காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் இளையராஜா குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் இளையராஜா குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆகஸ்ட் 14 , 2017 , திங்கட்கிழமை, சென்னை : ஜம்மு-காஷ்மீரில் வீரமரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜா குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், “ஜம்மு காஷ்மீர் மாநிலம், தெற்கு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், இந்திய நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 மகாரெஜிமெண்ட் ராணுவ வீரர், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், கண்டனி கிராமத்தைச்

கிருஷ்ண ஜெயந்தி திருநாள் : ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தி திருநாள் : ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

ஆகஸ்ட் 14 , 2017 , திங்கட்கிழமை,  சென்னை : கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் ஓ.பன்னீர்செல்வம் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ‘கிருஷ்ண ஜெயந்தி’ வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- இரணியனை அழிக்க நரசிம்மனாகவும், ராவணனை அழிக்க ராமனாகவும், கம்சனை அழிக்க ஸ்ரீ கிருஷ்ணனாகவும் திருமால் அவதாரம் எடுத்தது ஆன்மிக வரலாறு. ஸ்ரீ கிருஷ்ணர் துரியோதனனை அழித்து தர்மத்தை நிலை நாட்டியது மகாபாரதம் கூறும் வீர வரலாறு. அந்த வரலாறுகளை உருவாக்கவும், அதர்மத்தை

அறம் தழைத்து அன்பும், அமைதியும் பெருகட்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

அறம் தழைத்து அன்பும், அமைதியும் பெருகட்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

ஆகஸ்ட் 14 , 2017 , திங்கட்கிழமை,  சென்னை : கிருஷ்ண ஜெயந்தியில் உலகமெல்லாம் அறம் தழைத்து அன்பும், அமைதியும், இனிமையும் பெருக வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ‘கிருஷ்ண ஜெயந்தி’ வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- காக்கும் கடவுள் எனப் போற்றப்படும் பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த திருநாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மனித

உடல் உறுப்புத்தானத்தில் தொடர்ந்து 2-வது முறையாக தமிழகம் முதலிடம் : கவர்னர் வித்யாசாகர் பாராட்டு

உடல் உறுப்புத்தானத்தில் தொடர்ந்து 2-வது முறையாக தமிழகம் முதலிடம் : கவர்னர் வித்யாசாகர் பாராட்டு

ஆகஸ்ட் 13 , 2017 ,ஞாயிற்றுக்கிழமை,  சென்னை : இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 2-வது முறையாக முதலிடம் பெற்று சாதனை படைத்து வரும் தமிழக மக்கள் நல்வாழ்வு துறைக்கு கவர்னர் வித்யாசாகர் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் உடல் உறுப்புதான விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு கவர்னர் வித்தியாசாகர் ராவ், உடல் உறுப்பு தானம் செய்த குடும்ப உறுப்பினர்களையும், மருத்துவர்களையும் கௌரவித்தார். அப்போது பேசிய கவர்னர் வித்யாசாகர்

தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

ஆகஸ்ட் 12 , 2017 ,சனிக்கிழமை, ஈரோடு : முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அனைத்து விதமான காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் என்று

டிடிவி தினகரன் அதிமுகவின் எந்த வித பதவியையும் வகிக்க முடியாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்

டிடிவி தினகரன் அதிமுகவின் எந்த வித பதவியையும் வகிக்க முடியாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்

ஆகஸ்ட் 11 , 2017 ,வெள்ளிக்கிழமை, சென்னை : டிடிவி தினகரன் அதிமுகவின் எந்த வித பதவியையும் சட்டத்திட்ட விதிகளின்படி வகிக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்துள்ள தீர்மானம் குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் அவரது வாழ்க்கையே அர்ப்பணித்து, வளர்க்கப்பட்டு இன்று இந்திய நாட்டின் 3-வது பேரியக்கமாக உருவெடுத்துள்ள அ.