தமிழக அரசு மாண்புமிகு அம்மா ஜெயலலிதா வழியில் செயல்படும் ; முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சட்டசபையில் உறுதி

தமிழக அரசு மாண்புமிகு அம்மா ஜெயலலிதா வழியில் செயல்படும் ; முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சட்டசபையில் உறுதி

வெள்ளி, ஜனவரி 27, 2017, தமிழக அரசு மறைந்த மாண்புமிகு அம்மா ஜெயலலிதா அவர்கள்  வழியில் செயல்படும் என முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சட்டசபையில் உறுதி பட தெரிவித்தார்  தமிழக சட்டப்பேரவையில் இன்று, ஆளுனர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றபோது, அதில் பேசிய முதலமைச்சர் திரு. ஒ.பன்னீர்செல்வம், காவேரி நதிநீர் விவகாரத்தில் சட்டப்போராட்டம் நடத்தி, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளிவரச் செய்தவர் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா என்று புகழாரம் சூட்டினார். அம்மா

ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணம் தி.மு.க.; ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணம் தி.மு.க.; ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

வெள்ளி, ஜனவரி 27, 2017, ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணம் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் என்றும், ஜல்லிக்கட்டு குறித்து பேச தி.மு.க.வுக்கு அருகதை இல்லை என்றும் வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர் ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணம் தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகள் தான் என்றும், இதைப்பற்றி பேச தி.மு.க. மற்றும் அதன் செயல் தலைவருக்கு அருகதையில்லை என்றும் தெரிவித்தார்.

குடியரசு தின விழாவில் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்

குடியரசு தின விழாவில் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்

வெள்ளி, ஜனவரி 27, 2017, சென்னையில் நேற்று  நடைபெற்ற குடியரசு தின விழாவில், வீரதீர செயல்களில் ஈடுபட்டோருக்கு அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கி கவுரவித்தார். சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நேற்று  நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.இதையடுத்து, வீரதீர செயல்களில் ஈடுபட்டோருக்கு அண்ணா பதக்கங்களை முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார். சென்னையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிங்கத்தான் மாரத்தான் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இதில் கூவம்

உயிர் நீத்த முப்படை வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

உயிர் நீத்த முப்படை வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

வெள்ளி, ஜனவரி 27, 2017, சென்னை ; குடியரசு தினத்தையொட்டி உயிர் நீத்த முப்படை வீரர்களுக்கு சென்னையில் உள்ள போர் நினைவிடத்தில் நேற்று முதல்வர் பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். 68-வது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி உயிர் நீத்த முப்படை வீரர்களுக்கு சென்னையில் உள்ள போர் நினைவிடத்தில் முதல்வர் பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். சென்னை போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அவர் மரியாதை செலுத்தினார்.

68-வது வண்ணமிகு குடியரசு தின விழாவில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தேசியக்கொடியை ஏற்றினார்

68-வது வண்ணமிகு குடியரசு தின விழாவில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தேசியக்கொடியை ஏற்றினார்

வியாழன், ஜனவரி 26, 2017, சென்னை ; 68-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். நாட்டின் 68-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றினார். கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்துக்குச் சென்று மலர்வளையம் வைத்து, போரில் மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விழா நடைபெற்ற காந்தி

இன்று குடியரசு தின விழா ; தேசியக் கொடி ஏற்றுகிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

இன்று குடியரசு தின விழா ; தேசியக் கொடி ஏற்றுகிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

வியாழக்கிழமை, ஜனவரி 26, 2017, குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் இன்று நடக்கும் விழாவில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, விருது களை வழங்குகிறார். இந்தியாவின் 68-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலை காந்தி சிலை அருகில் இன்று காலை கோலாகல விழா நடக்கிறது. இதில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின்