முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

சனி,ஜனவரி 14,2017, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது 66வது பிறந்தயாளை, மிக எளிமையாக தேனியிலுள்ள தனது வீட்டில் கொண்டாடினார். இதில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். பிறந்தநாளையொட்டி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, தமிழக மக்கள் சார்பில் பிரதமருக்கு சங்கராந்தி வாழ்த்தை முதல்வர் தெரிவித்தார். .  

பொங்கல் திருநாள் ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

பொங்கல் திருநாள் ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சனி,ஜனவரி 14,2017, தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும் என்று பொங்கல் திருநாளை முன்னிட்டு,முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறி ருப்பதாவது:- உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழவர் மகிழும் பெருநாளாம் பொங்கல் திருநாளில், உண்டி கொடுத்து, உயிர் கொடுக்கும் உலகின் உன்னத தொழிலான

தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் ; ஆந்திர முதல்வரிடம் தமிழக முதல்வர் நேரில் வலியுறுத்தல்

தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் ; ஆந்திர முதல்வரிடம்  தமிழக முதல்வர் நேரில் வலியுறுத்தல்

வெள்ளி,ஜனவரி 13,2017, தமிழகம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு வழங்கவேண்டிய தண்ணீரைத் திறந்துவிடமாறு கோரிக்கை விடுப்பதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திரத் தலைநகர் அமராவதிக்கு சென்று அங்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபுவை சந்தித்து வலியுறித்தினார்.தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் வழங்குவது குறித்து பரிசீலித்து சாதகமான முடிவு எடுக்க ஆந்திரம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;  வடகிழக்குப் பருவ மழை இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால், மாநிலம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.சென்னை, அதனைச் சுற்றியுள்ள

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : வரும் 17-ஆம் தேதி பொது விடுமுறை

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : வரும் 17-ஆம் தேதி பொது விடுமுறை

வியாழன்,ஜனவரி 12,2017, எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த தினமான ஜனவரி 17-ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை விட தமிழக அரசு முடி வெடுத்துள்ளதால், அதற் கான அறிவிப்பு நாளை  வெளியாகலாம் என தெரிகிறது. அதிமுகவின் நிறுவன ரும், மறைந்த முன் னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 100-வது பிறந்த தினம் வரும் 17-ம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிமுக சார்பில் இந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாட, அக்கட்சியின் பொதுச்செயலாளர்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

புதன்,ஜனவரி 11,2017, சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் என்று தமிழக முதல்வர்  ஓ .பன்னீர்செல்வம்   தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர்  ஓ .பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது; தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும். அதனை தமிழக அரசு உறுதி செய்யும். ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவிலிருந்து எள்ளளவும் பின்வாங்க மாட்டோம்.அதேநேரம் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்திற்கு எதிராக சட்டம் இயற்ற இயலாது. அவ்வாறு 2009-ல் திமுக கொண்டு வந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் ; முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் ; முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

புதன்,ஜனவரி 11,2017, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 1) 2015-2016 ஆம் ஆண்டிற்கு ‘சி’ மற்றும் ‘டி’ தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும். 2) ‘ஏ மற்றும் பி’ தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரண செய்தி கேட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வி.கே. சசிகலா நிதியுதவி வழங்கி ஆறுதல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரண செய்தி கேட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வி.கே. சசிகலா நிதியுதவி வழங்கி ஆறுதல்

செவ்வாய், ஜனவரி 10,2017, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  உயிரிழந்த செய்தியைக் கேட்டும், மரணம் அடைந்தவர்களில் முதற்கட்டமாக 166 பேரின் குடும்பத்தினருக்கு, தலா 3 லட்சம் ரூபாய் குடும்பநல நிதியுதவியும், தொடர்புடைய விபத்துக்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 2 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் என, 168 பேருக்கு 4 கோடியே 99 லட்சம் ரூபாய் நிதியுதவியை, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வழங்கி ஆறுதல் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்