கேரள அரசு பவானி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி பிரதமருக்கு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம்

கேரள அரசு பவானி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி பிரதமருக்கு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம்

புதன்கிழமை, ஜனவரி 25, 2017, சென்னை ; பவானி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்த கேரள அரசுக்கு உத்தரவிடவேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:– ”காவிரியின் கிளை நதியான பவானியில், கேரள அரசு 6 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் காவிரி படுகையைச் சேர்ந்த, விவசாயத்தக்கும் குடிநீருக்கும் பவானியை நம்பியுள்ள

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் புகழாரம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் புகழாரம்

புதன்கிழமை, ஜனவரி 25, 2017, சென்னை : மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவுக்கு தமிழக சட்டமன்றப் பேரவை நேற்று புகழஞ்சலி செலுத்தியது. மாண்புமிகு அம்மாவின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானத்தை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அனைத்துக் கட்சி உறுப்பினர்களும், அம்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துப் பேசி புகழாரம் சூட்டினர். தமிழக சட்டசபையில் நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை முதல்வர் பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். இதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சித்தலைவர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதற்கும் அஞ்சாதவர்,விடா முயற்சியும், போராட்டக் குணமும் மிக்கவர் ; சட்டசபை இரங்கல் தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் புகழாரம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதற்கும் அஞ்சாதவர்,விடா முயற்சியும், போராட்டக் குணமும் மிக்கவர் ; சட்டசபை இரங்கல் தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் புகழாரம்

செவ்வாய், ஜனவரி 24,2017, தமிழக சட்டப்பேரவையில் இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார்.தனது வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் ஜெயலலிதா. இந்த உலகில் இருந்து மறைந்தாலும், எங்களின் இதயத்தில் இருந்து தமிழகத்தை வழிநடத்தி செல்வார். சவால்களை வென்று சரித்திரம் படைத்தவர் ஜெயலலிதா. மாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்தவர். தமிழக சட்டசபையில் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றவர் எனக்கூறினார். இதைத்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தில் மரம் நடும் பெருந்திட்டம் : ஆளுநர் வித்யாசாகர் அறிவிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தில் மரம் நடும் பெருந்திட்டம் : ஆளுநர் வித்யாசாகர் அறிவிப்பு

செவ்வாய், ஜனவரி 24,2017, சென்னை; மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி, மரம் நடும் பெருந்திட்டம் தொடங்கப்படும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார். சட்டப் பேரவையில் நேற்று  ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆற்றிய உரையின் விவரம்:- 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் பெய்த பெருமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பிலிருந்து சிறப்பாகவும், வேகமாகவும் தமிழகம் மீண்டு வந்தது. இந்த நிலையில், வர்தா புயலின் கோர தாண்டவத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வெற்றிகரமாக மீண்டு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் : பேரவைத் தலைவர் தனபால் அறிவிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இன்று சட்டப்பேரவையில்  இரங்கல் : பேரவைத் தலைவர் தனபால் அறிவிப்பு

செவ்வாய், ஜனவரி 24,2017, தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆளுநர் உரை முடிந்ததும் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. அதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடியது. இதில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துரை முருகன், பொன்முடி, காங்கிரஸ் சார்பில் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபுபக்கர் உள்ளிட்டோர்

ஜல்லிக்கட்டுக்கு தடைவரக் காரணம் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசுதான் : தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்

ஜல்லிக்கட்டுக்கு தடைவரக் காரணம் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசுதான் : தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்

திங்கட்கிழமை, ஜனவரி 23,2017, பொது இடங்களில் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளைகளையும் சேர்த்து, ஜல்லிக்கட்டுக்கு தடைவரக் காரணமாக இருந்தது முந்தைய மத்திய காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசுதான் என தமிழக சட்டப்பேரவையில் இன்று, எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் ஒப்புக்கொண்டார். தமிழக சட்டப்பேரவையில் இன்று,சட்ட மசோதாவை ஆதரித்து சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசும் போது, ‘‘புதிய ஆட்சிப் பொறுப் பேற்றதும் நீங்கள் ஏன் துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை?’’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த

ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் ; சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்

ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் ; சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்

திங்கட்கிழமை, ஜனவரி 23,2017, சென்னை : தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்ய, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். சட்ட முன்வடிவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன்மொழிய, சபாநாயகர் தனபால், ஆய்வுக்கு எடுத்துக்