விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ரூ.78 லட்சம் ஊக்கத்தொகை : முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ரூ.78 லட்சம் ஊக்கத்தொகை : முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

ஞாயிறு ,ஜனவரி 22,2017, ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களின் பயிற்சி யாளர்கள் மற்றும் சர்வதேச சதுரங்க போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ரூ.78 லட்சத்து 50 ஆயிரம் ஊக்கத் தொகையை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலக அளவிலும், தேசிய அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெறும் தமிழக வீரர்கள், அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் அரசு சார்பில் ஊக்கத் தொகை

ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தில்,ஒரே நாளில் மத்திய அமைச்சரவை, குடியரசுத் தலைவரின் கையெழுத்து ; பிரதமருக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நன்றி

ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தில்,ஒரே நாளில் மத்திய அமைச்சரவை, குடியரசுத் தலைவரின் கையெழுத்து ; பிரதமருக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நன்றி

ஞாயிறு ,ஜனவரி 22,2017, சென்னை: ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தில், மத்திய அரசும், குடியரசுத்தலைவரின் கையெழுத்தும் ஒரே நாளில் பெறப்பட்டதற்கு பிரதமருக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார்.ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்துக்கு, மத்திய அமைச்சகத்தைச் சேர்ந்த பல்வேறு துறை அமைச்சர்களும், குடியரசுத் தலைவரும் ஒரே நாளில் கையெழுத்திட்டுள்ளனர் என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது குறித்து ஓ. பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டார்.அதில், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதிலும், தமிழகத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதிலும், தன்னிகரில்லா தலைவராக விளங்கிய

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நான் நேரில் தொடங்கி வைப்பேன் ; முதல்வர் பன்னீர்செல்வம் உற்சாக அறிவிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நான் நேரில் தொடங்கி வைப்பேன் ; முதல்வர் பன்னீர்செல்வம் உற்சாக அறிவிப்பு

சனி, ஜனவரி 21,2017, சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நாளை காலை நான் நேரில் தொடங்கி வைப்பேன் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டுக்கான தடைகள் தகர்த்தெறியப்பட்டு தமிழர்களின் பண்பாடு காக்கப்படும் என நான் அளித்த வாக்குறுதியின்படி, ஜல்லிக்கட்டுக்கு எதிரான அமைப்புகளால் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு வர விடாமல் அடைக்கப்பட்ட காளைகள், வாடிவாசல் வழியே திறந்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு வீரர்களால் அணைக்கப்படும் நிகழ்வை நடத்திடுவது சாத்தியமாகியுள்ளது என்ற மகிழ்ச்சியை

புரட்சி என்ற சொல் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும் : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அரசியல் தலைவர்கள் புகழாரம்

புரட்சி என்ற சொல் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும் : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அரசியல் தலைவர்கள் புகழாரம்

சனி, ஜனவரி 21,2017, சென்னை:  புரட்சி என்ற அடைமொழியைப் பெறும் தகுதி எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ளது என எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் புகழாரம் சூட்டினர். எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பேசியது; எம்.ஜி.ஆர். கழக தலைவர் இராம.வீரப்பன்: இந்தியா முழுவதும் புகழ் பெற்ற நடிகர்கள் இருந்தார்கள். ஆனால், எம்.ஜி.ஆர். போன்று புகழ் பெற்றவர் யாரும் இல்லை. சென்னையில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பெயரில் ஒரு

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் : முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் : முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

வெள்ளி, ஜனவரி 20,2017, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியை நேற்று  சந்தித்துப் பேசினேன். தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இருப்பினும் இப்பிரச்சினையில் மாநில அரசின் முடிவுகளுக்கு

10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரிசுகள் வழங்கி பாராட்டு

10 ம் வகுப்பு மற்றும் 12 ம்  வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரிசுகள் வழங்கி பாராட்டு

வியாழன், ஜனவரி 19,2017, தமிழை முதன்மை பாடமாக கொண்டு பயின்று 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிப்பில் கடந்த ஆண்டில் மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரொக்கப் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வி, சமூக நலம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம் ஆகிய 6 துறைகளால் நடத்தப்படும்

சட்ட ரீதியாக ஜல்லிக்கட்டுப் பிரச்னைக்கு தீர்வு காண சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை

சட்ட ரீதியாக ஜல்லிக்கட்டுப் பிரச்னைக்கு தீர்வு காண  சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை

வியாழன், ஜனவரி 19,2017, புது தில்லி: சட்ட ரீதியாக ஜல்லிக்கட்டுப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சட்ட நிபுணர்களை சந்தித்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். புது தில்லி சென்ற தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,  பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பிறகு சென்னை திரும்பாமல், பயணத்தை ரத்து செய்துவிட்டு தில்லி தமிழ்நாடு இல்லத்திலேயே அவர் தங்கியுள்ளார். அவரை சட்ட தலைமை வழக்குரைஞர் சுப்ரமணிய பிரசாத் சந்தித்துப் பேசினார். மேலும், சட்ட ரீதியாக ஜல்லிக்கட்டுப்