ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற பிரதமர் மோடியை, நேரில் சந்தித்து முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற பிரதமர் மோடியை, நேரில் சந்தித்து  முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

வியாழன், ஜனவரி 19,2017, புது தில்லி: ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அலங்காநல்லூர், சென்னையில் நடந்து வரும் போராட்டம் தற்போது மாநிலம் முழுவதும் பரவியுள்ளது. இந்த நிலையில், போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், அவசர சட்டம் தொடர்பாக பிரதமரை சந்திக்க இருப்பதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ; எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தீபா மலர்வளையம் வைத்து மரியாதை

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ; எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தீபா மலர்வளையம் வைத்து மரியாதை

செவ்வாய், ஜனவரி 17,2017, சென்னை ; மறைந்த முதல்வர்  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவு இல்லம் மற்றும் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தீபா, அதன் பின்னர், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ; எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்து காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ; எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்து காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா

செவ்வாய், ஜனவரி 17,2017, மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட சிலையை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா இன்று திறந்து வைத்தார்.பின்னர் ராமாவரம் தோட்ட இல்லத்தின் பின்புறம் உள்ள எம்.ஜி.ஆர். காது கேளாதோர்-வாய்பேச முடியாதோர் பள்ளிக்கு சென்றார். அந்த பள்ளிக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு, எம்ஜிஆர் சிலைக்கு மாலை

எம்.ஜி.ஆர் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்

எம்.ஜி.ஆர் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்

செவ்வாய், ஜனவரி 17,2017, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலை இன்று வெளியிடப்பட்டது.தலைமை அஞ்சல் அலுவலர் மூர்த்தி வெளியிட, அதனை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். தமிழக மக்களால் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டு வரும் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா இன்று தொடங்கி ஓராண்டுக்கு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அவரது சிலைக்கு கீழே அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழக அரசு பயணிக்கும் : முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழக அரசு பயணிக்கும் : முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்

ஞாயிறு, ஜனவரி 15,2017, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழக அரசு பயணிக்கும் என்று தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உருக்கமாக பேசினார். தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர்களுக்கு அரசு விருது அறிவிக்கப்பட்டது. பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களிலான இந்த விருதுகள் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன. விருது வழங்கும் விழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது ; தமிழ் மொழியிலுள்ள அற நூல்கள் யாவற்றிலும்

எம்.ஜி.ஆர். சிறப்பு தபால் தலை வெளியிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு சம்மதம்

எம்.ஜி.ஆர். சிறப்பு தபால் தலை வெளியிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு  மத்திய அரசு சம்மதம்

சனி,ஜனவரி 14,2017, புதுதில்லி: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்,ஜி.ஆர் அவர்களின் நூறாவது பிறந்த நாளை சிறப்பிக்கும் பொருட்டு சிறப்பு தபால் தலை வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.   தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் வரும் 17-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி மத்திய அரசு சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த