தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை : பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை : பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

வெள்ளி,ஜனவரி 6,2017, இலங்கைச் சிறையில் உள்ள 61 தமிழக மீனவர்களையும், 116 படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாபட்டினம் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொழும்பு நகரில் கடந்த ஜனவரி 2-ம் தேதி அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஒரு சுமூகமான தீர்வு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி

வெள்ளி,ஜனவரி 6,2017, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக் கோரி மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தி தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி. கோஸ், ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு தெலுங்கு யுவ சக்தியின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஷ்ரவண் குமார், “ஜெயலலிதா மர்மமான

ஒட்டுமொத்த மாநிலத்தின் உரிமைக்காக குரல் கொடுத்த ஒரே தலைவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா : அரசியல் தலைவர்கள் புகழாரம்

ஒட்டுமொத்த மாநிலத்தின் உரிமைக்காக குரல் கொடுத்த ஒரே தலைவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா : அரசியல் தலைவர்கள்  புகழாரம்

வெள்ளி,ஜனவரி 6,2017, ஒட்டுமொத்த மாநிலத்தின் உரிமைக்காக குரல் கொடுத்த ஒப்பற்ற ஒரே தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டினர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவேந்தல் நிகழ்ச்சி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சன்மார்க்க செம்பொருட்டுணிவு உயராய்வு இருக்கை, திருமூலர் ஆய்விருக்கை, அம்மா அறக்கட்டளை ஆகியவை சார்பாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூறிய கருத்துகள்: பழ. நெடுமாறன்: பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 69

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 30-வது நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அமைதிப் பேரணி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 30-வது நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அமைதிப் பேரணி

வியாழன்,ஜனவரி 5,2017, தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 30-வது நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலங்கள் நடத்தப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமாகி இன்றுடன் 30 நாள் நிறைவடைகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். வண்ண மலர்களை தூவியும், மெழுகுவர்த்திகள் ஏற்றியும், மொட்டை அடித்தும் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். சென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 30வது நினைவுநாளையொட்டி அமைதி

ஜல்லிக்கட்டு தடைக்கு திமுக-காங்கிரஸே காரணம் ; அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டு தடைக்கு திமுக-காங்கிரஸே காரணம் ; அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா குற்றச்சாட்டு

வியாழன்,ஜனவரி 5,2017, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு திமுக-காங்கிரஸ் கட்சிகளே காரணம் என்றும் இந்தப் பிரச்னையில் உண்மைகளை குழிதோண்டி புதைத்து விட்டு மக்களை மு.க.ஸ்டாலின் திசை திருப்புகிறார் என்றும் அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில்: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஜல்லிக்கட்டுக்கான சட்டப் போராட்டத்தைப் பற்றிய முழு உண்மைகளையும் அவர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 2006-ஆம் ஆண்டு முதலே பல்வேறு வழக்குகள்

இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டம் : முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டம் :  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

வியாழன்,ஜனவரி 5,2017, பொங்கல் திருநாளை முன்னிட்டு 1 கோடியே 62 லட்சம் பேருக்கு இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- விவசாயத்தை அடுத்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக நெசவுத் தொழில் விளங்கி வருகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளிக்கவும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், 1983-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரால் இலவச வேட்டி, சேலை

பயிர் பாதிப்புக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு வழங்கும் ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

பயிர் பாதிப்புக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு வழங்கும் ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

புதன்,ஜனவரி 4,2017, சென்னை நீங்கலாக இதர மாவட்டங்களை நேரடி ஆய்வு செய்து, பயிர் நிலவரங்கள் மற்றும் வறட்சி நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளித்திட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அறிக்கை அளித்தவுடன், பயிர் பாதிப்புக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு வழங்கும் என்று உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;- ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசு இயற்கை இன்னல்களின் போது விவசாயப் பெருங்குடி

தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

செவ்வாய், ஜனவரி 3, 2017, ரேசன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு துண்டு உள்ளடக்கிய பொங்கல் சிறப்பு பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ரேசன் கார்டுதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் வறட்சி நிலவி வரும் இந்தச் சூழ்நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள்