2017, சென்னை ; ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த ஏதுவாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டம் 213-வது பிரிவின்படி குடியரசுத் தலைவரின் வழிகாட்டுதல்கள் பெறப்பட்ட பின்னர் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.இந்த அவசரச் சட்டத்துக்குப் பதிலாக, சட்டப் பேரவையில் கடந்த 23-இல் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.இதைத் தொடர்ந்து, ஆளுநர் மூலமாக

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நன்றி

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள்  நன்றி

செவ்வாய்க்கிழமை, ஜனவரி 31, 2017, சென்னை ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று, அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சந்தித்து, தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொண்டனர். தலைமைச் செயலகத்தில் இன்று,முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வத்தை, அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் திரு. கே. பாலகிருஷ்ணன், திரு. எஸ். குணசேகரன், பொதுச் செயலாளர்கள் திரு. பெ. சண்முகம், திரு.

கைதான மாணவர்கள் 36 பேர் விடுவிப்பு, தவறு செய்த போலீஸ் மீது கடும் நடவடிக்கை ; முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு

கைதான மாணவர்கள் 36 பேர் விடுவிப்பு, தவறு செய்த போலீஸ் மீது கடும் நடவடிக்கை ; முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, ஜனவரி 31, 2017, சென்னை ; ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட 36 மாணவர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110ன் கீழ் உரையாற்றிய முதல்வர் பன்னீர்செல்வம், சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட 36 மாணவர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை